[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்

ஒரறிவு படைத்த உயிர்கள் இப் பிரபஞ்சத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஈரறிவு படைத்த உயிர்களாகவும பின் அவைகள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறறிவு படைத்த உயிர்களாகப் பரிணமித்து வருகின்றன. இத்தகைய பரிணாமத்தின் உச்சநிலையில் இருப்பவன் மனிதன் ஆகின்றான். இனி மனிதனிலும் மிக்கதோர் உயிர் வகையை இப்பூவுலகில் யாரும் பார்த்ததில்லை. இப்பூவுலக அமைப்பில் மனிதனே அதிகமான இந்திரியங்களும், விரிந்து செயலாற்றக் கூடிய அந்தக்கரணமும் வாய்க்கப் பெற்றவனாக இருக்கிறான். இனி, மனித நிலைக்கும் மேலான ஒரு நிலை உண்டு. அது தெய்வீக நிலை எனப்படும். மனம் மனிதனிடத்து ஓயாது அலையும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஆகையால் தான் மனிதன் அநேக காமங்களுக்கு ஆளாகிறான். அக்காமங்களைத் தெய்வீகக் காமமாக மனிதன் மாற்றியமைக்கத் தெரிந்து கொண்டால் காமத்தின் வேகம் குறைகிறது. காமம் முற்றிலும் அகன்றவிடத்து மனிதன் தெய்வ சொரூபமாகிவிடுகிறான். மனிதநிலையில் இருக்கும் நாம் இந்த மேலாம் நிலையை அடைய முயற்சி எடுத்துக்கொண்டு அந்நிலையை யடைகிறபொழுது நம்முடைய காமத்துக்கும் ஒரு முடிவு உண்டாகிறது. மனித இனத்தில் ஓர் உத்தமர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியயண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே என்று இறைவனிடம் பரிந்து விண்ணப்பிக்கிறார். கண்ணா! மனம் அலையும் தன்மையது : திடமுடையது ; அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் என்கிறான் மஹாரதனாகிய அர்ஜூனன்.

சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்து வர ஆசை பயன்பட்டது. மானுட நிலையில் ஆசை இருவிதப்படுகிறது. மனிதனைப் பந்தத்தில் தள்ளவும், பாரமார்த்திக நெறிக்கு எடுத்துச்செல்லவும் ஆசை மனிதனுக்குப் பயன்படுகிறது. இந்த ஆசைக்கு இருப்பிடம் மனது ஆகும். இந்த மனது என்பது யாது? அதன் இயல்பு என்ன? மானுட நிலையில் அதை உயர்ந்ததோர் காரியத்துக்குப் பயன்படுத்துவது எப்படி, என்பனவற்றை ஆராய்வோம்.

View More [பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்

[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்…. அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்… யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் – ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே…

View More [பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு

அடியவர்க்கும் ஆண்டவனுக்கும் என்றென்றும் அறாத உறவு இருந்து வருகிறது.
பாரில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் என்று வீறுகொண்டு முழங்குவோரும் பரிபூரணனுக்கு அடிமை செய்ய முந்துகின்றனர். நாமார்க்கும் குடியல்லோம் என்று இறுமாந்து பேசும் நாவரசர் பெருமானும் இறைவன் முன் மீளா ஆளாகி அடிமைப்பட்டு நிற்கிறார். இவ்வாறு அனைத்துயிர்களையும் பிணிக்கும் பேராற்றல் ஒன்று நின்று நிலவி நம்மை உய்யக் கொள்ளுகிறது. அத்தகைய பேராற்றலுக்கும் நமக்கும் உள்ள உறவே இனிய உறவாக, மெய்யான உறவாக அமைகிறது. பிற உறவனைத்தும் கண்மயக்காய் ஒழியும் பொய்த்தன்மையவே.

View More [பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு

[பாகம் 22] அமுதாக மாறிய மது

ஒருவனிடத்துள்ள அறிவு, அவன் அடைந்துள்ள பண்பாடு யாவும் அவன் பழகும் நண்பரையும், அவன் வாழும் சூழ்நிலையையும் பொருத்து உருவாகின்றது… தான் தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பதை மனிதன் தெரிந்து கொள்ளுவதில்லை. மனிதனிடத்து மறைந்து கிடக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்த உதவுவதே சமயம்… காந்தத்தைச் சார்ந்த இரும்பானது காந்தமயமாக மாறியமைவதைப் போல, சான்றோரைச் சார்ந்த கொடியவனும் நாளடைவில் சான்றோனாக மாறியமைகின்றான்… கிரீச சந்திரகோஷரிடம், “நீ செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு” என்றார் ராமகிருஷ்ணர்…

View More [பாகம் 22] அமுதாக மாறிய மது

[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள்… உண்மையை தெளிவுபடக்கூறிய உன்னை பிராம்மணன் அல்ல என்று சொல்வது தகுதியன்று… வாயு, அக்கினி, ஆதித்யன், பிராணன் ஆகிய நான்கினிடமிருந்தும் கிடைத்த ஞானத்தைவிட குருவிடம் உபதேசம் பெறுவதே சிறந்ததாக நினைத்தான்… அக்கினி வழிபாடு செய்து வந்த உபகோஸலருக்கு உரிய காலத்தில் அந்த அக்கினியே உபதேசம் செய்யும் என்று எண்ணியே ஸத்தியகாமர் யாத்திரை சென்றார்…

