Blog Archives

அரசியல்

போகப் போகத் தெரியும் – 37

October 7, 2009
-
போகப் போகத் தெரியும் – 37

உடல் என்ற அடையாளத்தை உதற வேண்டும் என்று நினைக்கும் சமணத் துறவிகள் மீது தாக்குதல்; நிர்வாண ஆராய்ச்சி செய்த ஈவெராவுக்கு சிலை வைத்து பாராட்டு. தமிழகமே இதுதானா உன் தலைவிதி?

மேலும் »

அரசியல்

போகப் போகத் தெரியும் – 36

September 29, 2009
-
போகப் போகத் தெரியும் – 36

வைரப்பன் போலிஸ்காரரை அப்படியே அரைகுறை சவரத்தோடுவிட்டுவிட்டு எழுந்துவிட்டார். போலிஸ்காரர் மிரட்டிப் பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் மசியவில்லை. இறுதியில் போலிஸ்கார் வைரப்பன் மீது பொய்வழக்கு போட்டு அவரை கோட்ர்டுக்கு இழுத்துச் சென்றார். நீதிபதி வைரப்பனிடம் 'மிச்ச சவரவேலையும் செய்து முடி' என்றார். அதற்கு வைரப்பன் சொன்னார். 'நம்மாலே அது முடியாதுங்க, சாமி வேணுமானா நீங்களே செய்துவிட்டுடுங்க' என்று சொல்லிக்கொண்டே தனது ஆயுதப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீதே வைத்துவிட்டார்.

மேலும் »

அரசியல்

போகப் போகத் தெரியும் – 35

September 23, 2009
-
போகப் போகத் தெரியும் – 35

வேதாந்தச் சிங்கமான சுவாமி விவேகானந்தர் அமெரிக்கப் பயணத்தில் இருந்தபோது, இங்கர்சால் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்ற தகவலை இந்நாட்டு இங்கர்சால்களும் அவருடைய இளவல்களும் அறிவார்களா? அகலமும், ஆழமும் இல்லாத புலமையை வைத்துக்கொண்டே இவர்கள் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுவிட்டார்கள்.

மேலும் »

அரசியல், தொடர்

போகப் போகத் தெரியும் – 34

September 19, 2009
-
போகப் போகத் தெரியும் – 34

‘நீ எவ்வளவுக்கெவ்வளவு முகத்தை மூடிக்கொள்கிறாயோ அவ்வளவுகவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்றான் நண்பன். திராவிட இயக்க வரலாறும் இப்படித்தான். எவ்வளவுக்கெவ்வளவு அது நீர்த்துப்போனதோ அவ்வளவுக்கவ்வளவு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும் »

அரசியல், தொடர்

போகப் போகத் தெரியும் – 33

September 7, 2009
-
போகப் போகத் தெரியும் – 33

'கடவுள் இல்லை' என்று சொல்லும் ஈ. வெராவின் திராவிட இனவாதக் கோரிக்கையை எதிர்த்து, ‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழ் எழுதியது. ‘திராவிட நாட்டில் அல்லாவுக்கும் குர் ஆனுக்கும் இடமிருக்காது’ என்று அது எச்சரித்தது. "...நபிகள் நாயகம் விழாக்களுக்கு நமது அண்ணாவும் பெரியாரும் போகாமல் நடந்தது கிடையாதே - பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதாரம் நம்மைப்போல யாரும் தந்தது கிடையாதே - அவர்களும் திராவிட முஸ்லிம்கள்தான் என்ற எண்ணத்தை நாம் மாற்றியது இல்லையே..." --மு. கருணாநிதி/ ஆறுமாதக் கடுங்காவல்

மேலும் »

அரசியல், தொடர்

போகப் போகத் தெரியும் – 32

August 31, 2009
-
போகப் போகத் தெரியும் – 32

..... சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில் தலையிட்டது என்று சொல்லவேண்டி வருமானால், அரசாங்க சட்ட திட்டங்களை மீறவோ அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்.. எந்த ஜாதி, எந்த மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குள் துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படி செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக்கொள்ளுவதும் இல்லை.... காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயமாகும். -- தோழர் ஈ.வெ.ராமசாமி அறிக்கை

மேலும் »

அரசியல், இலக்கியம்

போகப் போகத் தெரியும் – 31

August 27, 2009
-
போகப் போகத் தெரியும் – 31

’தேசத்திற்காகவும் கட்சிக்காகவும் தியாகங்கள் பல செய்தவர்கள் எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் எந்தவிதமான தேசிய மரியாதைக்கும் லாயக்கற்றவர்களான திமுக-வினர் பதவியும் அதிகாரமும் பெற்று, காங்கிரசுக்கு சவால்விட்டுத் திரிகிற கொடுமை சகிக்க முடியாமலிருந்தது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் மக்கள் மத்தியில் நோய்மாதிரிப் பரவிவந்த அவர்களது போலிப் புகழும் பேசிய பொய்களும் மறுத்துரைக்கப்படாமலிருப்பது ஒரு தேசிய அறிவுலக அவமானம் என்று நான் மனம் புழுங்கினேன்.’ - ஜெயகாந்தன்.

மேலும் »

அரசியல்

போகப் போகத் தெரியும் – 30

August 24, 2009
-
போகப் போகத் தெரியும் – 30

மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணா ஏன் வரவில்லை என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘முத்தன் ஏன் வரவில்லை? அப்புறம் எம்.எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே’ என்று பதிலளித்தார்.

மேலும் »

அரசியல்

போகப் போகத் தெரியும் 29

August 20, 2009
-
போகப் போகத் தெரியும் 29

ஈ.வெ.ராவின் சுயமரியாதைத் திருமணம் பற்றிப் பலர் பேசுவதைப் பார்க்கிறேன். அதைப் பற்றி அந்தப் பகுதி வரும்போது விரிவாகப் பேசுவேன். இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 'சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்திய ஈ.வெ.ராவின் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம் அல்ல.'

மேலும் »

அரசியல்

போகப் போகத் தெரியும் – 28

August 17, 2009
-
போகப் போகத் தெரியும் – 28

சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.

மேலும் »