அனுபவம்

அனுபவங்களின் அடிப்படையிலான படைப்புக்கள்

அனுபவம், இந்து மத மேன்மை, சமூகம், பிறமதங்கள்

கோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்

கோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்

சனிக் கிழமை மாலை 5:30 அல்லது 6 மணி இருக்கலாம். திருவல்லிக் கேணி கோவில் வளாகத்தில் ஒரு காட்சியை காண நேர்ந்தது. கோவில் வந்திருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் ஒரு இளைஞர் தமது செல்போனை காட்டி ஏதோ விவரித்து கொண்டிருந்தார். அந்த இளம் சகோதரர் ஒரு இஸ்லாமியர். ‘படைத்த இறைவன் ..’ என்றெல்லாம் வார்த்தைகள் காதில் விழுந்தன... அந்த அம்மணி அமைதியாக ‘இதைத்தானப்பா நாங்களும் சொல்கிறோம்.. பகவான் உலகத்தை படைத்து சம்ரக்ஷித்து கொண்டிருக்கிறார். அதற்கென்ன இப்போ!’ என்றார். ‘சரிங்க . ஒரு முக்கியமான இந்து கோவில் முன்னாடி உங்க மத பிரச்சாரத்தை செய்றீங்க. இதே போல இந்துக்கள்... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், கோயில்கள், பண்டிகைகள்

மகாமகம்: ஓர் அனுபவம்

February 18, 2016
-
மகாமகம்: ஓர் அனுபவம்

தண்ணீரை இறைத்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பலைகள், மஞ்சள் கரைந்து விழும் மங்கலப் பெண் முகங்கள், இணைந்து தீர்த்தமாடும் தம்பதிகளின் இல்லற நேசம், முதியவர்களை கவனத்துடன் அழைத்து வரும் இளையவர்களின் சிரத்தை, இறைநாமங்களைக்கூறிக் கொண்டு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர்மொண்டு ஊற்றுக் கொள்ளும் பக்தி என எல்லாம் கலந்து அந்த ஆறு ஏக்கர் மகாமகக் குளம் ஒரு தெய்வீகக் களியாட்டக் களம் போலத் தோற்றமளித்தது... மகாமகக் குளம் என்று அம்புக் குறி போட்டு அங்கங்கு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகை கூட விடாமல் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு வைத்திருப்பது, மிகவும் அருவருப்பையும் கசப்புணர்வையும் ஏற்படுத்துகிறது... [மேலும்..»]

அனுபவம், புத்தகம்

ஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்

ஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்

ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக் கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.... [மேலும்..»]

அனுபவம், இலங்கைத் தமிழர், சமூகம், நிகழ்வுகள்

போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

நாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது. விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்... உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல்... [மேலும்..»]

அனுபவம், அரசியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள், பொருளாதாரம்

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4

October 8, 2015
-
மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4

பிற நாடுகள் பல முறை முயன்ற பின்னரே செவ்வாயை சென்றடைந்துள்ளார்கள். என்னைப் போலவே இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது (மோடி மோடி மோடி என்ற பெரும் ஆமோதிப்பு குரலோசை அலையலையாய் எழும்புகின்றது) .... ஆகவே நீங்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால் பழைய எரிபொருள் விலையில் 19000 கோடி ரூபாய்கள் திருடப் பட்டு வந்தது புரிய வரும். இப்பொழுது இந்தப் பணம் அரசின் கஜானாவில் மிச்சப் படுகின்றது. இனிமேல் அந்த உதவித் தொகையைப் பெற இடைத்தரகர்கள் தேவையில்லை, திருடர்கள் கிடையாது. எனது ஜாம் மூலமாக ஊழலை ஒழிக்கத் துவங்கியுள்ளோமா இல்லையா? திருட்டை தவிர்த்திருக்கிறோமா இல்லையா? நிதியை சேமித்துள்ளோமா... [மேலும்..»]

