Blog Archives

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14

முன்பு எதிர்மறையான சொற்றொடர்களை வைத்துக்கொண்டு ஆன்மாவைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இங்கு "ஆகாயம் போல" என்று நேர்மறையாகத் தொடங்கிவைத்து ஆன்மாவின் சொரூப லக்ஷணம் துல்லியமாக விளக்கப்படுகிறது. இங்கும் எதிர்மறைகள் தவிர்க்கப்படவில்லை என்பதையும் காணலாம். ஆகாயம் என்பதை sky என்று குறுகிய அளவில் கொள்ளாது, space என்று விரிந்த அளவில் பொருள் கொண்டால் நன்கு விளங்கும். முன்பே நாம் பார்த்ததுபோல ஒரு காலியாக உள்ள குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்வோம். ஆனால் அந்தக் குடத்திற்குள் ஆகாயம் இருப்பதை அக்குடத்தை உடைத்தாலோ, அல்லது அதை அங்கிருந்து நீக்கினாலோ தானே நமக்கு விளங்குகிறது. அது மட்டும்... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13

எப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணப்படி தன்னிலும் வேறு என்று ஒன்றைப் பார்ப்பதுதான் முதல் படி. அந்த நான்-நீ என்ற பாவனையால், எனது-உனது என்ற வேற்றுமைகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் ஒரு பொருளை "தனது" என்று அடைய விரும்புவதுதான் ஆசை. அது கிடைக்காதோ அல்லது தன்னிடம் தங்காதோ போய்விட்டால் வருவது துக்கம். அது தனக்குக் கிடைத்தும், அது ஒருவேளை தன்னைவிட்டுப் பிறரிடம் போய்விடுமோ என்று எண்ணுவது அச்சம். தன்னிடமிருந்து பிறர் அதை எடுத்துக் கொண்டுவிட்டால் வருவது கோபம். தன்னிடமே அது இருக்கவேண்டும் என்று எண்ணுவது பற்று. மற்றவர் அதைப் பெற்றுவிட்டால் அவரிடம்... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12

கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, பரமாத்ம சொரூபமே என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்.... சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவையாவது போல, ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் பிரகாசிக்கச் செய்யும். சுய பிரகாசமற்ற ஜடமாகிய அவைகளினால் தேஜோமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்... “எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ" என... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11

சூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் சன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று விளக்குகிறார். ஒவ்வொருவனும் தான் ஆன்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் "நான் செய்கிறேன்", "நான் அனுபவிக்கிறேன்" என்று எண்ணுவதாலும், தான் ஆன்ம வடிவம் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)

இராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. ஆக அயோத்தி போகவேண்டும் என்பது இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. அப்படிப் போய் இறைவனை அடைவதற்கு, வானரர்கள் இராமரைத் தவிர வேறு யாரிடம் போய் வேண்டுவது? இறைவனுக்கு நாம் வேண்டிக்கொள்வதில், "இறைவா! நாங்கள் உன்னை அடைவதற்கு வழி காட்டு" என்பதைத் தவிர வேறு எந்த கோரிக்கை அதை விடச் சிறந்ததாக இருக்கிறது?... வால்மீகி ஒவ்வொரு இன்னல்களிலும் மனிதனான இராமர் எப்படி தன் நிலைப்பாடை எடுக்கிறார் என்பதைக் காட்டும்போது, அந்தக் காலத்தைய அவல நிலைச் சூழல்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இப்படியும் ஒருவனால் இருக்க முடியும் என்று காட்டுவதே இந்த இலக்கியத்தின்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

