Blog Archives

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 28

நிம்மதியாக வாழவேண்டும் என்றால் கையில் சுற்றிய பாம்பைத் தூக்கி எறியவேண்டும். அதுபோல தர்மத்தின் பாதையில் செல்லாது, பாவம் சேர்க்கும் கொடிய வழிகளையே விரும்பும் தலைவனை அப்புறப்படுத்தவேண்டும்.... மனைவியோ, உறவினர் வேறெவரோ இறந்தால் அவர்களுக்குப் பதில் வேறு எவரையாவது, ஏதோ ஒரு இடத்திலாவது கண்டுபிடிக்க முடியும். ஆனால் சகோதரன் இறந்துவிட்டால் அவனுக்குப் பதிலாக வேறெவரும் இருக்க முடியாது... தன்னைச் சார்ந்தவர்களைத் துறந்துவிட்டு, அவர்களை எதிரியிடம் காட்டிக்கொடுப்பதால் தனக்கு நன்மை உண்டு என்று ஒருவன் நினைப்பது தவறானது. எதிரிகள் முதலில் மற்றவர்களை அழித்துவிட்டு, கடைசியில் யார் காட்டிக் கொடுத்தானோ அவனையும் ஒழித்துவிடுவார்கள்.... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8

February 22, 2013
By

புனிதமான கங்கையில் குளித்துவிட்டு ஆச்சாரியார் தன் சீடர்களுடன் வரும்போது, எதிரே ஒரு புலையன் நான்கு நாய்களைப் பிடித்துக் கொண்டு வருகிறான். சீடர்கள் அவனை அவர் மேல் படாதவாறு ஒதுங்கச் சொல்ல, அப்போது அவன் சங்கரரைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்: "யதிகளில் சிறந்தோரே, அன்ன மயத்தாலான இந்த சரீரத்தை அன்ன மயமான இன்னுமொரு சரீரத்திலிருந்து விலகச் சொல்கிறீர்களா? அல்லது ஒரு சைதன்ய சொரூபத்தில் இருந்து இன்னொரு சைதன்ய சொரூபத்தை அகலும்படிச் சொல்கிறீர்களா? கங்கை நதியில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பம், சண்டாளனின் குடிசையின் பக்கத்தில் இருக்கும் குளத்தில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பத்திலிருந்து வேறாகுமோ? பொன் குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாசம்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

February 20, 2013
By

தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே   அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான். ஒரு சண்டையில் எதிரியை வெல்ல... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7

February 5, 2013
By

எந்த ஒரு பொருளுக்கும், செயலுக்கும் அவை ஏற்பட பல காரணங்கள் இருக்கும். ஒரு குயவன் பானையைச் செய்யும்போது அதற்கு பல விதமான பொருட்களும் தேவை என்றாலும் அவைகளுள் மண் மூலப் பொருளாய் உள்ளதால் அது முதற் காரணம் (உபாதான காரணம்) எனப்படுகிறது. பானையைச் செய்யும் குயவனின் புத்தியிலேயே அதை உருவாக்கப் போகும் திட்டம் உள்ளதால் குயவனை நிமித்த காரணம் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கும்போது, நீர் குமிழி ஒன்று கிளம்புவதற்கு தண்ணீர்தான் முதல் காரணமாக அமைகிறது. அந்த நீர்க் குமிழியின் வாழ்க்கைச் சக்கரத்தை வைத்துக் கொண்டு இங்கு மேலும் விளக்கம் வருகிறது. நீரின் மேற்பரப்பில் புறப்பட்டு எழும் நீர்க்குமிழியை... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

January 30, 2013
By

ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ... [மேலும்..»]

உள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்

January 28, 2013
By

அமைச்சர் ஷிண்டே உண்மையைத்தான் சொல்கிறார் என்று எவராவது சொன்னால், அமெரிக்க அரசும் ஐ.நா.வும் காஸ்மானி, தாவூத், எல்.இ.டி. இவர்கள் அனைவர் பற்றியும் சொல்வது பொய் என்றாகிறது. சிமி தலைவர்களை சோதித்து நடந்ததை அறிந்ததும் பொய்யே. இதைவிட கேவலமானது என்று வேறு ஏதாவது இருக்க முடியுமா?... மாலேகாவ்ன் வழக்கு விநோதமாக சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்..எஸ். எப்படி அவர்களுடன் கை கோர்த்துச் செயல் ஆற்றியிருக்க முடியும்? ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிகிறதா?.... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.

January 24, 2013
By

உலகம் என்று நாம் காண்பது நம் உடலில் உள்ள கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் என்ற ஐந்து கர்ம இந்திரியங்கள் மூலமாகவும், அவை வழியே பெறப்படும் தகவல்களின் மேல் நாம் வளர்க்கும் எண்ணங்கள் மூலமாகவும் நம் மனதில் பதிந்துள்ள ஓர் உருவகம்தான். இந்திரியங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எப்படி இருந்தாலும், இறுதியில் அவைகளைப் பற்றிய நமது எண்ணங்கள் முன்னதைவிட வலிமை வாய்ந்தனவாக இருக்கின்றன. தற்போது வரும் தகவல்களுடன், முன்பு அவை தொடர்பான வந்த தகவல்களும் அவை பற்றிய எண்ணங்களும் சேர்ந்து ஒரு தொகுப்பாக மனதில் பதிவதுதான் அந்த வலிமைக்குக் காரணம்.... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

January 1, 2013
By

அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் 'பிணம் சுடு தடி போல்' என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்.... தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

December 10, 2012
By

வானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான்.... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

December 5, 2012
By

அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது.... கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்... . கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்.... [மேலும்..»]