Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

ஆன்மிகம்

வழித்துணை

வழித்துணை

மனித வாழ்வில் எந்த நிலையில் பார்த்தாலும் ஒரு துணை தேவைப் படுகிறது. மனிதன் பிறந்ததும் தாயின் துணையோடு வாழ ஆரம்பிக்கிறான். கொஞ்சம் பெரியவனாகி விளையாடும் பருவம் வந்ததும் விளையாட ஒரு துணை தேவைப்படுகிறது. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் பக்கத்து வீட்டுப் பெரிய பையனோ, பெரிய பெண்ணோ, ஆயாவோ துணைக்குவருகிறார்கள். பள்ளியிலோ பாடங்களுக்குப் பாடவாரியாகத் துணைவன்! நாங்கள் படித்த காலத்திலெல்லாம் இந்தத் துணைவன் கிடையாது. இப்பொழுதோ 2, 3ம் வகுப்புகளுக்குக் கூட துணைவன் வந்து விட்டது! பரீக்ஷை வந்து விட்டால் பேப்பரில் ஸரஸ்வதி துணை. முருகன் துணை என்று மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள். படித்து... [மேலும்..»]

இலக்கியம்

மதியும் காந்திமதியும்

மதியும் காந்திமதியும்

காந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ் நெல்லை நகரில் கோவில் கொண்டிருக்கும் காந்திமதி அம்மையின் பேரில் அழகிய சொக்கநாதர் என்பவர் “காந்திமதி அம்மன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் பாடப் பெற்றது. காப்புப் பருவம், கலைமகள் துதி அதிகாலையில் எழுந்து நதியில் நீராடி கோவிலுக்குச் சென்று கதவைத் திறந்து பூஜைக்குச் செல்லும் அர்ச்சகர்களைப் பார்க்கிறோம்.சூரியனை இப்படிப் பட்ட ஒரு அர்ச்சகராகப் பார்க்கிறார் புலவர். சூரியன் தினமும் கடலில் மூழ்கி ஒவ்வொரு நாளும் தனது ஆயிரம் பொற்கரங்களால் வெள்ளிக்கோவிலின் கதவைத் திறக்கிறானாம். அது என்ன வெள்ளிக் கோவில்? கமலாலயம். வெள்ளைத்தாமரையாகிய கோயில் தான்.வெள்ளிக் கோவிலில் வீற்றிருக்கும் கலைமகள் புலவரின் கண்களிலும்,... [மேலும்..»]

வழிகாட்டிகள், வைணவம்

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார்

ஒருநாள் பாணர் கண்களை மூடிக் கருத்தினில் அரங்கனை நினந்து கவனந்தனை மறந்து அரங்கனையே தியானித்துக் கொண்டிருந்தார். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு செல்வதற்காக அங்குவந்த லோகசாரங்க முனிவர், இவரை தூர விலகும்படிச் சொன்னார். ஆனால் அரங்கனையே நினைத்துக் கொண்டிருந்த பாணர் காதில் இது விழவில்லை. அவர் கவனம்தான் பெருமாளிடம் சென்று விட்டதே! அதனால் கோபம் கொண்ட லோகசாரங்கர் ஒரு கல்லைத் தூக்கிப் பாணர்மேல் எறிய பாணர் முகத்தில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். 'ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே' என்று வருந்தி விலகிச் சென்றார்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

அக அழகும், முக அழகும் – 2

அக அழகும், முக அழகும் – 2

போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது.... சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்? [மேலும்..»]

இலக்கியம்

முருகன் அலங்காரப் பாடல்:

முருகன் அலங்காரப் பாடல்:

திருச்செந்தூர் முருகனைப் பற்றிய 'அலங்காரம்' என்னும் அழகிய மரபுவழிப் பாடலின் வரிகள் மற்றும் அதன் ஒலி வடிவம் - திருமதி ஜயலக்ஷ்மி குரலில். [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

அக அழகும், முக அழகும் – 1

அக அழகும், முக அழகும் – 1

குழந்தை முருகனின் தூய பேரெழில் சூரன் உள்ளத்தில் இருந்த அக இருளை, அஞ்ஞான இருளை அகற்றி புதிய ஞானத்தை உண்டாக்கி விடுகிறது.... அதுவே கருமையும், தண்மையும், இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இந்நான்குமே ஒன்றாக அமைந்த இராமனுடைய பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆனது.... [மேலும்..»]