Author Profile: ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி
Biography »
Publications »
Posted in சமூகம் on 11 April 2009
Stats: பார்வை: 583 and 13 Comments
பொதுவாகவே ஊழலையும், நேர்மையின்மையையும், சுயநலத்தையும், சுரண்டலையும் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து நாட்டு அதிபர் வரை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். ஒருவன் செய்யும் குற்றத்தை இன்னொருவன் தட்டிக் கேட்கத் தகுதி இல்லாத அளவு, ஒட்டு மொத்த சமுதாயமும் நேர்மையற்றதாக மாறிக்கொண்டு இருக்கிறது.
Posted in ஆன்மீகம் on 24 December 2008
Stats: பார்வை: 1,071 and 3 Comments
இந்திய ஆன்மீக சிந்தனையில், சைவமும் வைணவமும் இரு பெரும் நதிகளாகப் பொங்கிப் பிரவகிக்கின்றன. ஒரே இறைவனை அதாவது பிரம்மத்தை சிவமயமாகவும், விஷ்ணு மயமாகவும் இரு வண்ணங்களில் நமது ஆன்மீக முறைகள் சித்தரிக்கின்றன. இந்த இரு பெரும் நதிகளின் சங்கமமாக ஐயப்பன் இருக்கிறான்…
Posted in தேசிய விழாக்கள் on 18 December 2008
Stats: பார்வை: 1,139 and 15 Comments
இந்த வார குமுதம் ஜோதிடம் புத்தகத்தில், சிறப்புக் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. பொதுவாக இது போன்ற கட்டுரைகளை பொது ஊடகங்களில் காண்பது அரிது. ஹிந்து விரோத சக்திகளின் கையில் சிக்கியுள்ள ஊடகங்கள் தொடர்ந்து பொது மக்களை ஒரு வித மூளைச் சலவைக்கு ஆளாக்கி வருகின்றன. ஹிந்துக்களுக்குள் பிளவுகள் ஏற்படுத்துவது, ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை இருட்டடிப்பு செய்வது, உண்மையை திரிப்பது என்று பலவித வரலாற்று தவறுகளை ஊடகங்கள் செய்து வருகின்றன. வெறும் வியாபார நோக்கம் மட்டும் அல்லது, தேச [...]
Posted in பயங்கரவாதம் on 29 November 2008
Stats: பார்வை: 467 and 3 Comments
நமது நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிற நேரம் இது. இந்த மும்பை தீவிரவாத தாக்குதல் அரசுக்கு மட்டும் அல்ல, சாதாரணப் பொதுமக்களுக்கு கூடப் பல அம்சங்களில் கண்ணைத் திறந்துள்ளது. பாகிஸ்தான் எந்த அளவு பலகீனமாக, தன் குடிமக்களுக்கும், வந்து போகிற வெளிநாட்டவர்க்கும் பாதுகாப்பின்றி இருக்கிறதோ அதே போல்தான் இந்தியாவும் என்று இந்தத் தீவிரவாதிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். வெறும் பத்து இருபது பேர்கள் ஒரு நாட்டையே தன் ராணுவம், கடற்படை, சிறப்புக் காவல்படை என்று என்னென்ன வகை படைகள் வைத்திருக்கிறதோ அவை எல்லாவற்றையும் கொண்டு வந்து நாட்கணக்கில் சண்டையிட வைத்து விட்டார்கள்.
Posted in இந்து மத விளக்கங்கள் on 11 November 2008
Stats: பார்வை: 1,903 and 2 Comments
யோகம் என்பது ஏதோ மூச்சு பயிற்சியோ, அல்லது உடற்பயிற்சியோ மட்டும் அல்ல. அது ஒரு ஆன்மீகத் தேடலுக்கான சிறந்த வழிமுறை. யோகம் சனாதன தருமத்தின் ஆணிவேர். இந்த கட்டுரை யோகத்தின் வெவ்வேறு பெயர்களை சொல்லி அவற்றை சுருக்கமாக விளக்க மேற்கொள்ளப்பட முயற்சி மட்டுமே. யோக சாத்திரத்தின் ஒவ்வொரு யோக முறையும் கடலளவு பெரியது. சனாதன தருமத்தில் பங்கு வகிக்கும் எந்த மார்க்கத்திலும், அது முருக வழிபாடாகட்டும், அனுமனின் வழிபாடாகட்டும், சக்தி வழிபாடாகட்டும், வைணவ வழிபாடாகட்டும், எந்த வழிபாட்டிற்கும் அடிப்படையானது யோகம். இதுவே அந்தந்த இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுத்தந்து முக்தி அடைய உதவக் கூடியது.
