70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!

இந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்… உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசுத் தலைமை இந்தியாவில் உருவாக நமக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது…

View More 70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!

மரபும் விமானப்பயணமும்

“நம்ம மரபு .. அது பழசு சார்”.. “மரபுன்னு எதைச் சொல்றீங்க?” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. ”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது”…“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா? அதுதான் முக்கியம்”…குழும சிந்தனை என ஒன்று அமையும்போது, அதன் எல்லைகள் குழுமத்தால் வகுக்கப்பட்டு, தனி உறுப்பினர்களின் ஆழ்மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தலைவர்கள் இல்லாது போயினும், குழும சிந்தனைகளால் வடிவாக்கப்பட்ட ஒரு பிரதி , குழுமத்திற்குக் கிடைக்கிறது, அது வழிநடத்தும்….

View More மரபும் விமானப்பயணமும்

மேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்

அது போன்ற ஒரு கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை. 10 அடி கருங்கல் அடித்தளத்திற்கு மேலே சுமார் 20 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. அந்த அற்புததை தேடி அருகே ஓடினோம், மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கால் கூட வைக்க முடியவில்லை! இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை… வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். “சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி “. அடடா ராஜராஜனின் கல்வெட்டு! தஞ்சை கோயிலை எழுப்பிய ராஜ ராஜனின் 11 ஆம் ஆண்டில் இந்த கோயில் எழுப்பட்டிருக்க வேண்டும்! மேட்டு மருதூர் என்ற இந்த ஊர் அன்று “மாதான மருதூர்” என்று அழைக்கப்பட்டுள்ளது, இறைவன் பெயர் “ஆராவமிதீஸ்வர்”…

View More மேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்

மணிமேகலையின் ஜாவா – 2

கண்ணைக் கூச வைக்கும்படி வெள்ளைப்பாறைகளிலிருந்தும், வெள்ளை மணற்படுகையிலிருந்தும் சேர்ந்து ஒளிரும் வெளிச்சம். அதனுடன் வெண்புகைபோல் வருடிப்போகும் மஞ்சுப்பொதிகள் தரும் மயக்கம். உண்மையில் அதுதான் தண்மைமிகு தவளமால்வரை….. இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே. அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி! ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்…

View More மணிமேகலையின் ஜாவா – 2

மணிமேகலையின் ஜாவா – 1

மணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது. நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் மணிமேகலை தங்கியிருக்க அங்கு வந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்… சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன். நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்…ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர்…

View More மணிமேகலையின் ஜாவா – 1

ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)

ஆதி சங்கரரின் மனம் இப்பகுதியின் இயற்கை அழகிலும் அமைதியிலும், புனிதத்திலும் தோய்ந்து ததும்பி நிறைகிறது. நீ இங்கேயே உறைந்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று அன்னை சரஸ்வதியை வேண்டிக் கொள்கிறார். சலங்கை ஒலி நின்று விடுகிறது. சாரதை அங்கு நிரந்தரமாகக் குடி கொள்கிறாள்… கண்ணாடியில் முகம் பார்க்கும் தர்ப்பண சுந்தரிகள், வேட்டைக்காக வில்லுடன் நிற்கும் கானக அழகிகள், இசைக்கருவிகளை மீட்டும் வாதினிகள், அபிநயம் பிடிக்கும் நர்த்தகிகள் என மூச்சடைத்து, பித்துக் கொள்ள வைக்கும் சிற்பங்கள். ஒவ்வொரு அங்குலத்திலும் மகோன்னத சிற்பிகளின் உளிகளும் கரங்களும் இதயங்களும் உயிர்களும் கலந்து எழுந்திருக்கும் அற்புதக் கலைப் பெட்டகம் பேலூர் கோயில்…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)

ஒரு கர்நாடகப் பயணம் – 4 (கோகர்ணா, முருடேஷ்வர்)

ராவணன் கைபட்டு முறுகியதால் பசுவின் காது போல சிவலிங்கத் திருமேனி வளைகிறது. பசுவின் காது போன்ற வடிவம் கொண்ட அந்த அழகிய கடற்கரையில் அவ்வாறே நிலைபெற்று எம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள்வோம் என வானில் சிவபெருமான் தோன்றி ஆசியளிக்கிறார்…வங்கக் கடலைப் போன்று சீறிப் பாயும் அலைகள் முருடேஷ்வரில் வருவதில்லை. ஒன்றையே பற்றிக் கொண்டு கொந்தளிப்புகள் அடங்கிய நிச்சலமான மனம் போல, அலைகளற்ற கடல் இது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் கடலுக்குள் காலார நடந்து செல்ல முடிகிறது. புத்துணர்வூட்டும் அனுபவம்… இந்தியாவிலேயே சிரபுஞ்சிக்கு அடுத்து அதிகம் மழை பெய்யும் பகுதி. இது டிசம்பர் மாதம் என்பதால் மழை இல்லை. அதனால் இருபுறமும் அடர்ந்த காடுகளின் பசுமையை கண்களால் தெளிவாகப் பருகிக் கொண்டு மலைக் காற்றின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டு செல்கிறோம்…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 4 (கோகர்ணா, முருடேஷ்வர்)

ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன…. கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன… சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே வித கலைப்பாணிகளைப் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் இடையில் கலைரீதியான போட்டியும் இருந்திருக்கலாம்…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

பயணம் கிளம்பியதும், முதலில் இறங்கிய இடம் சித்ரதுர்கா கோட்டை.. ஏழு சுற்றுகள், பதினெட்டு கோயில்கள், தோரண வாயில்கள், பண்டக சாலைகள், விழா மண்டபங்கள், குருகுலம், குளங்கள், சுனைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ரகசிய வாயில்கள் என பற்பல பகுதிகளைக் கொண்ட கோட்டையை ஏறி இறங்கி சுற்றி வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும்… கொண்டாட்டங்கள், மாபெரும் வீரச் செயல்கள், சிலிர்ப்பூட்டும் தியாகங்கள், சதி வலைகள், காதல்கள் எல்லாம் கலந்து பெருமூச்சு வரவழைக்கும் கதைகள். கோட்டையிலிருந்து இறங்கும் போது வரலாற்றின் திசை மாற்றங்களை யோசித்துக் கொண்டே வந்தேன்..

View More ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)