Blog Archives

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கோயில்கள், சமூகம், பண்டிகைகள்

விநாயகர் நினைவுகள்

விநாயகர் நினைவுகள்

கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன. நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட பல கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது... பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார்... பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து... [மேலும்..»]

அரசியல், உணவு, சமூகம், சூழலியல்

நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை

நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை

மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதைக் காட்டுகிறது. பாராட்டுக்குரிய விஷயம் தான். உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது... ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை... நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும்... [மேலும்..»]

சமூகம், சூழலியல், தேசிய பிரச்சினைகள்

உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்

உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்

தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன... பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக... [மேலும்..»]

கோயில்கள்

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்:  ஒரு கூட்டு அராஜகம்

கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்... வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்... கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை... [மேலும்..»]