இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3

நவீனம் எதுவும் இல்லாத அர்த்தமும் இல்லாத ஒரு அபத்தம் தமிழில் தான் நவீனம் என்று அரங்கேறி வருகிறது. இதில் ஒரே விதிவிலக்கு ராமானுஜம் தான். அவரிடம் பாவனைகள், அலட்டல்கள் ஏதும் இல்லை. அவர் மேடையேற்ற எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நாடகமும் அதற்கு எத்தகைய மேடை வடிவம் கொடுக்கவேண்டும் என்று யோசிக்கிறார். வெறியாட்டம் வேறு, செம்பவளக்காளி வேறு, அண்டோறா வேறு வடிவங்களில் வடிவமைத்திருக்கிறார். அவை எனக்கு அர்த்தமுள்ளவையாக வந்து சேர்ந்துள்ளன. கைசிகி என்ற நூற்றாண்டு பழம் நாடகத்தைப் புதுப்பித்துக் கையாள்வதும் வேறாகத்தான்….. அவர்களுக்கு சைன்யமோ வேறு செட்டோ தேவை இல்லை. யுத்த களம் நம் கண்முன் நிற்கும். ஒரு புதிய நாடக சகாப்தத்தையே உருவாக்க விருந்த அல்காஷி அந்த மேடையைச் சுற்றிச் சுற்றி வந்து பல கோணங்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். என்னை முதலில் பிறந்த மண்ணைவிட்டு வெளி மண்ணில் தெருக்கூத்து ரசிகனாக்கிய மாலை அது. தீபம் பத்திரிகையில் எழுதினேன். கூத்துப் பட்டறை பிறந்தது அதன் விளைவு தான்….

View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2

தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன்… திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது… ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும் நாடகத்தோடு வந்த போது. அதைப் பார்த்த போது தான் ராமானுஜம் has arrived என்று எனக்குப் பட்டது.. (வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இந்தக் கட்டுரை தான். இதன் அடுத்தடுத்த பகுதிகள் வெளியாவதற்கு முன்பே 21-அக். அன்று வெ.சா மறைந்து விட்டார். இன்னும் ஆறாத கண்ணீருடன் அவரது நினைவைப் போற்றி இப்பகுதியை வெளியிடுகிறோம்).

View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1

வங்காளத்திற்கோ, மகாராஷ்டிரத்திற்கோ, அல்காஷி வந்து தான் நாடகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. மற்ற எல்லா ;பிரதேசங்களுக்கும் இருந்தது. ஆனால் அல்காஷி உருவாக்கியது உலகளாவிய நாடக்கலையின் முழு பரிணாமம்.. ராமானுஜத்தைத் தந்தும் தமிழ் நாடு உரு;ப்பட மாட்டேன்னு அடம் பிடித்தால் என்ன செய்வது? ராமானுஜமும் என்ன என்னமோ செய்து பார்க்கிறார்… தான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்து வருவதாகவும் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பார்த்த, அறிமுகமான முதல் தமிழர், நாடகம் கற்க வந்தவர். இன்னும் ஒன்றிரண்டு பேரைச் சொல்ல முடியும் தான். நாடகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தாகம் இருந்தால் ஹிந்தியும் வரும் நாடகமும் வரும் அந்த ஒரு சிலரில் ராமானுஜமும் ஒருவர்….

View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1

வானம்பாடிகளும் ஞானியும் – 2

நம்மூர் கம்யூனிஸ்டுகளே கூட மார்க்ஸை அடியோடு மறந்தாயிற்று தா பாண்டியனோ, ஜி ராமகிருஷ்ணனோ மார்க்ஸ் பெயரை உச்சரித்து எத்தனை தலைமுறைகளாயிற்று என்று கேளுங்கள். இன்று கம்யூனிஸ்ட் அரசே எங்கும் இப்பூவலகில் இல்லை. சைனாவிலும் சரி, ரஷ்யாவிலும் சரி. நிலவுவது முதலாளித்துவம். ஆக, ஞானி ஏதோ உலகத்தில் தான் இன்னமும் இருந்து வருகிறார். மார்க்ஸிசத்தில் கால் பதிக்காதவர்கள் என்று ஞானி அன்று குற்றம் சாட்டிய சிற்பி, மு. மேத்தா தமிழன்பன் போன்றோர் வாழும் வாழ்க்கையும் கொண்டுள்ள பார்வையும் வேறு. இல்லாத ஒரு மார்க்ஸிசம் கற்பனையான ஒன்று யாரை கடைத்தேற்றியது?…. ஞானி எதையும் மறைக்கவில்லை. தான் உறவாடியதும், பின்னர் ஒதுக்கி விலக்கப் பட்டதும் ஆன காலகட்டத்திலும் இப்போது முப்பது வருடங்களுக்குப் பின் தன் சிந்தனை அவற்றில் தோய்ந்து விடும் போதும் அலை மோதும் முரண்கள் எதையும் அவர் மறைக்கவில்லை. தமிழ்ச் சூழலில் இது மிகப் பெரிய விஷயம்….

View More வானம்பாடிகளும் ஞானியும் – 2

வானம்பாடிகளும் ஞானியும் – 1

கட்சியின் ஒருமித்த எதிர்ப்பையும் மீறி, இடதுசாரிகளின் தோற்றத்தில், இடது சாரிகளின் குரலில் வானம்பாடிகள் தம் தமிழ்ப் புலமைக் கட்டுக்களை உதறி, யாப்பறியா செல்லப்பா, க.நா.சு போன்றோரின் புதுக்கவிதையின் பாதையில் பயணிக்கத் தொடங்கியது எனக்கு வியப்பளித்தாலும், அவை கவிதையாக எனக்குத் தோன்றவில்லை. வெற்று ஆரவார கோஷங்களாகவே இருந்து விட்டன. வானம்பாடி இதழ் இரண்டு வருஷங்களோ அல்லது இன்னம் சில மாதங்களோ என்னவோ தான் வெளிவந்தது…. வயிற்று வலி காய்ச்சலுக்குக் கூட மாஸ்கோவுக்கு சிகித்சைக்கு விரையும் கட்சியினரிடம் வேறு என்ன எதிர் பார்க்க இயலும். இப்போது அவர்களது மாஸ்கோ புனித யாத்திரை நின்று ஒரு தலைமுறைக்காலம் கடந்து விட்டது. ஞானியின் முழு பண்பும் மனித நேயமும் சினேக பாவமும் கொண்டது தான். மார்க்ஸிஸத்தை ஏதோ மத விசுவாசத்தோடு அவர் கொண்டாலும்…

View More வானம்பாடிகளும் ஞானியும் – 1

வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2

தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பதை ‘சமரன்’ தொகுப்பு நமக்குச் சொல்லும். பேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது ‘சமரன்’ தொகுப்பிலிருந்து தெரிய வரும்…. குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும்?. விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். “நம்ம வீட்டு சமாசாரம், நமக்குள்ளே இருக்கணும்” என்று ஒரு மந்திர வாக்கியம் பிறக்கும். தன் உண்மை முகம் வெளித்தெரிய கூச்சப்படும் முகம். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்….

View More வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2

வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1

சரஸ்வதி இலக்கிய மாதப் பத்திரிகையை, நடத்தி வந்த வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் கூட நடத்தி வந்திருக்கிறார். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது… அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழில் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது… அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவென் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள. காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம். இந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான்….

View More வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1

ஒரு நிஷ்காம கர்மி

உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்…. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம்….

View More ஒரு நிஷ்காம கர்மி

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரைஉலகில்

இது நான் சென்னை வந்த புதிதில் நடந்த சங்கதி. இடையில் அவர் தமிழ்த் திரைப்பட ஒளிப் பதிவாளராக ஆகியிருந்தார் என்று நினைக்கிறேன்…. செழியன் தமிழ்த் திரையுலக யதார்த்தத்தையும் அதன் டாம்பீகத்தையும் வெறுமையையும் மிக நன்குணர்ந்தவராகவே எழுதியிருக்கிறார். இதையெல்லாம் எப்படி இவர் தமிழ்த் திரையுலகில் இருந்து கொண்டே எழுத முடிகிறது?…. எங்கு தொழில் நுட்பம் சொல்லப்படும், காட்சியாக்கப் படும் பொருளில் தன்னை மறைத்துக் கொள்ள வில்லையோ அந்த தொழில் நுட்பம் வெறும் ஜிகினா வேலை தான்… செழியன் ஒரு கலைஞன் கலை உணர்வு கொண்டவர். அதற்கு இப்புத்தகத்தின் பெரும் பகுதி சாட்சி. இப்புத்தகம் கலை உணர்வு கொண்ட சினிமா உலக மாணவர்கள் படிக்க வேண்டிய ஒன்று…

View More மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரைஉலகில்

தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்

வியாளம் – மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. எஸ்.வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்…. இளங்கலை வரலாறு படிக்கும் மாணவருக்கு கருஞ்சுழி நாடகத்தில் ஒளிப் படிமங்கள் வாழ்க்கையின் பாதையை நிச்சயித்து விடுகிறது. அலைமோதும் மன நிலையில் பல உணர்வுகள் கொட்டி அலைக்கழிக் கின்றன. மாட்டுத் தொழுவத்தில் தாத்தாவின் முறுக்கேறிய அழுகையில் புதிதாகப் பிறக்கும் பாடல்களின் குரல் வலிமை தனக்குக் கிடைகாதா என்று ஏங்கி தொழுவத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததாகச் சொல்கிறார் வேலாயுதம். க அபூர்வமான சோகத்தின் கனம் நிறைந்த கணங்கள் அவை… அவர் பயிற்றிவிப்பாளராகவே இன்றோ நாளையோ என்ற தவிப்பிலேயே வாழ்ந்தவர். வாழ்ந்தவரா, சாவை ஒத்திப்போடும் தன் வல்லமையைச் சோதித்துக்கொண்டிருந்தவரா? நாடகத் துறையில், இளம் முனைவர் பட்டத்துக்கான மாணவராக மறுபடியும் ஒரு முயற்சி….

View More தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்