Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

இலக்கியம், சமூகம், சைவம்

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

இப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது... மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார்... இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார். [மேலும்..»]

இலக்கியம், சமூகம், சைவம்

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1

காமச்சுவை நிறைந்துள்ள சீவக சிந்தாமணி என்ற ஒரு சமணகாவியத்தில் நாட்டரசன் மூழ்கியிருப்பதை விரும்பாத சேக்கிழார், மந்திரிக்கான உரிமையுடனும் நட்புரிமையுடனும் உரிய வேளையில் தட்டிக்கேட்டு திருத்தவேண்டிய நிலைக்கு ஆளானார்.... ஞானசம்பந்தப் பெருமானின் இளமை, துணிந்து நின்று சமணத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தாபிக்கிறது... பெண் மீது கொண்ட காதலும் அதற்கிடையில் ஏற்பட்ட பேதைமைமிக்க ஊடலையும் நீக்க, அந்தப் பரமனையே தன் மானிடக் காதலியிடம் தூதனுப்புகிறது அந்தச் சுந்தரரின் இளமை... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பொது

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்... இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்... மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்? [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள்

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது... காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது... ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம்

முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது. [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள்

போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்

போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்

தலைகளின்றி முண்டங்களாகிக் கிடக்கும் பனைமரங்கள், வெறிச்சோடிப்போன வீதிகள், மிதிவெடி அபாயம், சொல்லி நிற்கும் வீதியோரப் பதாகைகள், உடைந்தும் கூரையின்றியும் இருக்கும் வீடுகள்… கடற்பேரலையால் ஆலயத்தினை நெருங்கவே முடியவில்லை. பெரும்போர் அலையும் ஷெல் வீச்சுக்களும் அழிவுகளும்கூட ஆலயத்தை– அதன் புனிதத்தை– அழிக்க முடியவில்லை... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், வைணவம்

அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்

அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்

ஆழ்வார்கள் என்ற சொல்லிற்கு ‘எம்பெருமானின் கல்யாண(மங்கல) குணங்களில் ஆழுங்காற்பட்டவர்கள்’ என்று பொருள் கூறுவர். என்னைக் கொண்டு தன்னைப் பாடுவித்தான்’ என்று ஆழ்வார்கள் சொல்லுதலால் இப்பாசுரங்கள் ‘அருளிச்செயல்கள்’ என்றும் திவ்விய பிரபந்தம் என்றும் சேவித்துப் போற்றப்படுகின்றது.கடினமான ஒரு மதத்தை பாகவதமதமாக சுலபமான நெறியாக மாற்றிய சிறப்பும் ஆழ்வார்களைச் சார்ந்ததே. [மேலும்..»]

இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், இலக்கியம், சைவம்

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன். [மேலும்..»]

இலக்கியம், சைவம், வழிகாட்டிகள்

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று... மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்.. [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கலைகள், பண்டிகைகள், பொது

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு. [மேலும்..»]