April 22, 2013
By

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன் தமிழாக்கம்      : எஸ். ராமன் 30.1 நன்னடத்தையே நல்ல பாதுகாப்பு தரும் அசோக வனத்திலிருந்த சீதையை அழைத்து வருமாறு இராமர் விபீஷணனிடம் கேட்டுக்கொண்டார். இராவணனின் அரண்மனைக்குள் அந்த வனம் இருந்ததால் அவள் அங்கு காவலில் வைக்கப்பட்டு  இருந்தாள். கைகேயிடம் சொன்னபடி அந்தப் பதினான்கு வருஷங்களும் அவர் காட்டை விட்டுவிட்டு ஒரு கிராமத்தின் எல்லையைகூடத் தாண்டவில்லை. அதனால் அவர் சீதை இருக்குமிடம் தேடி இலங்கைக்குள் நுழைந்திருந்தால், அது ஒரு விதி மீறலாகி இருந்திருக்கும். சீதையை மீட்பதற்குத்தானே அவர்கள் கடலில் பாலம் கட்டியும், பலத்த இழப்புடனும் அரக்கர்களுடன் போரிட்டார்கள் என்பதால்,... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10

April 10, 2013
By

எப்போது புத்தி அடங்கி உலகினைப் பற்றி அறிவிக்காது, நமது இருப்பைப் பற்றி மட்டுமே அறிய வைக்கிறதோ அப்போது உள்ள "நான்" எனும் உணர்வு அப்போது மட்டும் அல்லாது, எப்போதும் உள்ள தனது இயல்பே என்று உணர்ந்து, தனது எல்லா நிலைகளிலும் அப்படியே ஒருவன் இருப்பதுதான் ஞானம் அடைவது அல்லது முக்தி பெறுவது என்று சொல்வார்கள். அந்த நிலையில் ஒருவனுக்கு உலகம் என்று தனியாகத் தெரியாது; எல்லாம் தானே என்று உணரப்படும். அதனால் உலக காரியங்களில் ஈடுபடும்போதும் தனக்கே எல்லாம் செய்துகொள்வது போலவே உணரப்படும். அதனால் உலகமும், உலகில் உள்ளவைகளும் தெரிந்தாலும் அதை வேறாகப் பார்க்க மாட்டான். எப்போது... [மேலும்..»]

2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை... JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29

March 30, 2013
By

வால்மீகி இராமாயணத்தில் எழுதியிருக்கும் போர் முறைகளும், தளபதிகள் வகுக்கும் வியூகங்களும், சண்டையில் நடக்கும் பேச்சுக்களும் வாள் வீச்சுக்களும், ஆயுதங்கள் பற்றியும் அவைகளைக் கையாளும் விதமும் என்று விதவிதமாக விவரங்கள் இருப்பதும், அதை அவர் விவரிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகளும் அவரைப் போரில் ஒரு கை தேர்ந்த கலைஞர் என்றுதான் காட்டுகிறது. அவரது சொற்களும், விவரிப்புகளும் ஒரு பத்திரிக்கையின் போர் நிருபரையே பிரமிக்க வைக்கும் அளவு இருக்கின்றன.... இராமாயணக் காலத்திலிருந்து இன்றைய போர் முறைகள் வெகுவாகவே மாறியிருந்தாலும், போர் புரிய வேண்டிய மனோநிலை, வேண்டிய தைரியம், திறன், முயற்சி, பொறுமை என்ற எல்லாக் குணங்களும் இன்றும் போருக்கு வேண்டிய முக்கியமான... [மேலும்..»]

கன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்

March 26, 2013
By

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கே ஹிந்து சமயத் தத்துவம் தான் உயிர்நாடியாக விளங்கிற்று. "ஹே ராம்" என்பதுதான் அதன் தொடக்கமும் முடிவும் ஆகும். இந்தியப் பாரம்பரிய மதக் கருத்துக்களைத்தான் காந்தி தயங்காமல் உபயோகித்து இந்தியர்களை ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைத்தார். இந்து சமயத்திற்கே உரித்தான அனைத்தையும் துறக்கும் மனப்பான்மையைக் காட்டும் ஒரு கோவண ஆண்டியின் கோலத்தையே கிட்டத்தட்ட தானும் தழுவிக் கொண்டு, நாற்பதுகளில் பாரத தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக தளராது அலைந்து கொண்டு, அவர் இந்தியக் குடிமக்களின் மத உணர்வை அதற்குப் பயன்படுத்தினார். அவருக்கும் வெகுகாலம் முன்பாக அப்படி உலவிய ஆதி சங்கரரின் உருவகத்தை அப்படி வரவழைத்த... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey