கொலைகாரக் கிறிஸ்தவம் – 6

பாதாள அறைகளின் அதிக வெளிச்சமில்லாத சித்திரவதைக் கூடங்களின் மேசைக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் இன்குசிஷன் விசாரணை நடத்தும் கிறிஸ்தவ சாமியார் மேற்படி கதைகளை உண்மையென்று எடுத்துக் கொண்டு அவர்களைத் சித்திரவதை செய்து கொன்றார்கள்… சதையையெல்லாம் மண் தின்றபிறகு கிடைக்கும் எலும்புகளை வெளியில் எடுத்துக் கவனமாகச் சேகரித்து வைத்தார்கள். பின்னர் அந்த எலும்புகள் அடுத்த auto-de-fe என்கிற சடங்கின்போது எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. சென்னையில் பல முதியவர்களின் எலும்புக்கூடுகளில் சர்ச்சுகளில் பிடிபட்ட செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம். அனேகமாக பல முதியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம்…

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 6

கொலைகாரக் கிறிஸ்தவம் – 5

“இன்குசிஷன் விசாரணை என்கிற பெயரில் நிகழ்ந்த நிகழ்வுகளில், நீதியும் நல்லெண்ணமும் சிறிதும் இல்லை. புதிதாக மதம்மாற்றம் செய்யப்பட்டவர்கள்மீது குற்றம் சுமத்தியவர்கள், அவர்களின் மகன்களைத் தங்களின் பெற்றோர்களுக்கு எதிராகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் சாட்சிசொல்லவைத்தார்கள். குற்றம் சாட்டப்பட்டவன் தங்களின் வக்கீலுடன் பேசுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 5

கொலைகாரக் கிறிஸ்தவம் – 4

போர்ச்சுகலில் குடியிருக்கும் அத்தனை யூதர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும், அல்லது கிறிஸ்தவ மதத்தைத் தழுவவேண்டும் என உத்தரவிட்டான். அந்த உத்தரவை மீறுபவர்கள் உடனடியாகக் கொல்லப்படுவார்கள் எனவும், அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது…

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 4

கொலைகாரக் கிறிஸ்தவம் – 3

ஒரு போர்ச்சுகல் யூதனின் மகன் கிறிஸ்தவனாக மதம்மாறினால் அவனது தகப்பனது சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கிறிஸ்தவ மகனுக்கே சென்றுவிடும் எனச் சட்டம் இருந்தது. அப்படி மதம்மாறியவனின் பெற்றோர்கள் இறந்துவிட்டதாக அனுமானிக்கப்பட்டு அவர்களின் வீடும், நிலமும், அசையும் அசையாத சொத்துக்கள் அனைத்திலும் மூன்றில் இரண்டு பங்கு அந்த மகனுக்கே உரிமையாகும். இந்த நடவடிக்கை யூதர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதற்குப் பெரிதும் உதவியது.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 3

கொலைகாரக் கிறிஸ்தவம் – 2

ஜனவரி 2, 1481 -ஆம் ஆண்டு ஸ்பெயினில் இன்குசிஷன் என்னும் பயங்கரம் துவங்கியது. 1481-ஆம் வருட முழுமையும் ஏறக்குறைய 300 கிறிஸ்தர்களல்லாத பிறமதத்தவர்கள் செவிய்யா (Seville) நகரில் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர், 80 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தப் பகுதியின் பிறநகரங்களில் ஏறக்குறைய 2000 பேர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் 17,000 பேர்களுக்கு வெவ்வேறுவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 2

கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1

இந்தியாவின் கோவா பகுதியை ஆண்ட போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்களால் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்தர்கள் போன்றவர்களின் மதவழிபாட்டு உரிமையை அழித்தொழித்து, அவர்களைக் கிறிஸ்தவர்களாக கட்டாய மதமாற்றம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘இன்குசிஷன் (Inquisition)’ என்னும் கொடூரமான வழக்கம் 1560-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொடூரமான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாற மறுத்த பலர் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். துரதிருஷ்டவசமாக இந்தியர்களுக்கு, முக்கியமாக ஹிந்துக்களுக்கு அது குறித்தான அறிவு சிறிதும் இல்லாமல் இருப்பது கண்கூடு. அந்தக் கொடூர காலகட்டத்தைக் குறித்து இங்கு சிறிதளவு அறிவினைப் புகட்டுவதே இந்தத் தொடரின் நோக்கமாகும்…

View More கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1

தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்

யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார்… மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது.
குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை…

View More தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5

கட்டக்கை அடையும் சிவாஜி ஒரு தவறைச் செய்கிறார். ஒரு சிறிய குதிரையை விலைக்கு வாங்கும்போது, அதற்குச் சேரவேண்டிய விலையை விடவும் அதிகமாகப் பணத்தை குதிரைக்காரனுக்குக் கொடுக்கிறார். ஆச்சரியமடையும் குதிரைக்காரன், இதுபோலப் பணம்கொடுக்க முகலாயர்களிடமிருந்து தப்பிய சிவாஜியால் மட்டும்தான் முடியும் எனச் சொல்லவே, சிவாஜி தன் கையிலிருந்த மொத்தப் பணத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்புகிறார்.

View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4

சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள்.
இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார்.

View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3

அந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன.

View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3