
மேற்சொன்ன நான்கு வகையான நெறிகளின் வழியே நடந்து மனத்தில் உள்ள இருள் நீங்கப் பெறவேண்டும். எவ்வித முன்பின் முரண் வாக்குகள் கூறாமல் தெளிவான அறவுரைகள் மூலம் அறவண அடிகள் மணிமேகலையின் மனதில் ஞானதீபம் ஒன்றை ஏற்றிவைத்தார்.
மணிமேகலை தவக்கோலம் பூண்டு அறவணஅடிகளின் அறவுரைகளைக் கேட்டு பிறப்பிற்குக் காரணமான துன்பங்கள் நீங்கவேண்டி நோன்பிருக்கத் தொடங்கினாள்.