“இந்தக் கள்குடத்திலும், ஓடும் புனிதமான கங்கையிலும் சூரியன் ஒரேமதிரியாகத்தானே பிரகாசிக்கிறான்? நான் புலையன், நீங்கள் உயர்ந்தவர் என்பதாலன்றோ என்னை விலகச் சொல்கிறீர்கள்? அத்வைதத்தில் உமக்கே சந்தேகமா?”
நீங்கள் அத்வைதம் கற்பிக்கும் ஆச்சாரியார் இல்லையா! புலையன் என்று என்னை விலகிப்போகச் சொல்கிறீர்களே, அது என் தேகத்தையா, இல்லை, என் ஆத்மாவையா? நம் இருவரின் உடம்பும் சோற்றால் ஆனவை; இந்தச் சோற்றாலான உடம்பு, அந்தச் சோற்றாலான உடம்பைவிட்டு விலகவேண்டுமா?
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம் – பகுதி 2.
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு. வையவன் உரையாடல் வடிவில் எழுதி ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம்.