விவேகானந்தர்

பிறமதங்கள், விவேகானந்தர்

விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்

October 22, 2016
-
விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்

இந்தியாவில் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளின் சபைகளிலும் கூட கிறிஸ்தவத்தின் கொள்கைகளையும், மதமாற்ற பிரசாரங்களையும் தீவிரமாகவும் வன்மையாகவும் சுவாமிஜி கண்டித்தார். அமெரிக்காவில் அவரது புகழைக் குலைக்கும் நோக்கத்துடன் அங்கிருந்த பல கிறிஸ்தவ மிஷன்களும் அமைப்புகளும் எப்படியெல்லாம் அவருக்கு எதிராக மோசமான அவதூறுகளையும் பொய்களையும் பரப்பின என்பதும் அவரது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இப்போது யோக்கியன்கள் போல அவரது படத்தையே போட்டு கிறிஸ்தவ மதப்பிரசாரம்..சுவாமிஜியின் வாய்மொழிகள் அனைத்தும் 8 தொகுதிகளில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளன. இதில் ஒரு சில இடங்களில் இயேசு கிறிஸ்துவையும் உயர்வாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால்... [மேலும்..»]

கல்வி, வழிகாட்டிகள், விவேகானந்தர்

கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

திருவள்ளுவர் – சுவாமி விவேகானந்தர்- இருவருமே மனிதப் பிறவியின் மாண்பை உணர்த்தியிருக்கிறார்கள். தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார்கள். சோம்பலைத் தூற்றியிருக்கிறார்கள்.முயற்சியின் மேன்மையைப் போற்றியிருக்கிறார்கள். ஒழுக்கத்தின் பெருமையை உணரச் Thiruvalluvar 1செய்திருக்கிறார்கள். நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியைப் பற்றிய கருத்துக்களை அழகாக வடித்திருக்கிறார்கள். [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், பொது, வரலாறு, விவேகானந்தர்

வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்

வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்

எங்கள் மாணவர்களிலேயே மிகவும் திறமையான மாணவன் நவீன். வேகமாக வேதங்களைக் கற்றுக் கொண்டான். இந்த வேதபாடசாலையில் குறிக்கோளாக உள்ள எங்களுடைய நோக்கமெல்லாம் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைப் பருவத்தில் பயில விரும்பும் எவருக்கும் மதம், ஜாதி குறுக்கிடக்கூடாது. தற்பொழுது 60 மாணவர்கள் வேத பாடசாலையில் படித்து வருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் மேலும் 30 மாணவர்களை சேர்க்க உள்ளோம். ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும். வேதபாடசாலையில் நான்கு ஆண்டு காலத்துக்கு கற்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார். [மேலும்..»]

அரசியல், ஆன்மிகம், இந்த வாரம் இந்து உலகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், கல்வி, சமூகம், பொது, வரலாறு, வழிகாட்டிகள், விவாதம், விவேகானந்தர்

தேவையா இந்த வடமொழி வாரம்?

தேவையா இந்த வடமொழி வாரம்?

அண்மையில் 'புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சமஸ்கிருதம் என எழுதியிருக்கிறது. ... பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் [மேலும்..»]

தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 36

எழுமின் விழிமின்  – 36

பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும்.  வீரன் தான் முக்தியை எளிதில் எட்டிப் பிடித்து எய்த முடியும்; கோழை அல்ல.  வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள்.  மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்கிறது.  'மகத்தான சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும்' என்பது உண்மை தான்; சந்தேகமில்லை.  இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும். மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகளால் கட்டுண்டுக் க்டக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்ப்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள். 'அச்சமற்றிரு' என்று... [மேலும்..»]

தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 35

எழுமின் விழிமின்  – 35

.....பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்கவேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிட,ம் கடுங்கோபமாக இருக்கிறாள். அந்நிலையில் அவள் இருக்கும்பொழு து உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப்போய் புதிய அலை எழுகிறது. அது தான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது. கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி... [மேலும்..»]

தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 34

எழுமின் விழிமின் – 34

முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவுமே அவனை ஒருபோதும் திருப்திப் படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்து கொண்டே செல்வோம்.... உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும்,  நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும்.  நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது.... நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமான, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர் விட்டுக் கதறுகிறோம்.  உதவியானது வெளியிலிருந்து வராது. ... [மேலும்..»]

இந்து மத மேன்மை, தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 33

எழுமின் விழிமின் – 33

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை.... பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத... [மேலும்..»]

இந்து மத மேன்மை, தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 32

எழுமின் விழிமின் – 32

நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டு, பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக் கூடிய போக்கு சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்தைய, சிதைந்து குலைந்து போன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழி/துறை இல்லாமல் போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள். "என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று... [மேலும்..»]

தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 31

எழுமின் விழிமின் – 31

சுதந்திரமாகவும், அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது. வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை. அதுபோலத் தான் வாழ்க்கையெல்லாம்..... "நல்லது செய்; நல்லவனாக இரு. இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்'' என்று கூறிய தேவபுருஷர் புத்தர் ஒருவர் தான்.... மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது. அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்திப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள்.... [மேலும்..»]