Blog Archives

ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

அரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது.... [மேலும்..»]

ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மதிப்பு மிக்கது- இறுதியானது என்பதும், சட்டங்களுக்காக மக்கள் அல்ல- மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இடையிடையே ஒலித்த தேச விரோத கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களும், இந்தப் போராட்டம் குறித்த மீள்பார்வையை அவசியமாக்கியுள்ளன. [மேலும்..»]

சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

December 27, 2016
By

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும். காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம். [மேலும்..»]

ஜெயிக்கப் பிறந்தவர்!

December 11, 2016
By

ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில்... [மேலும்..»]

பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை

பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை

வெற்றி பெற்றவர்களால் கட்டமைக்கப்படும் மாய பிம்பங்களை நம்பி அவர்களை நாயகர்களாகப் போற்றுவதும் வரலாற்றுப் பீடத்தில் ஏற்றுவதும் உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது. இந்தியாவில் இதற்கு மிகச் சரியான உதாரணம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்றால், உலக அளவில் மிகப் பொருத்தமான உதாரணம் கியூப முன்னாள் சர்வாதிகாரி பிடல் காஸ்ட்ரோ. தனது 90-வது வயதில் கடந்த 2016, நவ. 25-இல் முதுமை காரணமாக காஸ்ட்ரோ மரணமடைந்தார். உலகின் நீண்டநாள் ஆட்சியாளரும், கம்யூனிஸ்ட்களின் உலகத் தலைவரும், அமெரிக்காவின் நெடிய பகையை வென்ற மகத்தான வீரருமான காஸ்ட்ரோ மறைந்ததாக உலக ஊடகங்கள் கண்ணீர் சிந்தின. அதில் இந்திய ஊடகங்களும்... [மேலும்..»]

கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

November 20, 2016
By
கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

உயர் மதிப்புள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த நவ. 8-ஆம் தேதி இரவிலிருந்தே நாட்டில் பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் பறிபோய்விட்டது. அவர்களில் பலர் தற்போது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பிதற்றத் துவங்கிவிட்டனர். கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் மீதான அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் கூப்பாடு போடும் இந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கையிலிருந்தே, மோடி கொடுத்த அடி இவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இவர்களில் தலையாயவர், தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இந்திய வருவாய்த் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்த... [மேலும்..»]

மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

மொழிவாரி மாநிலங்கள்:  உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]

காஷ்மீர்: இதுவே சரியான பாதை

பாகிஸ்தானில் எப்போதெல்லாம் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீரில் ஊடுருவலைக் கட்டவிழ்த்துவிட்டு, உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபடச் செய்வது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கடமையாக இருந்து வருகிறது. அதேபோல, இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அமைதியான வாழ்க்கைக்கு மக்கள் தயாராகி வருவதைக் கண்டாலும் பிரிவினைவாதிகளுக்குப் பொறுக்காது. உடனே வன்முறை தூண்டிவிடப்படும். 2016-இல் இங்கு நிகழும் வன்முறைகளுக்கு இவ்விரு காரணங்களுமே பொருந்தும். [மேலும்..»]

பியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை

சேலத்தில் மேம்பாலப் பணியை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக சேவகர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட சமூக சேவகருக்கு எதிராக பல புகார்கள் கூறப்பட்டபோதும், அவரை சிறைக்குள் கொடூரமாகத் தாக்க எந்த சட்ட விதிகளும் இடமளிக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இந்தத் தாக்குதலின் பின்னணியில் பெரும்புள்ளிகளும் அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் கூட்டணியாகச் செயல்பட்டிருப்பது நன்றாகவே புலப்படுகிறது. இது வன்மையாக்க் கண்டிக்கத் தக்கதாகும். இது மக்களாட்சி முறைக்கே களங்கம் விளைவிக்கும் அபாயமான கரும்புள்ளியாகும். சேலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் பியூஷ் மானுஷ் (40).  ‘சேலம் மக்கள்... [மேலும்..»]

அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்

அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்

  ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் அண்மையில் மேற்கு வங்க காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களால் தமிழக காவல்துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்த இளைஞர் கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பூரில் குடியிருந்த தகவல்தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். மோஸி (எ) மஜ்னு (எ) மொஸிருதீன் என்ற 27 வயது இளைஞர், மேற்கு வங்கம் செல்லும் வழியில் பர்துவான் ரயில்நிலையத்தில் கடந்த ஜூலை 3—இல் கைது செய்யப்பட்டார். தனது சொந்த ஊரான பிர்பும் மாவட்டத்திலுள்ள லாம்பூர் செல்லும் வழியில் அவர் சிக்கினார். அவரது சொந்த ஊர் அதுதானா, அல்லது... [மேலும்..»]