இந்துமதம், சாதி, வறுமை, மதமாற்றம் : ஒரு பார்வை

எங்கள் ஊர்ப்பகுதிகளில் 1980 களுக்கு பிறகே பெருவாரியான மதமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒடுக்குமுறைகள் இருந்த காலத்தில் மதமாறியதை சுயமரியாதைக்காக மாறினோம் என்று கூறுபவர்கள் சமீப காலங்களில் நடக்கும் மதமாற்றத்தை, இது இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்குத் தந்துள்ள உரிமை என்ற பெயரில் கடந்து செல்கின்றனர்… இந்த சாதிக் கொடுமைகளுக்கும், வறுமைக்கும் அதிகார வர்க்கமே காரணமாக இருக்க முடியும். இந்துமதம் என்ற ஒன்று இல்லை என்று உருட்டும் அண்ணன்மார்களே, இந்துமதம் என்ற ஒன்று இல்லைனா இந்துமதத்தில் சாதிக்கொடுமைகளும், வறுமைகளும் இருந்தது என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?…

View More இந்துமதம், சாதி, வறுமை, மதமாற்றம் : ஒரு பார்வை

வேளாண் சட்டங்கள் ரத்து : ஒரு பார்வை

சீக்கியர்களின் மத உணர்ச்சியும்,ஜாதிய மற்றும் பிரிவினை உணர்ச்சியும் காலிஸ்தானிகளால் தூண்டப்பட்டது..இது முழு விஷமாக மாறுவதற்கு முன்பு நாட்டின் நலன் கருதி தன்னுடைய இமேஜை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடி சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால் இந்த அரசு தங்களுக்காக கொண்டு வந்த சட்டத்தை வலிமையாக ஆதரித்து,மோடியோடு திரள மறுத்த ஹிந்து விவசாயிகளை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. ஒரு குறுங்குழு தனது போராட்டத்தால்,லாபியால்,கருத்துருவாக்கத்தால் இந்தியாவின் பெரும்பான்மை ஜனங்களின் அரசின் உள்நோக்கமற்ற நற்செயலை தடுத்து நிறுத்தியிருக்கிறது.இதற்கு என்ன காரணம்? நமக்கு திரளத் தெரியவில்லை,தலைமையை நம்புவதில் சந்தேகமும்,நடுநிலை என்று காயடிப்பு கோழைத்தனமும் வாட்டி வதைக்கிறது நம்மை…

View More வேளாண் சட்டங்கள் ரத்து : ஒரு பார்வை

தமிழக அரசின் அபத்தமான மற்றும் ஆபத்தான தீர்மானம்

மத்திய அரசு, 2019-ல்  பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள…

View More தமிழக அரசின் அபத்தமான மற்றும் ஆபத்தான தீர்மானம்

வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்

1925ல் வீர சாவர்க்கருக்கும் கிலாஃபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஷவுக்கத் அலிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முக்கியமானது. இந்த 2021ம் ஆண்டில் தாலிபானின் எழுச்சியை இந்திய முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வரவேற்றுள்ளனர் என்ற செய்தியின் பின்னணியில் வாசித்தால் இது நமக்குப் பல விஷயங்களை உணர்த்துகிறது. உரையாடல் நடந்தபடியே வருமாறு… “நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது… ”

View More வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்

தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்

முந்தைய பகுதிகளை படிக்க தமிழகம் ஓர் ஆன்மீக பூமி , இந்த மண்ணில்…

View More தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்

கொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை?

பாரத அரசாங்கத்தில் வேலையில் இருக்கும் ஒரு அன்பர் என்னுடன் பகிர்ந்த தகவல்கள் இந்த விஷயமாக மிகுந்த தெளிவை அளிக்கிறது.. ஆரம்ப கட்டத்திலேயே முழுமையான பரிசோதனைகளுக்கு முன்னால் கோடிக்கணக்கான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு போட்ட பின்னர், பாதகமான எதிர்விளைவுகளை எதிர்கொண்டால் என்ன ஆகியிருக்கும்?… நிறவெறி மிகுந்த அமேரிக்க அரசின் மூலப்பொருள் ஏற்றுமதித் தடை என்ற சதி நடவாதிருந்தால், பாரதத்தில் இரண்டாம் கொரோனா அலையில் நெருக்கடியையும் பெருமளவில் பொதுமக்களின் சாவுகளையும் நாம் எதிர்கொள்ளத் தேவையே இருந்திருக்காது…

View More கொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை?

சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3

எந்த மருத்துவ நிபுணரும் மருத்துவ மனையும் எதிர்பார்த்திராத நோய் அதிகரிப்பினால் ஏற்பட்ட பின்னடைவு இது. இதை மத்திய அரசின் மீது பழிபோடக் கிடைத்த அரசியல் வாய்ப்பாகப் பார்க்கும் எதிர்கட்சிகள்தான் பிண அரசியல் செய்கின்றன. சர்வ தேச ஊடகங்கள் இந்தியா வீழ்கிறது என்று காட்டக் கிடைத்த வாய்ப்பு என்று இறங்கி அடிக்கிறார்கள். நம்மிடம் சில குறைகள் உண்டு. சில விடுபடல்கள் உண்டு. ஆனால், நாம் கொடுத்துவரும் அதிகப்படியான விலை என்பது அதற்கு எந்தவகையிலும் இசைவானது அல்ல. இதுவும் நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு போரே… சீனா நமக்கு இழைத்திருக்கும் பெரும் அநீதி இது. பொறுக்காத சர்வ தேச மருந்து மாஃபியாவின் கரங்களும் இதன் பின்னால் உண்டா என்பதும் தெரியவில்லை…

View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3

சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2

உலகளவில், நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், படுக்கை வசதிகள் இல்லாத, ஆக்ஸிஜன் இல்லாத, மருந்துகள் இல்லாத, இந்தியாவில் இறப்புவிகிதம் உலகின் பிற 100 நாடுகளையும் விட பல மடங்கு குறைவு… இரண்டாவது அலை பற்றிய அபாய அறிக்கைகளைத் தொடர்ந்து, அரசு பயந்து பயந்து எல்லா ஏற்பாட்டையும் செய்தது. ஆனால் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் மீறிக்கொண்டே இருந்தார்கள்… இவை எதுவும் புரியாமல் மக்கள் கூட்டம் உடனே ரெம்டெசிவர் என்னமோ நோயை முழுவதுமாக்க் குணப்படுத்திவிடும் என்று தாமாகவே நினைத்துக்கொண்டு முண்டியடிக்கிறார்கள். பல மருத்துவர்களை ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள்…

View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2

சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 1

வெளவால் போன்ற ஒரு உயிரிடமிருந்து நோய்க்கிருமி பரவ்வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 10 உருமாற்றங்கள் அடைந்த பின்னரே மனிதரைத் தாக்கும் வலிமையைப் பெற முடியும். இவையெல்லாம் நடந்திருந்தால் அதற்கான விஞ்ஞான, மருத்துவ சான்றுகள் கிடைத்திருக்கும். ஆனால் அதன் தடயமே இல்லை. ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கும் வெளவால் வைரஸ்தான் இப்படி நேரடியாக மனிதர்களைத் தாக்கும் பலம் பெறமுடியும்… இந்தத் திட்டமானது சீன விஞ்ஞானிகள் சிலரால் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் சொன்ன சில விஞ்ஞானிகள் மர்ம முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இப்போது நடப்பது மூன்றாம் உலகப் போர். உண்மையான எதிரியை விட்டுவிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களும் தமக்குள்ளாகவே கட்சி பிரிந்து அடித்துக்கொண்டு மடியப்போகிறார்கள்….

View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 1

புதிய பொற்காலத்தை நோக்கி – 17

சாக்கடைகளை சுத்தம் செய்தல், வீட்டுக் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் இவற்றைக் கையாளவும் பல நவீன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இவற்றை நம் நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் போதிய கவனமும் வேகமும் காட்டப்படவே இல்லை… என் தேசத்தில் கையால் கழிவுகளைக் கையாளும் என் சகோதரர் ஒருவர் கூட இருக்கமாட்டார். என் தேசத்தில் எந்த மழைக்கும் இனி சாலைகளில் நீர் தேங்காது. என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும். என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும்…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 17