அஞ்சலி

அஞ்சலி, வழிகாட்டிகள்

அஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப் படுத்துபவை. இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள்! எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள்... ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புகளும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு... [மேலும்..»]

அஞ்சலி, அறிவிப்புகள், சகோதரி நிவேதிதை, வழிகாட்டிகள்

பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

சுவாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, அயர்லாந்திலிருந்து பாரதம் வந்து, இந்நாட்டின் தவப்புதல்வியாகவே வாழ்ந்தவர் சகோதரி நிவேதிதை. அவரது 150-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இந்த ஆண்டு  நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தமிழகத்தில் ரத யாத்திரை நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. கோவையில் ஜனவரி 22,2018 (இன்று) தொடங்கி, சென்னையில் பிப்ரவரி 22,2018 முடிவுபெறும் இந்த மாபெரும் ரத யாத்திரை,  30 நாட்களுக்கு 27 மாவட்டங்களின் வழியாக சுமார் 3,000 கி.மீ. தொலைவைக் கடந்து 2 லட்சம் மாணவிகளிடம் சகோதரி நிவேதிதை ஆற்றிய பணிகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரையை ஒட்டி, சகோதரி நிவேதிதை குறித்த கட்டுரை இங்கு... [மேலும்..»]

அஞ்சலி, இலக்கியம், புத்தகம், வழிகாட்டிகள், வீடியோ

பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்

April 5, 2017
-
பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்

கடந்த மார்ச்-23, 2017 அன்று மாபெரும் நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான அசோகமித்திரன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூர் வாசக வட்டம் சார்பாக, ஏப்ரல் 2, ஞாயிறு ஒரு நினைவுக் கூட்டம் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளும், கலந்துரையாடலும் இலக்கியத் தரத்துடன் சிறப்பாக அமைந்தன. அவற்றின் வீடியோ பதிவுகள் கீழே... டாக்டர் ப.கிருஷ்ணசாமி அசோகமித்திரனுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சிறந்த இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். அசோகமித்திரனின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமை குறித்து சிறப்பாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் தனது உரையில் எடுத்துரைத்தார்.... [மேலும்..»]

அஞ்சலி, அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

சோ: சில நினைவுகள் – 3

December 18, 2016
-
சோ: சில நினைவுகள் – 3

அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்... ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான... [மேலும்..»]

அஞ்சலி, அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

சோ: சில நினைவுகள் – 2

December 13, 2016
-
சோ: சில நினைவுகள் – 2

என் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அதற்கெதிரான போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக அவரது செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது... தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வந்தவர்...... [மேலும்..»]

அஞ்சலி, அனுபவம், அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

சோ: சில நினைவுகள் – 1

December 12, 2016
-
சோ: சில நினைவுகள் – 1

கிட்டத்தட்ட 46 வருடங்களாக என்னுடன் தொடர்ந்து நெருக்கமாக வருபவர் சோ. என் சிந்தனைகளை கருத்துக்களை ஆளுமையை இன்று நான் எழுதுவதை அனைத்தையுமே ஆக்ரமித்தவர் சோ... ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய வாஷிங்டனில் நல்லதம்பி போன்ற தொடர்கள் தி மு க வின் முட்டாள்களையும் ஊழல்களையும் கிழிப்பவையாக இருந்தன. வட்டம், மாவட்டம் என்று தோளில் ஆட்டுக்கள்ளன் துண்டுடன் இரண்டு தலைக்குப் பதிலாக மூளையில்லாத தலைகளைக் குறிக்கும் வகையில் இரண்டு வெறும் முட்டைகளுடன் கார்ட்டூன்கள் வரும். ஆரம்ப இதழ் துவங்கி கழுதை துக்ளக்கில் அட்டைப் படம் முதல் உள்ளே உள்ள கார்ட்டூன்கள் வரையிலும் இடம் பெறும்.எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விமர்சிக்க... [மேலும்..»]

அஞ்சலி, அரசியல், வரலாறு

ஜெயிக்கப் பிறந்தவர்!

ஜெயிக்கப் பிறந்தவர்!

ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில்... [மேலும்..»]

அஞ்சலி, பொது

அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா

அஞ்சலி:  தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா

கடுமையான விமர்சனங்களை அவர் மீது கொண்டிருந்தாலும் கூட அவரது மறைவை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் கூட சொல்ல முடியாத ஒரு வேதனை ஏற்படுகிறது... 20-21ம் நூற்றாண்டுகளின் யுகசந்தியில் தமிழ்நாட்டை சுயலாப மக்கள் விரோத சுரண்டல்வாதிகளும், துவேஷம் வளர்க்கும் இனவாத அரசியல் கயவர்களும் சீரழித்து விடாமல் காத்த தேவதை ஜெயலலிதா... கறாரான அரசியல்வாதி, பாதரசம் போன்று நிலையின்றி அலைபாயும் ஆளுமை (mercurial personality), இரும்பை ஒத்த உறுதி, மிகவும் சிக்கலான நிர்வாகத்தையும் கையாளும் செயல்திறன் - இத்தகைய பிரமிப்பூட்டும் பண்புகளின் கலவையாக ஜெயலலிதா விளங்கினார்.... [மேலும்..»]

அஞ்சலி, வரலாறு

பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை

பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை

வெற்றி பெற்றவர்களால் கட்டமைக்கப்படும் மாய பிம்பங்களை நம்பி அவர்களை நாயகர்களாகப் போற்றுவதும் வரலாற்றுப் பீடத்தில் ஏற்றுவதும் உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது. இந்தியாவில் இதற்கு மிகச் சரியான உதாரணம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்றால், உலக அளவில் மிகப் பொருத்தமான உதாரணம் கியூப முன்னாள் சர்வாதிகாரி பிடல் காஸ்ட்ரோ. தனது 90-வது வயதில் கடந்த 2016, நவ. 25-இல் முதுமை காரணமாக காஸ்ட்ரோ மரணமடைந்தார். உலகின் நீண்டநாள் ஆட்சியாளரும், கம்யூனிஸ்ட்களின் உலகத் தலைவரும், அமெரிக்காவின் நெடிய பகையை வென்ற மகத்தான வீரருமான காஸ்ட்ரோ மறைந்ததாக உலக ஊடகங்கள் கண்ணீர் சிந்தின. அதில் இந்திய ஊடகங்களும்... [மேலும்..»]

அஞ்சலி, சமூகசேவை, வழிகாட்டிகள்

சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்

November 24, 2016
-
சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்

தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்... 1969 மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும்... [மேலும்..»]