Blog Archives

கலைகள்

கிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலை

கிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலை

வயலின் மேதை கன்னியாகுமரியின் சிஷ்யரான இவர், சம்பரதாயமான கர்நாடக இசைக்கச்சேரிகளையும் நிறைய செய்திருக்கிறார்... பேச்சு பிரசன்னா இசையமைத்த 'Smile Pinki' டாகுமெண்டரியைக் குறித்துத் திரும்பியது. "எனக்கு பணத்தை விட ஆத்ம திருப்தி முக்கியமானதாகப் படுகிறது." என்று 'Smile Pinki'-க்காக இசையமைத்ததைக் குறித்துக் குறிப்பிட்டார் பிரசன்னா.

மேலும் »

சமூகம்

காடென்னும் கடவுள்

காடென்னும் கடவுள்

சொந்த வீட்டில் எங்கள் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட மரங்களை இழந்ததற்காகச் சிறுவயதில் வருந்தாத நான், பெங்களூரில் சாலைகளை விரிவாக்குவதற்காகச் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வலியை உணர்கிறேன்... "எப்படியாவது இந்த மரங்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை!" என்று ஊர்மக்கள் அனைவரும் ஒரேகுரலில் சொல்கின்றனர். அய்யாசாமி மாவட்ட நிர்வாகத்துக்குக் கூட ஒரு புகார் மனு அளித்திருப்பதாகக் கூறுகிறார்.

மேலும் »

கலைகள்

ரீதிகெளளை

ரீதிகெளளை

ரீதிகெளளை ‘கண்கள் இரண்டால்’ பாடலாக ஊரெங்கும் சமீபத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைக் கேட்டு ரசிக்கும் பெரும்பாலானோருக்கு அது ரீதிகெளளை ராகத்தில் அமைந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. ஆனால் அப்பாடலை ரசிக்க அந்த விஷயம் தெரிந்திருக்கத் தேவையுமில்லை என்பது உண்மை!

மேலும் »

நிகழ்வுகள்

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

‘புத்தகக் கண்காட்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்று ஹரன்பிரசன்னா எழுதியிருந்ததால் பயந்துபோய் குடை, ஜெர்கின் சகிதம்தான் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். சென்னையில் இறங்கியதும் மழைக்கான அறிகுறியே இல்லை...

மேலும் »

அறிவியல்

வெறும்கால் அறிவியல்

வெறும்கால் அறிவியல்

“மூக்குக் கட்டைப் பிரிக்கப் போகிறேன். ரத்தம் வந்தால் குடித்துவிட வேண்டும். என் மேல் துப்புகிற வேலையெல்லாம் வேண்டாம். ஒருவர் என்மேல் துப்பி, என் சட்டையெல்லாம் ஒரே ரத்தக் கறையாகிவிட்டது. கொஞ்சம் வலிக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார் டாக்டர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆபரேஷன் செய்தபின் ஒரு பொட்டு கூட ரத்தம் வராமல், வலியும் இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தெம்பாக சுற்றிக்கொண்டிருந்தேன். கட்டு பிரிக்கப்போனால் இப்படி ரத்தம், வலி என்றால் வயிற்றைக் கலக்காமல் என்ன செய்யும்! படுக்க வைத்து என் வயிற்றின் மேலேயே மருத்துவக் கருவிகள் நிறைந்த துண்டையும் வைத்தார். மெல்ல மெல்ல கட்டை அவிழ்த்து, ஒரு...

மேலும் »

கலைகள்

சொர்க்கமே என்றாலும்…

மிக எளிதான, அழகான கிராமிய மெட்டுகளைக் கொண்ட, கர்நாடக இசையின் ராகத்திலமைந்த பல பாடல்களைத் தந்திருக்கிறார் இளையராஜா. கர்நாடக ராகத்திலமைந்த பாடல் என்றவுடனேயே கர்நாடகக் கீர்த்தனையை அப்படியே எடுத்துக் கொண்டு, வரிகளை மாற்றியமைத்த பாடல் என்று நினைக்க வேண்டாம். (அப்படிப்பட்ட பாடல்களும் பிற இசையமைப்பாளர்கள் தயவில் தமிழில் வந்திருக்கின்றன). அந்த ராகத்தின் ஸ்வரபாவங்களையும், அதன் தனித்துவத்தையும் கைக்கொண்டு ஆனால் முற்றிலும் நாட்டுப்புறப்பாடலாகவோ, ஒரு எளிய திரைப் பாடலாகவோ அவரால் தர முடிந்தது.

மேலும் »

கலைகள்

இசையில் தொடங்குதம்மா

இசையில் தொடங்குதம்மா

.. இந்த இரண்டு துருவங்களுக்கும் நடுவே, இளையராஜாவின் இசையைப் பற்றிய் உண்மையான மதிப்பீடு பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதேயில்லை... இப்போது பெரும்பாலும் கர்நாடக இசைப்பாடல்கள் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நாம் வேண்டாம் என்று விலகி ஓடினாலும், ஒரு அழகான ஹம்ஸநாதத்தை நமக்குத் தந்திருக்கிறார் இளையராஜா.

மேலும் »