Blog Archives

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” -என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]

காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்

September 20, 2014
By
காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி அகற்றப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின்போது எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைத்த ஸ்வயம்சேவகர்கள், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு லட்சக் கணக்கானோரை காத்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் வெள்ளத்தோடேயே சென்றுவிட்டது போல, பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. சேவை செய்தவர்களைக் குறை கூறும் பிரிவினைவாதிகளுக்கும் இந்த ஊடகவாலாக்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. ஒரு முக்கியமான சம்பவம். காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையத் அலி கிலானி வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில் ராணுவவீரர்களால் மீட்கப்பட்டார். இந்தப் புகைப்படம் ஊடகங்களில் வெளியானவுடன் அவர்,  “ஆபத்துக்காலத்தில் ஆக்கிரமிப்பு... [மேலும்..»]

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

September 3, 2014
By
இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

லோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு உள்பட்ட 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளன. இத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றாலும், அக்கட்சி 3 மாதங்களுக்கு முன் பெற்ற மக்கள் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் சிறு ஏமாற்றம் ஏற்படவே செய்கிறது. சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் ஆக. 25-ல் வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாகப்... [மேலும்..»]

காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி

காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக் கிளப்பி உள்ளது. 2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்தி தான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் நட்வர் சிங். இதுவரை, தேடிவந்த பிரதமர் பதவியை மறுத்த தியாகியாக, பாரத தேசத்தைக் காக்கவென்றே இத்தாலியில் பிறப்பெடுத்துவந்த அன்னையாக  காங்கிரஸ்காரர்களால் புகழ் பாடப்பட்டுவந்த சோனியா அம்மையார், உயிரச்சத்திற்குப் பயந்தே அந்தப் பதவியை மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. “சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர்... [மேலும்..»]

தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்

தற்போதைய தேவை, நீதித்துறையில் தேர்ச்சி மிகுந்த வல்லுநர்கள், மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பகம், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதி ஆணையம் அமைப்பதே ஆகும். இதன் நடத்துநர்களாக தேசிய நீதி ஆணையத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இருக்கலாம். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இருக்க வேண்டும். இந்த ஆணையம் ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் அளிக்கும் அதிகாரம் பெற்றதாக அமைக்கப்படலாம். [மேலும்..»]

பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!   உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை   வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உலகின் அறிவிக்கப்படாத காவல்காரனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு சர்வதேச அரசியலில் முதன்மைப்படுத்திக்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக  கம்யூனிஸ நாடுகள் மேற்கொண்ட உலகளாவிய முயற்சி வெற்றி பெறவில்லை. தவிர, 1990களில் நிகழ்ந்த கம்யூனிஸத்தின் தோல்வி முதலாளித்துவத்தை அடைப்படையாகக் கொண்ட அமெரிக்காவின்... [மேலும்..»]

பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

பிரேசிலில் நடந்து முடிந்துள்ள ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களுக்கான கால்கோளை இட்டுள்ளது. குறிப்பாக, பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் முக்கியத்துவத்தை வெகுவாக உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கிற்குக் கடிவாளமாக உருவான சிந்தனையே பிரிக்ஸ். 2006-இல் உருவான இக்கரு 20089-இல் ரஷ்யாவின் எகடிரன்பர்க் நகரில் கூடிய முதல் உச்சி மாநாட்டில் நனவானது. ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டுமே அங்கத்தினராக இருந்தபோது பிரிக் (BRIC) மாநாடு என்றழைக்கப்பட்டது. இந்த நாடுகள் அனைத்துமே வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகள். 2011-இல் தென் ஆப்பிரிக்காவும் இதில் இணைந்தபோது ‘பிரிக்ஸ்... [மேலும்..»]

உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம்... உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது "உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்" என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.... [மேலும்..»]

நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்

நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்காகவும், அரசியல் லாபமீட்டுவதற்கான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகவுமே கருதப்பட்டுவந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, புதிதாகப் பொறுப்பேற்ற மோடி அரசால் ஜூன் 10-இல் நாடாளுமன்றத்தில் புதிய இலக்குகளுடனும், புதிய அர்த்தங்களை உருவாக்குவதாகவும்  முன்வைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செல்லப்போகும் திசையை இந்த நிதிநிலை அறிக்கை  திட்டவட்டமாக வரையறுத்துள்ளது. இதுவரையிலான காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதே நிதிநிலை அறிக்கைகளின் விளைவாக இருந்துவந்துள்ளது. ஆனால், மோடியின் சகாவான நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில், வழக்கமான இனிப்பான வாக்குறுதிகளை விட, நிறைவேற்றச் சாத்தியமான திட்டங்களையே முன்வைத்துள்ளார்.... [மேலும்..»]

எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3

முதல் பகுதி… இரண்டாம் பகுதி… . மக்களாட்சி முறையில் அரசாங்கங்களை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தொலைநோக்குடன் இயங்கும் அரசுகள், மக்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்டு கவர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் அரசுகள், மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுகள் என பொதுவாகச் சொல்லலாம். தமிழகத்தில் இன்றும் காமராஜர் ஆட்சி பற்றிய முழக்கங்கள் எழுந்துவரக் காரணம், அவரது அரசு, இதில் முதன்மை வகையைச் சேர்ந்திருந்ததே. அதேபோல, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கவர்ச்சி அரசியலுக்கு மாறான வளர்ச்சித் திட்டங்களிலேயே கவனம் செலுத்தினார். பாஜகவின் ஆதரவு அமைப்பான... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey