முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்

முல்லை பெரியார் விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. இதில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை? இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது.

View More முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்

நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்

இந்த எதிர்ப்பாளர்களின் முக்கிய நோக்கம், அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதை எதிர்ப்பதல்ல; அங்கு அணுஆயுத உற்பத்தி நிகழாமல் தடுப்பதே… இதே ‘நிலநடுக்கம்’ கேரள அரசியல்வாதிகளால் பிராந்திய நலனுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அதை எதிர்ப்பவர்களும், இதே குழுவினர் என்பது ஒரு நகைமுரண்… கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் இப்போது தங்கள் ஜாகையை முல்லைப் பெரியாறுக்கு மாற்றிக்கொண்டு முழக்கமிடத் துவங்கி இருக்கிறார்கள்… இப்போதைய தேவை, தமிழக எல்லை மாவட்டங்களில் அமைதியைத் திரும்பச் செய்வதற்கான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனிவான நடவடிக்கைகளே…

View More நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்

சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை

லோக்பால் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு ஆடிய நாடகம் இது. அடுத்ததாக, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடின்மை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு, தெலுங்கானா பிரச்னை உள்ளிட்ட பல சங்கடமான விஷயங்களிலிருந்து நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தைத் திசை திருப்ப இதை விட நல்ல உபாயம் வேறில்லை, எனவேதான் நாடாளுமன்றம் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை மக்களவையில் தான் வெளியிட வேண்டும் என்ற இலக்கணத்தை வேண்டுமென்றே மீறினார் முகர்ஜி.

View More சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை

அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!

கூட்டுச் சதியாளர், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகளுடன், கடந்த மே 20 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழிக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டு… வெளியில் வந்துவிட்டார். திமுகவுடன் பாந்தமாக இருந்த ஒரு பத்திரிகை இப்போது அதிமுக பத்திரிகையாகவே மாறிவிட்டது…. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பது பழமொழி. எனினும் தந்தை சாப்பிட்ட உப்புக்கு மகள் தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கிறதே என்பது வேதனை அளிக்கவே செய்கிறது…

View More அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!

சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு,  திவாலாகும்   நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?

View More சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…

…தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்..

View More இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…

வீரமுண்டு… வெற்றியுண்டு!

இந்த நாளில் தான், பாரதத்தின் உயர்வுக்காகப் பாடுபடும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான்கு சிறுவர்களுடன் நாகபுரியில் துவக்கினார் [..] போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் மக்களுக்கு அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் [..] கல்வி பயில்வதற்கான ‘எழுத்தறிவித்தல்’ விஜயதசமியில் துவங்குவது நமது மரபு. வித்யாரம்பம் இந்நன்னாளில் துவங்கினால், நன்மை என்பது நாடு முழுவதுமே பரவலாக காணப்படும் நம்பிக்கை [..] இறை சக்தியும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அங்குதான் அமைதி நிலவும் [..]

View More வீரமுண்டு… வெற்றியுண்டு!

மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்

..இப்போதும் கூட, மோடியின் பிரம்மாண்ட வளர்ச்சியைத் தாங்க முடியாத அவரது எதிரிகள் ‘தொப்பிக்கதைகள்’ மூலமாக அவரைச் சிறுமைப்படுத்த முனைகின்றனர். உண்ணாவிரத நிகழ்வுக்கு வந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர் அணிவிக்க முயன்ற முஸ்லிம் தொப்பியை ஏற்க மறுத்து அவமதித்து விட்டதாகக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. உண்மையில் இச்சம்பவம் நிகழவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறு நடந்தாலும் அதில் தவறு காண ஏதும் இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்…

View More மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்

திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்

1995-ல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 4 உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வென்றது காங்கிரஸ். அதனை அன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் பாஜக தலைவர் வாஜ்பாய்…. பல மந்த நிலைகளைத் தாண்டி ஊர்ந்து வந்த வழக்கின் இறுதியில், அமர்சிங்,  இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்…காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, ‘திருவாளர் புனிதர்’  மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் தொடர்கின்றனர்….

View More திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்

லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?

இப்போது அரசு பம்பிப் பதுங்கும் நிலையை சாதகமாக்கி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை ஒன்றிணைத்து, ஊழலுக்கு எதிரான போரை முனை மழுங்காமல் காத்தால் தான் இறுதி வெற்றி கிடைக்கும். இதையே அண்ணா ஹசாரேவிடம் நாடு எதிர்பார்க்கிறது….

View More லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?