யோகம் – ஒரு எளிய அறிமுகம்

ஆன்மீகத்தில் யோகம் என்ற சொல்லை, மனிதன் தன் முயற்சிகளின் உச்சமாக அடையும் இன்ப துன்பங்கள் அற்ற விடுதலையே யோகம் என்றும், இன்னொரு விதத்தில் அந்த விடுதலை அடைவதற்கு உரிய வழியே யோகம் என்றும் இருவிதமான பொருளிலும் பயன்படுத்துவர். ஞானியர் வகுத்த பல்வேறு ஆன்மீக மார்க்கங்களில் யோகம் என்பது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி முறையாகவும், மனதை அடக்கி செய்யக் கூடிய பயிற்சி முறையாகவும் முக்கியமாக இரு பகுதிகளை கொண்டு விளங்குகிறது. தற்காலத்தில் பரவலாக யோகா என்பது உடல் வளக் கலையாகவும், மனவளக் கலையாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை யோகத்தினால் அடையும் முதல் படி மட்டுமே – யோகம் இதைவிட பெரியதொரு நன்மைக்காக ஏற்பட்டதாகும்.

View More யோகம் – ஒரு எளிய அறிமுகம்

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3

ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும்.

View More ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2

வனப்பு மிகுந்த இந்த ஸ்ரீராம தரிசன காட்சியை கண்ணுற்ற தேசிகரின் உள்ளம் கசிந்து உருகுகிறது. தேசிகரும் இளைய பெருமாளைப் போலத்தான். உலக விவகாரங்கள் பற்றிய அறிவு ஏற்படும் முன்னரே அவருக்கு பக்தி, பரம்பொருள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. “த்வமேவமாதாச பிதாத்வமேவ” என்ற கீதா வாக்யத்தை அடியொற்றி பரம்பொருளான நாராயணனையே தாயாகவும் தந்தையாகவும் உளமாற நினைத்து உருகி பல பாசுரங்கள் இயற்றியிருக்கிறார்.

View More ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2

அக்கரைப் பச்சை

நமது சமூகத்தில் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) என்றாலே அவர் வெறும் கோழையாக, சுயநல வாதியாக, சமூகப் பொறுப்பற்றவராக இருப்பார் என்கிற வகையில் மறைந்த பெரும் எழுத்தாளர் சுஜாதாவிலிருந்து, ‘கற்றது தமிழ்’ படம் எடுத்த இயக்குனர் போன்றோர் வரை ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் உண்மையில் உள்ளூரில் வாழ்க்கை நடத்துபவர்களை விட, வெளிநாடுகளில் வாழ்ந்து அதன் சவால்களும் சங்கடங்களும் அனுபவித்து வெற்றி அடைந்தவர்கள், மன உறுதி, செயல் திறன், தைரியம், பொறுமை என்று பலவற்றிலும் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

View More அக்கரைப் பச்சை

ஸ்ரீ மகாவீர வைபவம்

தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். காவிய நாயகனாகப் பார்த்தால் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.. ராமன் என்கிற அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல. அங்கே ஒவ்வொரு கதை மாந்தரும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து நமக்கு காட்டியதுதான் ராமாயணம். நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.

View More ஸ்ரீ மகாவீர வைபவம்

வேண்டியதை அருளும் விநாயகன்

இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “என்னப்பா… பரீட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்கே…”, அதற்கு…

View More வேண்டியதை அருளும் விநாயகன்