View More [பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்

அவதார புருஷர்கள் பெரிய கப்பல் போன்று மற்றவர்களையும் கரையேற்றுவர். சச்சிதானந்தம் பிறப்புரிமை என்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும். செயல் அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கிறவர்கள், தங்களுடைய பிறப்புரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்… நம்முடைய கோட்பாட்டினின்று மாறுபட்டுள்ளது என்ற ஒரே காரணம் பற்றி, பிறர் கோட்பாடுகளை ஒதுக்குதல், புறக்கணித்தல் பொருந்தாது… அன்பு செய்து வாழும் தன் மனைவியைத் தன்பாற்பட்டவள் என்ற காரணம்பற்றி ஒருவன் தாழ்வாக எண்ணுவானாயின் அவனினும் குறைபாடுடையவன் எவன்?

View More [பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்

[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்

ஒரு கிராமத்தின் சஞ்சாரமில்லாத ஒதுக்கிடத்தில் வண்டி ஒன்றுக்குப் பக்கத்தில் ரைக்வர் அமர்ந்து இருப்பதைச் சாரதி பார்த்தான்…. அரசன் பண்டமாற்றும் முறையில் ஞானத்தைப் பெற்றுவிடலாம் என்று எண்ணினான் போலும்! ரைக்வர் அரசனுடைய மனப்பான்மையை அறிந்து கொண்டார். … பிரம்ம ஞானத்தைத்தவிர நாம் பெறும் மற்றவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டு. புண்ணியச் செயல்களால் வரும் நற்பயன் நம்மை முற்றிலும் திருப்திப்படுத்துவதில்லை…. தூங்கும் போது வாக்கு பிராணனில் ஒடுங்குகிறது. பார்வையும், கேள்வியும், மனதும் ஆகிய யாவும் பிராணனிலேயே ஒடுங்குகின்றன….

View More [பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்

[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி

தாயிடம் பிடிவாதம் செய்து பக்ஷணம் பெற்ற பாலனைப் போலப் பெருமிதத்துடன் கிரீஷர் அன்னையைப் பணிந்து திரும்பினர். அன்னையின் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!… ஐந்து வயதுக்குப் பிறகு இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு ஆச்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது… தொழில் புரியவும், செல்வம் திரட்டவும் தெரியாத குடும்பி எந்த ஆச்ரமத்துக்கும் ஏற்றவனல்லன்… ஆச்ரம வாழ்க்கையில் தொழில் புரிதற்கும் திரவியம் தேடுதற்கும் இடமுண்டு என்றாலும், போட்டி போடுதற்கு அதில் இடமில்லை… திரண்ட வெண்ணெய் தண்ணீரில் கலங்காதிருப்பது போன்று, ஆச்ரமப் பயிற்சியில் ஊறியவன், தீயவர்களுக்கிடையில் கெடாதிருப்பான்…

View More [பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி

[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்

இறையுணர்வு என்பது அனைத்தையும் வெறுத்து அகல்வது என்று ஆகாது. உலகுடன் ஒன்றி நின்று அனைத்துயிர்களும் இறைவடிவாக இலங்கும் உண்மையைத் தெரிந்து, அவற்றினிடத்தன்பு கொண்டு, எல்லாம் இறைமயம், இன்பமயம் என்று கண்டு இறைவனுக்கு ஆட்பட்டு வாழ்கின்ற எளிய வாழ்விலும் இறையுணர்வு கைகூடப் பெறலாம். எனவே அகத்துறவே இறையுணர்விற்கு அடிப்படையானது என்பது தெளிவாகின்றது. ‘யான்’, ‘எனது’ என்று நம்மையறியாமலே நம்மிடத்து ஓங்கி வளர்ந்துள்ள செருக்குணர்வு ஒன்றைனையே நாம் வேருடன் களைய வேண்டும்… தோரோ, எமர்ஸன், விட்மன் முதலான அமெரிக்க அறிஞர்தம் கருத்துகளை இவண் எடுத்துரைப்பது நம் இந்து சமயத்தின் பெருமையைக் காட்டுவதற்காக அன்று ; எந்நாட்டவராயினும், எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அடிப்படையான தத்துவக் கருத்துகள்…

View More [பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்

[பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி

லெளகீக அறிவையும் ஆற்றலையும் பெருக்க வேண்டுமென்று அவன் விழைகிறான். இது அவனிடத்துள்ள அகங்காரத்தை வளர்த்துக்கொண்டே போகிறது… சாஸ்திரத்தை ஓதுவதும், இறைவனைச் சிந்திப்பதும் சேர்ந்தே நிகழவேண்டும்… பாஹிய பூஜையைவிடச் சிறந்தது மானஸ பூஜையாகும். அதன்மூலம் மனத்தை இறைவனுடன் நிலைத்திருக்கச் செய்வது ஆழ்ந்த பக்தியை உண்டாக்குகிறது

View More [பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி