Blog Archives

யமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை!

எப்படியாவது தில்லி தேர்தலில் பாஜக தோற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றனர் சில ஊடகக் கைக்கூலிகள். அவர்கள் அளவுக்கு அதிகமாகவே கேஜ்ரிவாலை கொம்பு சீவி விடுகின்றனர். இந்நிலையில் தலைநகரின் அரசியல் நிலவரம் குறித்து ஹிந்து விரோத மனப்பான்மையின்றி ஓர் அலசல் தேவையாகிறது. அந்தத் தேவையை நிறைவேற்றுகிறது இக்கட்டுரை…. மீண்டும் தில்லி மாநில சட்டசபைத் தேர்தல் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிப். 7-இல் நடைபெறும் தேர்தலை தனது இறுதிப் போராட்டமாகக் கருதிப்  போராடுகிறார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். ஆனால், காலம் அவரை கருணையின்றி நிராகரித்துவிடும் என்பதற்கான சான்றுகள் இப்போதே தென்படத்... [மேலும்..»]

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்‌ஷி மஹராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகி ஆதித்யநாத் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலரின் எக்குத்தப்பான பேச்சுக்களால், நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான ஆட்சி என்ற பிம்பம் குலைகிறது. சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக அளித்துள்ள எச்சரிக்கை நோட்டீஸ், அதன் தீவிரத்தை கட்சி உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் வேர்கள் ஹிந்துத்துவத்தில் தான் நிலைகொண்டுள்ளன. ஹிந்து என்பதில் பெருமிதமும், தேசிய உணர்வில் தெளிவான கண்ணோட்டமும் தான் பாஜகவின் அடிப்படை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது பாஜகவின் நிலைப்பாடுகள் தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும்... [மேலும்..»]

குழப்ப நிலையில் தமிழக அரசியல்

குழப்ப நிலையில் தமிழக அரசியல்

தமிழக அரசியல் இதுவரை காணாத குழப்ப நிலையில் தத்தளிக்கிறது. ஆளும் அதிமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவும் திசைகாட்டி இல்லாத கப்பல் போலத் தள்ளாடுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக, மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள பாமக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் அனைத்திலுமே ஒருவித செயலற்ற தன்மை காணப்படுகிறது. தேசிய அளவிலான ஆளும் கட்சியான பாஜக இன்னமும் தன்னை மாநில அரசியலுக்குள் நிலைநிறுத்திக் கொள்ளாமல் தவிக்கிறது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய அளவில் வழிகாட்டிய தலைவர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிலையைச் சொல்லவே வேண்டாம். திமுக- அதிமுக என்ற இரு துருவ அரசியலுக்குள் ஏதாவது ஒரு அணியில் இடம் பெறுவதே... [மேலும்..»]

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா? நல்லது நடக்கும் என்று நம்புவோம். [மேலும்..»]

காஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது!

December 28, 2014
By

ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் - இரண்டு மாநிலத் தேர்தல் முடிவுகளும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வலிமையூட்டுவதாகவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசியல் நிலைபெற உதவுவதாகவும் அமைந்திருப்பது தேசநலன் விரும்புவோருக்கு மகிழ்ச்சி ஊட்டியுள்ளது...ஜம்மு காஷ்மீரில் தொகுதிகளில் இரன்டாவது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும், வாக்குகளின் சதவீதத்தில் பி.டி.பி.யை முந்தி முதலிடம் பிடித்திருக்கிறது பாஜக. இது வரலாற்றிலேயே முதல் முறை... வழக்கம் போல, ஜார்க்கண்டில் பாஜக வெல்ல மோடி காரணம் இல்லை என்று பிதற்றத் துவங்கி உள்ளன எதிர்க்கட்சிகள். அவர்கள் அப்படியே பேசிக்கொண்டு இருக்கட்டும். அவர்களின் காலடியில் உள்ள நிலத்திலும் பாஜக கொடி பறக்கும்போது தான் அவர்கள்... [மேலும்..»]

சாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்

December 22, 2014
By
சாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்

தற்போதைய அரசியல் வானில் சாரதா நிதி நிறுவன சூறாவளியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. மேற்கு வங்கத்தில் நிலைகொண்ட இந்த  மோசடிப் புயலின் பாதிப்பு இப்போது தில்லியில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் பெரும்பாலோர் திரினாமூல் காங்கிரஸ் பிரமுகர்களாகவே இருப்பதால், அக்கட்சியின் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நிலைகுலைந்து இருக்கிறார். இந்த மோசடியில் அவர் இதுவரை நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், விசாரணை வட்டத்துக்குள் வெகு விரைவில் அவரும் வரக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே, இப்போதே தற்காப்புக்காக காற்றில் கத்தி வீசத் துவங்கிவிட்டார். சாரதா நிதி நிறுவன மோசடியை... [மேலும்..»]

தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

“வந்தால் உன்னோடு… வராவிட்டால் தனியாக… எதிர்த்தால் உன்னையும் மீறி… லட்சியம் அடையப்படும்” – வீர சாவர்க்கர். அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர். சறுக்கலும் எள்ளல்களும்: முதலாவதாக, சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10),  பஞ்சாப் (2),  ம.பி. (3),  கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில்,... [மேலும்..»]

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 2

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 2

– கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்   தமிழின் முன்னணி எழுத்தாளரும் கிரைம் நாவல் மன்னருமான திரு. ராஜேஷ்குமார் அளித்த சிறப்பு நேர்காணலின் இரண்டாம் பகுதி இது… காண்க: முதல் பகுதி   உங்களது சமகால எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுடன் உங்கள் உறவு எப்படி? என்னைப் பொருத்த வரை நான் யாரையுமே போட்டியாகக் கருதவில்லை. அவர்கள அனைவருமே என்னைப் பார்த்து பிரமித்தனர். ஒருமுறை சுரேஷ்- பாலா (சுபா) இருவருமே என்னிடம் கையில் ரேகை பார்த்தார்கள். ஏன் என்று கேட்டபோது,  “இவ்வளவு எழுதுகிறீர்களே, கையில் ரேகைகள் இருக்கிறதா, அழிந்துவிட்டதா என்று பார்த்தேன்”... [மேலும்..»]

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1

– கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்   கிரைம் நாவல் மன்னரான எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமாரை தமிழ் எழுத்துலகில் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. 1,500-க்கு மேற்பட்ட குற்றப்புனைவு (கிரைம்), அறிவியல் புனைவு புதினங்கள், 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள ராஜேஷ்குமார் (66), உலக சாதனையாளர். தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கூட இவரது எழுத்துலக சாதனையை முறியடிக்க நீண்டகாலம் ஆகும். கோவையில் வசிக்கும் திரு.ராஜேஷ்குமார்  விஜயபாரதம் தீபாவளி மலருக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் முழு வடிவம் இது…   உங்களது எழுத்துலகப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது? நான் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத்... [மேலும்..»]

எல்லையில் மீண்டும் போர்மேகம்

கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி இருக்கிறது.  பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் காலகட்டங்களில் எல்லாம் இந்தியப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. பங்காளி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்தபோதே, இரு நாடுகளிடையிலான பிரச்னைக்கும் கால்கோள் இடப்பட்டுவிட்டது. இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரை சொந்தம் கொண்டாடுவதன் வாயிலாக பாகிஸ்தான் தனது உள்ளூர் அரசியலை வளர்த்து வந்திருக்கிறது. உண்மையில் இந்திய விரோதமே பாகிஸ்தானின் உருவாக்கத்திற்குக் காரணம். அந்த அடிப்படையில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்குப் பெற இந்தியா மீது தொடர்ந்து விஷம் கக்குவது, அங்குள்ள... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey