Blog Archives

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)

ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)

உலகு உண்மை ஒருவிதம், ஞானிகளின் உலகமோ வேறு விதம் "பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்" என்பார் ரமணர். அந்த "நான்" இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்? ருமதி. கனகம்மாள் எழுதிய "ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை"யின் துணை கொண்டு எழுதப் பட்ட அற்புதமான தொடரின் நிறைவு பகுதி இது...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 14

ரமணரின் கீதாசாரம் – 14

ரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 13

ரமணரின் கீதாசாரம் – 13

எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 12

ரமணரின் கீதாசாரம் – 12

சிறு வயதில் ரமணர் திருவண்ணாமலையை அடைந்ததுமே தன் கையில் இருந்த சில்லறைக் காசுகளை குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பின் அருணாச்சலக் கோவிலைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார். தொடக்க காலத்தில் ஊரில் உள்ள வீடுகளின் வாயில் முன் நின்று ஏதும் கேட்காது, அவர்களாகவே அளிக்கும் உணவை தன் இரண்டு கைகள் கொள்ளும் அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டுப் போய் விடுவார். பின் அதுவும் இல்லாது பாதாள லிங்கத்தின் அருகே பல நாட்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த நேரத்தில்

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 11

ரமணரின் கீதாசாரம் – 11

ரமணர் காலத்தில் அவரது ஆஸ்ரமத்திற்கு அருகே குடி கொண்டிருந்த பலவித மிருகங்களும் அவரிடம் அன்யோன்யமாகப் பழகி இருக்கின்றன. குரங்குகள், அணில், காக்கை, பாம்பு, மயில், பசு, மான் மற்றும் ஒரு சிறுத்தை கூட அவர் முன்னிலையில் சகஜமாக இருந்திருக்கின்றன என்றால் அந்த சீவ ராசிகளுக்குக் கூட நாம் இப்போது சொன்ன சமநோக்கு இருந்திருக்கின்றன என்றுதானே பொருள்?

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 10

ரமணரின் கீதாசாரம் – 10

ஒன்று கிடைக்க வேண்டும் அல்லது சேர வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே; ஒன்று கிடைக்க வேண்டாம் என்பதும் ஆசையே. அப்படி அது இருதரப்பட்டது போலவே, சேரவேண்டியது சேராவிட்டாலும், சேர வேண்டாதது சேர்ந்து விட்டாலும் வருவது கோபமே. சலனமற்ற மனமாகிய நீர்பரப்பில் தோன்றும் குமிழிகள் போல இருப்பதால், அவை எழாத இடத்தில் மனமும் அடங்கியே இருக்கும். சாதகனைப் பொறுத்தவரை அவனது ஒவ்வொரு எண்ணமும் அடங்க அடங்க அவனுக்கும் மன அமைதி கிடைக்கும்

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 9

ரமணரின் கீதாசாரம் – 9

சாதாரணமாக அருச்சுனன் போன்ற வீரர்கள் போர்க்களத்தில் புகுந்தால் பகைவர்களை வென்று வெற்றியைக் குவிப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் இங்கோ அருச்சுனனுக்கு ஏற்பட்ட நிலை அவனது மன சஞ்சலத்தினால் ஏற்பட்டுள்ளது. முன்னால் நிற்பவர்களைப் பகைவர்களாகப் பார்க்காது தன் சுற்றத்தினர்களாகப் பார்த்ததால் வந்த விளைவு

மேலும் »

அரசியல்

ஊழலின் சிகரம்

ஊழலின் சிகரம்

(மூலம்: சுமித் மித்ரா) நம் சமுதாய நோக்கின் தரமும் வெகுவாகத் தாழ்ந்து, Malcom Gladwell எனும் ஆசிரியர் கூறுவதுபோல, ஒரு வரம்பைத் தாண்டி ஊழலானது இப்போது காட்டுத்தீயைப் போலவும் பரவி வருகிறது... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருக்கும் பட்சத்தில், பெரும்பாலான மக்களிடம் மேலும் ஊழலை வளர்க்காமல் இருப்பதற்கு அது ஆவன செய்யும் என்று நம்ப இடம் இருக்கிறது... எத்தனை பேரிடம் நேர்மையான வழியில் சம்பாத்தித்த பணம் இருக்கிறது என்பதுதான் நாம் கேட்கும் கேள்வி...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 8

ரமணரின் கீதாசாரம் – 8

ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார்

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 7

ரமணரின் கீதாசாரம் – 7

எப்படி மற்றவர்களைத் தன்னவர்களாகக் காண்பது என்னும் ஐயம் எவருக்குமே வரும். ஏனெனில் என்னதான் மற்றவர்களை நாம் அப்படிப் பார்த்தாலும் அல்லது பார்க்க முயற்சித்தாலும், ஏதோ ஒரு சமயத்திலோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ மற்றவர்கள் நம்மை அப்படிப் பார்ப்பதில்லையே என்று எவருக்குமே கேட்கத் தோன்றும்.

மேலும் »