ஊடகங்கள்

அரசியல், ஊடகங்கள், பொருளாதாரம்

கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

உயர் மதிப்புள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த நவ. 8-ஆம் தேதி இரவிலிருந்தே நாட்டில் பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் பறிபோய்விட்டது. அவர்களில் பலர் தற்போது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பிதற்றத் துவங்கிவிட்டனர். கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் மீதான அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் கூப்பாடு போடும் இந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கையிலிருந்தே, மோடி கொடுத்த அடி இவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இவர்களில் தலையாயவர், தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இந்திய வருவாய்த் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்த... [மேலும்..»]

ஊடகங்கள், நிகழ்வுகள், புத்தகம், பொது

வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி - ஐப்பசி) இதழின் உள்ளடக்கம் - நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்; வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி - சொல்வனம் ரவிஷங்கர்; மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? - ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? - லக்ஷ்மணப் பெருமாள்; அருகி வரும் யானைகள் -... [மேலும்..»]

அறிவிப்புகள், ஊடகங்கள்

வலம்: புதிய மாத இதழ்

வலம்: புதிய மாத இதழ்

இந்த வருட விஜயதசமி (அக்-11) அன்று முதல் இதழ் வெளிவருகிறது. வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கும். சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்கும். இதழின் பொறுப்பாசிரியர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா. 80 பக்கங்களுடன் கருப்பு -வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவரும். இந்த இதழுக்குத் தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறோம். ஆன்லைன், டிடி/செக் அல்லது வங்கிக்கணக்கு மூலம் இதழுக்கான சந்தாவை செலுத்தலாம்... [மேலும்..»]

ஊடகங்கள், கோயில்கள், நிகழ்வுகள்

சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை. 93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே... கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை... ... [மேலும்..»]

ஊடகங்கள், சமூகம், மகளிர், ராமாயணம், விவாதம்

“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்

“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்

இந்தத் தொடர், ராமாயணத்தை 'சீதையின் பார்வையிலிருந்து' சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது.. மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன "மதச்சார்பற்ற" "முற்போக்கு" கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது... ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது... [மேலும்..»]

அஞ்சலி, ஊடகங்கள், தேசிய பிரச்சினைகள்

ஓர் இதழியல் கனவு…

September 11, 2015
-
ஓர் இதழியல் கனவு…

. ஒரு பத்திரிகை செய்தியுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்தபோது, அவரது உடலை நல்லடக்கம் செவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தார் கணேசன் என்ற தொழிலாளி. கபரிஸ்தானில் குழி தோண்டுவது தான் அவரது தொழில். ஊரெல்லாம் கலாமின் புகழ் பாடிக் கொண்டிருந்தபோது, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் தில்லி பதிப்பில், கலாமின் உடல் நல்லடக்கத்துக்காக குழி தோண்டிய தொழிலாளியின் நேர்காணல் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. யாரும் அறியாத, அடையாளமற்ற ஒருவரின் நேர்காணல் முக்கியமான நாளிதழில் முதல் பக்கம் வந்தது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதே போன்ற ஒரு நிகழ்வு அமெரிக்காவிலும்... [மேலும்..»]

அரசியல், ஊடகங்கள்

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

  தமிழின் மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் கடந்த சில காலமாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. குறிப்பாக, ஜூனியர் விகடன், டைம் பாஸ் ஆகியவற்றில் ஆசிரியர் குழுவில் உள்ள சில விஷமிகளின் கைவண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பத்திரிகை தர்மத்தை மீறி இந்த அவலம் நடந்து வருகிறது.  ‘அடிக்கடி வெளிநாடு செல்லும் மோடியை எப்படியேனும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்’ என்ற ஒரு கிறுக்குத்தனமான ஜோக் போதும் விகடனின் விஷமத்தை அறிய. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும் இப்படித்தான் அவரது பெயரைக் கெடுக்க ஊடகங்கள் பலவகைகளில் முயன்றன. அதன் எதிர்விளைவாகவே... [மேலும்..»]

அரசியல், ஊடகங்கள்

தன்வினை தன்னைச் சுடும்

தன்வினை தன்னைச் சுடும்

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்ற பழமொழியை நமது முன்னோர் தெரியாமல் சொல்லவில்லை. அதிகார பலமும் பணபலமும் இருக்கும்போது ஆடாத ஆட்டம் ஆடினால் என்ன ஆகும் என்பதற்கு பல சான்றுகள் சரித்திரத்தில் இருக்கின்றன. அந்தப் பட்டியலில் விரைவில் சேர உள்ளது சன் தொலைக்காட்சிக் குழுமம். இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் குழுமம் பிரமாண்டமானது. உலக அளவில் ஸ்டார் குழுமம் கோலோச்சுவது போல, இந்தியாவின் தென் மாநிலங்களில் மாபெரும் ஊடக சக்தியாக கோலோச்சி வருவது சன் குழுமம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 33 தொலைக்காட்சி சேனல்களை நடத்திவரும் சன்... [மேலும்..»]