Blog Archives

காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று

December 1, 2010
By

1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் "சந்த்" எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 6

November 27, 2010
By

ஆக அகந்தையின் மூலத்தை அறிய வேண்டுமென்ற உறுதிதான் ஞான விசாரத்தின் உயிர் நாடி. அந்த உறுதி தளராமல் இருக்குமானால், சீடன் வேறு எந்த சாதனையும் செய்யத் தேவை இல்லை. ஆதலால் ஆன்மாவாகிய பிரம்மத்தை மனத்தில் இருத்தி செய்யப்படும் தியானம் துணையாகுமே அன்றி எப்படி மனத்தையே அழிக்கும் சாதனமாகும் என்று கேட்கிறார் ரமணர். [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 5

November 20, 2010
By

சீட்டாட்டத்தின்போது விழும் சீட்டுகள் விதி; அதை வைத்துக்கொண்டு ஆடுபவரின் திறன் மதி என்பார் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்... நாம் மற்ற விலங்கினங்களைவிட இயற்கையில் பலம் இல்லாது உள்ளோம். அறிவே நமது பலம். எதையும் நல்ல முறையிலோ தீய முறையிலோ பயன்படுத்திக் கொள்வது அவரவர்கள் அறிவு முதிர்ச்சியைப் பொருத்து அமைகிறது. [மேலும்..»]

ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

November 15, 2010
By

சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்... முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது... இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது...(மூலம்: ஜான் மெக்லிதான்) [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 4

November 6, 2010
By

ரமணரின் "நான் ஆன்மாதான்" என்று மதுரையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், பிற்காலத்தில் அதைப்பற்றி "அருணாச்சல அஷ்டக"த்தில் அவரே எழுதியுள்ளதையும் பாருங்கள். முதல் செய்யுளில், "அருணாச்சலம் எனக் கேட்டதும், அதுதான் திருவண்ணாமலை என ஒருவர் சொல்லியும், அது ஏதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று என் புத்தியில் தோன்றிக்கொண்டு இருந்தது. அதன் உண்மைப் பொருளை நான் அறியவில்லை. என் அறிவை அது மயக்கி, என்னை அதன் அருகினில் ஈர்க்க நானும் வந்த போது அது அசலமாய் இருக்கக் கண்டேன்" என்கிறார். [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 3

October 30, 2010
By

அறிவில் அறியாமை கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவு கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவின் கலப்பு இல்லையென்றால், தெரியவில்லை என்று (கூடச்) சொல்லமுடியாது இது பக்தி வழி என்றால், அது ஞான வழி என்றும், இரண்டும் ஒரே இடத்திற்கு சாதகனை இட்டுச் செல்கிறது என்றுதானே அர்த்தம்? மெய்யான ஞானத்தை விட்டு விதவிதமாகத் தோன்றும் உலக ஞானம் தனித்து நில்லாது. (ஆனாலும்) உலகம் தோன்றும்போது ஆத்மா தோன்றாது. ஆத்மா தோன்றும்போது உலகம் தோன்றாது [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 2

October 23, 2010
By

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே... உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும். [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 1

October 19, 2010
By

"IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?"... ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே... எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது?... [மேலும்..»]

பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3

October 12, 2010
By

ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான்.... "நான்" எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது... [மேலும்..»]

பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2

October 2, 2010
By

இந்திய பண்பாட்டில் திளைத்த நமது முன்னோர்கள் பிறவிகள் பற்றி எவ்வளவு முக்கியமான விஷயங்களை நமக்கு அரிய பொக்கிஷங்களாகத் தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற பெருமிதம் வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும், செய்யும் தொழிலே தெய்வம், தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் சொன்னார்களே, நாம் அவை அனைத்தையும் சரியாக உணர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தன. [மேலும்..»]