Blog Archives

இலக்கியம், பொது

விடியல்பாட்டு

விடியல்பாட்டு

வைகறைக் கணத்தைக் குறிக்க முடியாமல், அதிகாலைப் புலர்வின் அற்புத அழகை விவரிக்கவொண்ணாமல், தோற்றுத் தோற்றுத் தோத்திரம் செய்கின்றன வேதங்கள்! நான் அந்த மந்திரக் கணத்தை, ஒரு மாதிரியாகக் கவனித்து வைத்திருக்கிறேன்!

மேலும் »

கவிதை

கவிதை: காலின் வலிகள்…

கவிதை: காலின் வலிகள்…

பட்டாம் பூச்சியின் சுவாசத்தில் பதறும் புல்நுனி நெஞ்சம் பாகை கட்டிப் பாண்டி விளையாடப் பரவெளி தேடிக் கெஞ்சும்! விட்ட மூலையில் சிலந்தி துறந்த வெற்று வலைகள் மிஞ்சும் வெளிறிப் போன விட்டில் சிறகை வீணே காற்று கொஞ்சும்!

மேலும் »

கவிதை

கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி துரத்தத் துரத்தப் பறக்கிறது தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம் தொல்லை யுகமாய்த் தொடர்கிறது வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே வேட்டை யாடப் படுகிறது!...

மேலும் »

கவிதை

கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

சொல்லுள் துலங்கும் மெளனத்தில் சொக்கிப் போய்நாம் நிற்பதனால் அல்லை ஒளியின் கருவென்று அதில்நின் றேநாம் கண்டதனால் புல்லே மரமாய் மலைக்கின்றோம் புவியே மலராய் நுகர்கின்றோம் எல்லை பொய்யோ மெய்தானோ? இன்னும் எதற்கு இவ்வாதம்?

மேலும் »

கவிதை

கவிதை: குருநாதன்…

கவிதை: குருநாதன்…

நித்திரைக்கும் பிரக்ஞைக்கும் நேரத்தில் வசப்படாத ஒத்திகையால் தாண்ட ஒண்ணாத ஒருகோட்டில் சத்திரத்துத் திண்ணையிலே சாய்ந்துறங்கும் முதியோன்போல் அத்தனவன் என்னுள்ளே அரிதுயிலாய்க் கவர்கின்றான்!

மேலும் »