இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை... இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம் காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில் இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது...
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