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 18 September 2008
Stats: பார்வை: 1,142 and 1 Comment
இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தில் யோகம் என்பது நான்கு பிரிவுகளாகவும், ஒவ்வொரு பிரிவிலும் எட்டு அங்கங்களை கொண்டதாகவும் பார்த்தோம். அந்த எட்டு அங்கங்களை இந்த பகுதியில் சுருக்கமாக பார்ப்போம். அஷ்டாங்க யோக முறையில் ஐந்து பகுதிகள் - அங்கங்கள் பகிரங்கமாக அதாவது உடலை கட்டுப் படுத்துவதும், மூன்று பகுதிகள் அந்தரங்கமாக உள்ளத்தை - மனதை கட்டுப்படுத்தக் கூடிய பயிற்சியுமாக பிரித்து கூறுவர். அதாவது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம் ஆகியவை பகிரங்கமாகவும் - வெளிப்படையாக உடலை கட்டுப்படுத்தவும்; தியானம், தாரணை, சமாதி ஆகியவை மனதை கட்டுப்படுத்தவும் என பிரிக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் மிகச் சுருக்கமாக காண்போம்.
Posted in இந்து மத விளக்கங்கள் on 6 September 2008
Stats: பார்வை: 1,942 and 7 Comments
ஆன்மீகத்தில் யோகம் என்ற சொல்லை, மனிதன் தன் முயற்சிகளின் உச்சமாக அடையும் இன்ப துன்பங்கள் அற்ற விடுதலையே யோகம் என்றும், இன்னொரு விதத்தில் அந்த விடுதலை அடைவதற்கு உரிய வழியே யோகம் என்றும் இருவிதமான பொருளிலும் பயன்படுத்துவர். ஞானியர் வகுத்த பல்வேறு ஆன்மீக மார்க்கங்களில் யோகம் என்பது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி முறையாகவும், மனதை அடக்கி செய்யக் கூடிய பயிற்சி முறையாகவும் முக்கியமாக இரு பகுதிகளை கொண்டு விளங்குகிறது. தற்காலத்தில் பரவலாக யோகா என்பது உடல் வளக் கலையாகவும், மனவளக் கலையாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை யோகத்தினால் அடையும் முதல் படி மட்டுமே - யோகம் இதைவிட பெரியதொரு நன்மைக்காக ஏற்பட்டதாகும்.
Posted in ராமாயணம், வைணவம் on 6 August 2008
Stats: பார்வை: 735 and 3 Comments
ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும்.
Posted in ஆன்மீகம், வைணவம் on 18 June 2008
Stats: பார்வை: 679 and 3 Comments
வனப்பு மிகுந்த இந்த ஸ்ரீராம தரிசன காட்சியை கண்ணுற்ற தேசிகரின் உள்ளம் கசிந்து உருகுகிறது. தேசிகரும் இளைய பெருமாளைப் போலத்தான். உலக விவகாரங்கள் பற்றிய அறிவு ஏற்படும் முன்னரே அவருக்கு பக்தி, பரம்பொருள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. “த்வமேவமாதாச பிதாத்வமேவ” என்ற கீதா வாக்யத்தை அடியொற்றி பரம்பொருளான நாராயணனையே தாயாகவும் தந்தையாகவும் உளமாற நினைத்து உருகி பல பாசுரங்கள் இயற்றியிருக்கிறார்.
Posted in சமூகம் on 15 June 2008
Stats: பார்வை: 650 and 10 Comments
நமது சமூகத்தில் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) என்றாலே அவர் வெறும் கோழையாக, சுயநல வாதியாக, சமூகப் பொறுப்பற்றவராக இருப்பார் என்கிற வகையில் மறைந்த பெரும் எழுத்தாளர் சுஜாதாவிலிருந்து, ‘கற்றது தமிழ்’ படம் எடுத்த இயக்குனர் போன்றோர் வரை ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் உண்மையில் உள்ளூரில் வாழ்க்கை நடத்துபவர்களை விட, வெளிநாடுகளில் வாழ்ந்து அதன் சவால்களும் சங்கடங்களும் அனுபவித்து வெற்றி அடைந்தவர்கள், மன உறுதி, செயல் திறன், தைரியம், பொறுமை என்று பலவற்றிலும் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
Posted in வைணவம் on 8 June 2008
Stats: பார்வை: 1,004 and 4 Comments
தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். காவிய நாயகனாகப் பார்த்தால் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.. ராமன் என்கிற அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல. அங்கே ஒவ்வொரு கதை மாந்தரும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து நமக்கு காட்டியதுதான் ராமாயணம். நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.
Posted in ஆன்மீகம் on 27 April 2008
Stats: பார்வை: 870 and No Comments
இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “என்னப்பா… பரீட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்கே…”, அதற்கு அடுத்தவன் அலுத்துக்கொண்டான்… “என்னவோ போ… கணக்கு பரிட்சைய நினைச்ச பயம்மா இருக்கு. பிள்ளையாருக்கு தேங்கா உடைக்கறதா தோப்புக் காரணம் போட்டுப் பிரார்த்தனை எல்லாம் செய்துகொண்டு இருக்கேன்..”. அதற்கு அடுத்தவன் “அது சரி. அதான் பிள்ளையார்க்கிட்ட வேண்டிக்கிட்ட இல்ல.. அவரே எழுதி கொடுத்துடுவார்”. இவன் “ஆமா.. முதல்ல அவரே கணக்குல வீக்கா இருந்தா என்ன செய்யறது?” என்று சிரித்துக் கலைந்தார்கள்.
எங்கே பிரார்த்தனை செய்கிறோமோ [...]
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்