Blog Archives

பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்

நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன... ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து... [மேலும்..»]

அருட்செல்வருக்கு அஞ்சலி

பெரிய தொழிலதிபராக விளங்கியபோதும், சாதாரண மக்கள், கிராமத்து விவசாயிகள், பழைய கால நண்பர்கள் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் எனப் பல வகையானவர்களிடமும் தொடர்பு வைத்திருந்தார். அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்று அங்கேயே அவர்களுடன் உணவருந்துவார். அவரைப் போல மிக அதிக அளவில் மக்களை நேரடியாக அறிந்த ஒரு தொழிலதிபரைப் பார்ப்பது அரிது. தொழில்களில் தனக்கென உறுதியான கொள்கைகளை வைத்திருந்தார். பெரிய சர்க்கரை ஆலை வைத்திருந்த போதும், அது சம்பந்தப்பட்ட எரிசாராயத் தொழிலுக்கு அவர் செல்லவேயில்லை. அதில் பெரிய லாபமிருந்தும், கடைசி வரை தவிர்த்து விட்டார்...கடைசி வரைக்கும் அவர் மற்றவர்களிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினார்.... [மேலும்..»]

உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு

உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய  நிலைப்பாடு

உலக அளவிலான பன்னாட்டு அமைப்புகளில், வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு எதிர்மறையான நிலைப்பாடுகளை வழக்கமாக இந்தியா எடுப்பதில்லை. நேரு தொடங்கிவைத்த அந்த வகையான அணுகு முறை நமது தேசத்தின் நலன்கள் பாதிக்கப்படும் போதும்கூட ஏறத்தாழ அப்படியே தொடர்ந்து வந்திருக்கிறது.  அதுவும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட  விசயங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் இந்திய அரசு உலக வர்த்தக அமைப்பில் தற்போது முதல் முறையாக பணக்கார  நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தொடர்ந்த முயற்சிகள் மற்றும்   வற்புறுத்தல்கள் போன்ற   உத்திகளை எல்லாம் மீறி  அரசு செயல்பட்டுள்ளது. மோடி அரசு... [மேலும்..»]

இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?

இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?

மனித வாழ்வுக்கு  அடிப்படையாக விளங்குவது  பொருளாதாரமே ஆகும்.  எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏதுவான  சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் தலையாய கடமையாகிறது. மேலும் அதற்குத் தேவையான அடித்தளங்களை அமைத்து, பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொடுப்பது ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய  அத்தியாவசியப் பணியாகும். இந்தியப் பொருளாதாரத்துக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்தில், பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு எவ்வளவு அவசியம், பொருளாதாரம் நன்கு செயல்படுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம்  தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. காலனி ஆதிக்கக்... [மேலும்..»]

இந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்

கடந்த முப்பது ஆண்டுகளாக பலஅறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமன்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன; உலகப் பொருளாதாரம் என்பதே ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை உறுதியாக மறுக்கின்றன.... உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் நூலாக ‘அர்த்த சாஸ்திரம்’ கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மௌரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி,... [மேலும்..»]

மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்

இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பிரம்மாண்டமானதாக மாற்றியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலில், தயாரிப்புப் பணிகளில் சாமானிய முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெண்களே பெருமளவு ஈடுபட்டுள்ளனர். 2003ல் பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டன.... [மேலும்..»]

நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

தேசபக்தியும், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும், சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக அவர் இருக்கக் கூடாது... இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகள் பெருக வேண்டும். புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும்.... [மேலும்..»]