தர்ம யுத்தம் வென்றது!

‘ராம்தேவுக்கு நேர்ந்த கதி ஹசாரேவுக்கும் ஏற்படும்’ என்ற காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஹசாரே. உண்ணாவிரதம் துவங்கும் முன்னரே கைது செய்யப் பட்டார். அரசு வேறு வழியின்றி பணிந்த பின் தனது அறப்போராட்டத்தைத் தொடர்கிறார் [..] ஹசாரேவின் தர்ம யுத்தம் இறுதியில் வெல்வது நிச்சயம். ஜனலோக்பால் சட்டத்துடன் நின்றுவிடாமல், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடான பாரதத்தைக் காப்பாற்ற, ஊழல் மயமான ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தவும் ஹசாரே முன்வர வேண்டும் [..]

View More தர்ம யுத்தம் வென்றது!

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்

மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது… பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா?… மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்…

View More அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்

தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்

ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?

View More தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்

மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும்… புத்ததேவை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்ட மக்களுக்கு, பாஜகவை திரும்பிப் பார்க்கவும் நேரமில்லை… மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும். அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டுவிட்டன… ராகுலின் பிரசாரமே இடது முன்னணிக்கு இறுதிநேர ஆசுவாசமாக அமைந்தது… பாஜக, ஜெயலலிதாவை எதிர்த்தும் பிரசாரம் செய்திருக்க வேண்டும்…

View More மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.

தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி

ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்…ஜாதி அரசியலால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச்… நல்ல பாடம் கற்றிருக்கின்றன… இதன்மூலம், ஊழல் ஒரு பொருட்டல்ல என்று விதண்டாவாதம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முகத்திலும் கரியைப் பூசி இருக்கிறார்கள், விழிப்புணர்வுள்ள மக்கள்… நாட்டு மக்களை பொய்யான கருத்துக் கணிப்புகளால் குழப்பிவிட முடியாது என்பதும் இத்தேர்தலில் நிரூபணம் ஆகியிருக்கிறது.

View More தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி

பின் லேடனை விட மாபெரும் அபாயம்

உலக அளவில் கிறிஸ்தவ மேலாதிகத்திற்கும் இஸ்லாமிய அகிலத்திற்கும் மோதல் மறைமுகமாக நடந்து வருகிறது [..]இரு ‘செமிட்டிக்’ மதங்களிடையிலான மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தயாராக வேண்டியது தான். அதை தாக்குப் பிடிக்க நமது நாடு முன்யோசனையுடன் தயாராக வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம்?

View More பின் லேடனை விட மாபெரும் அபாயம்

தேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி

கருணாநிதிக்கு ஒரே மாற்று ஜெயலலிதா தான் என்ற சிந்தனை மக்களிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்தச் சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன… பாஜக சிறுபான்மையினரை வெறும் வாக்குவங்கியாகக் கருதவில்லை. பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று பாஜக கூறவில்லை; அதே சமயம் தாழ்வாக நடத்தப்படக் கூடாது என்றே கூறுகிறது…பாஜக, மீனை இலவசமாகக் கொடுக்குமாறு கூறுவதில்லை; மீன் பிடிக்க கற்றுத் தருவதையே பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது.

View More தேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி

தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

எதிரிக்கும் வேண்டாம்; துரோகிக்கும் வேண்டாம்…
ஹிந்துக்களின் வாக்கு பாஜகவுக்கே!
-ராம.கோபாலன்
நிறுவனர், ஹிந்து முன்னணி.

View More தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெறும் தலைகளிடையே, இரு கழகங்களின் பணபலத்திடையே, கொள்கையற்ற இரு கூட்டணிகளிடையே போராடுவது பத்மவியூகத்தில் அபிமன்யூ போராடுவது போன்றது தான். பாரத அபிமன்யூவுக்கு உதவிகள் தடுக்கப்பட்டன. ஆனால், தமிழக பாஜகவின் உதவிக்கு வந்திருக்கிறது பிற மாநில முதல்வர்கள் படை. எனவே, இந்த அபிமன்யூ களத்தில் சாதித்துக் காட்டுவான்.

View More தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை

கிழிந்த ரூபாய் நோட்டானாலும் வங்கியில் செலுத்துவதற்குரிய தகுதி கொண்டிருப்பது மதிமுக என்பதில் ஐயமில்லை. அதனால் தான் அன்புச் சகோதரி முதற்கொண்டு தானைத்தலைவர் வரை பலரும் வைகோவுக்கு மடல் எழுதி இருக்கிறார்கள். பிறருக்கு மடல் எழுத வேண்டிய நிலையில் இருந்த வைகோவுக்கு இந்நிலை ஏற்பட்டது ஏன் என்று பார்ப்பதும் அவசியம்.

View More தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை