Payday loans Cialis online
payday loans Car insurance

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூரில் கருத்தரங்கம்

டிசம்பர்-25 அன்று திருப்பூரில் பா.ஜ.க இளைஞர் அணி நடத்தும் கருத்தரங்கம். ஏ.பார்த்திபன் தலைமை வகிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் “ஹிந்துத்துவமும் மத அடிப்படைவாதமும்” குறித்தும், ஜடாயு “நம்மை சூழ்ந்திருக்கும் நான்கு அபாயங்கள்” குறித்தும் உரையாற்றுகிறார்கள். அனைவரும் வருக! அழைப்பிதழ் - மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]

அறிவிப்புகள்

கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

விஷ்ணுபுரம் இலககிய வட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது (2011) மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப் பட இருக்கிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி கோவையில் நடக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவின் போது ஜெயமோகன் எழுதிய "பூக்கும் கருவேலம்" (பூமணி படைப்புகள் குறித்த விமர்சன நூல்) நூல் வெளியீடும் நடைபெறும்... [மேலும்..»]

அறிவிப்புகள்

2012: புத்தக கண்காட்சியில் தபோவனம்…

2012 ஜனவரியில் நடக்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் பழைய மாணவர்கள் சார்பாக ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் Book Stall போடவுள்ளோம். இதற்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும். 97509-55515, 99440-23118. [மேலும்..»]

அறிவிப்புகள்

மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

இந்து தர்மத்தின் அடிப்படைகளையும் சைவசித்தாந்த நெறிமுறைகளையும் குறித்த ஆரம்ப நிலை வகுப்புகள் மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்றன. அறிமுக வகுப்பு 30-நவம்பர்-2011 மாலை 7:30 முதல் 9 வரை. சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர் சிவ.பரமசிவம் அவர்கள் இவற்றை நடத்துகிறார். வகுப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகக் கலந்து நடத்தப் படும். கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும். No. 9-2-S, Tingkat 1, Kawasan Perniagaan Nilam, 43000 Kajang, Selangor. (Next to Sri Murugan Centre) FOR MORE INFO, PLEASE CALL: 012-3915643, 016-2230905, 012-2325254 மேலும் விவரங்கள் கீழே (படத்தின் மேல் க்ளிக்... [மேலும்..»]

அறிவிப்புகள்

ஹிந்து தரும வித்யா பீடம் – நான்காம் ஆண்டு சமயவகுப்பு மாணவர் மாநாடு

ஹிந்து தரும வித்யா பீடம் – நான்காம் ஆண்டு சமயவகுப்பு மாணவர் மாநாடு

நவம்பர் 27, ஞாயிறு  (27-11-2011) அன்று சென்னை தி.நகர், வடக்கு உஸ்மான் சாலை, விவேக்ஸ் அருகில் இன்ஃபோசிஸ்  ஹாலில் நடைபெறும் சமயவகுப்பு மாணவர் 4-ம் ஆண்டு விழாவில் கலந்து சமயவகுப்பு பற்றிய ஓர் அறிமுகத்தைப் பெறுவோம்! ஹிந்து தர்ம வித்யாபீடம் – வெள்ளிமலை நடத்தும் சமயவகுப்புகளுக்கு ந‌மது குழந்தைகளை அனுப்புவதோடு நாமும் கலந்துகொண்டு, பொறுப்பேற்று ந‌டத்திடுவோம். ந‌மது நாட்டைப்பற்றியும் நமது சமயத்தைப் பற்றியும் புரிந்து கொள்வோம்!     மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]

அறிவிப்புகள்

பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு

பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு

விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள்” என்ற இந்த நூல் நம் பாரம்பரிய அறிவைச் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்களை அழகிய வண்ண புகைப்படங்களுடன் அளிக்கிறது. மண்புழு உரம், மண்புழு உர நீர், உயிர் நீர், கம்போஸ்ட் டீ, பஞ்சகவ்யம், மீன் அமினோ, அஸோலா ஆகிய தொழில்நுட்பங்களை செய்முறை விளக்கங்களுடன் தருகிறது. விவசாயிகளுக்கும், பசுமை வேளாண்மை மாணவர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும், இன்றியமையாத தொடக்க நிலை கையேடு. நூலாக்கியவர்கள்: டாக்டர் கமலாசனன் பிள்ளை, அரவிந்தன் நீலகண்டன், ராஜமணி, பிரேம்லதா பாண்டியன் ஆகியோர். மேலும் விவரங்களுக்கு பதிப்பாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். விவேகானந்த கேந்திரம் – இயற்களை வள அபிவிருத்தித்... [மேலும்..»]

அறிவிப்புகள்

அஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி

அஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி

தன் சிறு வயது முதல் தெய்வீக இசை பாடியும், சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் இறைப்பணியில் இடையறாது ஈடுபட்டிருந்த டாக்டர் சிவானந்த விஜயலக்ஷ்மி அவர்கள் தமது 74வது வயதில் 2011 நவம்பர்-8 (செவ்வாய்) அன்று மறைந்தார். மதுரையைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி என்ற அந்த 13 வயதுச் சிறுமியின் இசைத் திறமைகளைக் கண்டு பூரித்த சுவாமி சிவானந்தர், ரிஷிகேஷ் வருமாறு பணித்தார். ராமாயணப் புத்தகத்தை அவளுக்குப் பரிசாக அளித்து இன்னும் சில மாதங்களிலேயே வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு செய்யும் அளவுக்கு பாண்டித்யம் உண்டாகும் என்றும் ஆசீர்வதித்தார். குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்ட அந்தப் பெண் ‘சிவானந்த’ என்ற குருவின் திருப்பெயரையும் தனது... [மேலும்..»]

அறிவிப்புகள்

சென்னை: டிசம்பரில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய ஆய்வரங்கம்

சென்னை: டிசம்பரில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய ஆய்வரங்கம்

கும்பகோணத்தில் இயங்கும் மூவர் முதலிகள் முற்றம் என்ற அமைப்பு, 2011 டிசம்பர் 17 (அல்லது 18) அன்று சென்னையில் ஒரு ஆய்வரங்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. நவம்பர் 15-க்குள் தமிழறிஞர்கள், சமய கலாசார ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. மேலும் விவரங்கள் கீழே - (படங்களின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்) மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]

அறிவிப்புகள்

மதுரை – காஷ்மீர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்

மதுரை – காஷ்மீர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்

மதுரை: நவம்பர்-2, 2011 (புதன்கிழமை). மாலை 6:45 மணி. தேசிய சிந்தனைக் கழகம் நடத்தும் நிகழ்ச்சி. “காஷ்மீர்: நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார். இடம்: பாலு மீனாஸ் திருமண மகால், மேல கோபுரத் தெரு, மதுரை. அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே: (க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்) மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]

அறிவிப்புகள்

மத வன்முறை தடுப்பு மசோதா பற்றி கருத்தரங்கம்

மத வன்முறை தடுப்பு மசோதா பற்றி கருத்தரங்கம்

சென்னை:  அக்டோபர்-23 (ஞாயிறு) மாலை 5 மணி. ஜோகிந்தர் சிங் (ஐ.பி.எஸ்), கே.டி.தாமஸ் (முன்னாள் நீதிபதி ), டி.கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் தேர்தல் ஆணையர்), எஸ்.குருமூர்த்தி (பொருளியல் நிபுணர்) உள்ளிட்ட பலர் பங்கு பெறுகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசியுடன் இயங்கும் தர்ம ரட்சண சமிதி அமைப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இடம்:  கர்நாடக சங்க பள்ளி அரங்கம், ஹபிபுல்லா சாலை, தி.நகர். அனைவரும் வருக! பார்க்க: மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா – மது எழுதிய கட்டுரை அழைப்பிதழ் கீழே. (படங்களின் மீது க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்). மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]