Blog Archives

வரலாறு

புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

"பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுத முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாஷத்தமானமாய்ப் போறாப் போலே இருந்தது. பாதிரிகளுக்கும், தமிழ்க் கிருத்துவர்களுக்கும், துரைக்கும், துரை பெண்சாதிக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்."

மேலும் »

அரசியல்

ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்

ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்

திக்விஜய் சிங் என்பவருக்கு "ஆர்.எஸ்.எஸ்ஸோஃபோபியா" என்கிற வியாதி போல இருக்கிறது. சிறு குழந்தைகளை மிரட்டுவதற்குச் சில பெரியவர்கள், பூச்சாண்டி என்பார்கள் அதுபோல அடிக்கடி அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.ஆள் என்கிறார். இருக்கட்டுமே. ஒருவர் ஊழலை எதிர்த்துப் போராடுகிறார், அப்படிப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லது அனுதாபி என்றால் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊழலை எதிர்க்கிறது என்பது பொருள். அல்லது ஊழலை எதிர்ப்பவரை ஆதரிக்கிறது என்று போருள். இவருக்கு ஏன் இப்படி அடிவயிறு கலங்குகிறது. ஊழலில் ஊறித்திளைத்த இந்தக் கும்பல் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டிவிட்டால், அடடா! என்ன இது? இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பயங்கரவாத தேசவிரோதக் கும்பல் என்று மக்கள்...

மேலும் »

கலைகள்

மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்

மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்

இறை வழிபாடு முதன்மையிடம் பெற்றிருந்தாலும் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் பேணிப் பாதுகாத்தது நமது ஆலயங்களே... குத்துப் பாட்டுகளும் கவர்ச்சி நடனங்களும் ஆலயங்களுக்கு ஏற்றவை அல்ல... தமிழகத்தில் இசைக்கென்றும், நாட்டியத்துக்கென்றும் ஒரு பல்கலைக் கழகம் அமைய வேண்டியது அவசியம்...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!

புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!

மக்களை அச்சுறுத்தும் கொள்ளைக்காரியாக இருந்த பூலான் தேவி, இந்த நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்... மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திலும், மாநிலச் சட்டமன்றங்களிலும் இருப்போர், எந்தவிதக் குற்றங்களைச் செய்தாலும் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது... காங்கிரஸ் கட்சி, தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வின் போதாவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று சொல்லியிருக்கிறார்களா?...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

1967 தேர்தல் வந்தது. பிடித்தது தமிழ் நாட்டுக்குச் சனியன். இல்லாத பொய், பித்தலாட்டங்கள். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள். எதிரிகள் மீது வசைமாறி பொழிதல், எதிர்கட்சிக் கூட்டங்களில் வன்முறை, வெறியாட்டம். கருணாநிதி உட்பட சிலர் அடுக்கு மொழியிலும், அலங்காரமாகவும் பேசினாலும், கண்ணியக் குறைவாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? . இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, "ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!" என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?

மேலும் »

இசை, கலைகள், மகளிர்

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!

மேலும் »

அரசியல்

இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?

இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?

அறியாமையின் காரணமாக நடந்த சமுதாய அடக்குமுறையினால் சிலர் தாழ்த்தப்பட்டிருந்த நிலை அந்நியர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது... எத்தனை நிகழ்வுகளில் 'இந்துக்கள்' என்று இந்த அந்நிய சக்திகளால் வர்ணிக்கப்படுபவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்... இவர்களில் யார் யார் எந்த நாட்டுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அந்த நாட்டுக்கு 'டாட்டா' காட்டி அனுப்பி வைப்போம்.

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

யார் இந்த நீரா ராடியா?

யார் இந்த நீரா ராடியா?

நூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி?... நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது... இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

மேலும் »

அரசியல்

மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்

மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்

மன்மோகன் சிங் சுற்றிலும் நடக்கும் புயல், மழை, இடி, சூறாவளி எதனைப் பற்றியும் கவலைப் படாமல், அமைதியாக, ‘விசுக் விசுக்’ என்று நடந்து கொண்டு தன் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்... முரசொலி மாறன் படத்துக்கு மலர் போட வந்த அவர், ராசாவைத் தட்டிக் கொடுக்கிறாரே, அதன் பொருள் என்ன?... ‘ஸ்பெக்ட்ரம்’ பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையின் மீது சந்தேகப்படுவது வெட்கக்கேடானது.

மேலும் »