அனுபவம், அரசியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3

October 7, 2015
-
மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3

காலை முதலே சான் ஓசே நகரின் நடுவே அமைந்திருக்கும் எஸ் ஏ பி விளையாட்டு உள்ளரங்கு நோக்கி மக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். 18000 பேர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.. நீண்ட வரிசைகளில் மக்கள் கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். வரிசையில் கூடியிருந்தவர்களும் பாரத் மாதா க்கீ ஜெய் வந்தே மாதரம் மோடிக்கு ஸ்வாகதம் என்று தொடர் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்... "வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை இந்தியாவின் அறிவு இழப்பாக நான் கருதவில்லை மாறாக அவர்களை அறிவு சேமிப்பாக லாபமாகக் கருதுகின்றேன். வெளிநாடு சென்ற இந்தியர்களின் அறிவும் அனுபவங்களும் இந்தியாவுக்குத் தேவைப் படும் பொழுது இந்தியாவின் நலன்களுக்காக... [மேலும்..»]

அனுபவம், அரசியல், நிகழ்வுகள், பொருளாதாரம்

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2

October 6, 2015
-
மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2

ஒரு ஃபிஜி தீவுக்காரரான உங்களுக்கு மோடி மீது ஏன் இவ்வளவு ஆர்வம் என்றேன். இந்தியர்களுக்குத்தான் அவரது அருமை பெருமைகள் தெரிவதில்லை. உலக இந்துக்களின் தலைவராக நாங்கள் மோடியைக் காண்கிறோம். இத்தனை நாட்களாக இப்படி ஒரு அரிய தலைவனை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? இவரை பிரதமராக்காமல் என்ன செய்தார்கள் இந்தியர்கள் என்றார் அந்த டாக்ஸி டிரைவர்... டிஜிடல் இண்டியாவுக்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைப் போலவே முக்கியத்துவம் உள்ளது மோடியின் டெஸ்லா விஜயமும் மஸ்க்குடனான அவரது சந்திப்பும். சரியான ஒப்பந்தங்கள் உருவானால் இந்தியாவின் எரிசக்தி தேவை பெரும் அளவு குறையும். இந்தியாவின் வாகனஙக்ள் வெகுவாக பேட்டரி வாகனங்களாக... [மேலும்..»]

அனுபவம், அரசியல், நிகழ்வுகள்

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1

October 5, 2015
-
மோதியின் கலிஃபோர்னியா விஜயம்:  நேரடி அனுபவம் – 1

முன்னேற்பாடு கூட்டத்தின் பொழுது அந்த ஹோட்டல் அரங்கமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு கூட்டத்திற்கே பெரும் அளவில் மக்கள் வந்தது நான் எதிர்பாராதது... எதற்காக இத்தனை நூறு பேர்கள் தங்கள் குடும்பம் வேலை எல்லாம் விட்டு விட்டு இரவு பகல் பாராமல் உழைத்தார்கள்? எதை எதிர்பார்த்து? அவர்களுக்குத் தங்கள் பிறந்த தேசத்தின் மீது இருந்த பற்றும் அதன் தன்னலமற்ற தலைவன் மீதான பாசமும் மட்டுமே அவர்களை அயராமல் இயக்கியது.... மோடியை ஒரு முறை இரவில் மதுரையில் மேலமாசி வீதி தெற்குமாசி வீதி சந்திப்பில் பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவர் ஒரு ஆர் எஸ் எஸ்... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், கோயில்கள்

தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்

தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்

கோவிலுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. கற்களால் கட்டப்பட்ட, தொன்மைவாய்ந்த பழைய கோவில். மேல்தளங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன. சில இடங்களில் தளங்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தன. கருவறை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு அடி கீழே இருந்தது. சன்னதிக்குள் நுழையும் வழியில் சிமிட்டித்தரை... ஊருக்கு அருகாமையில் இருக்கிறதே, ஏன் யாரும் வருவதில்லை என்று கேட்டதற்கு, ஒரு விரக்திச் சிரிப்பையே பதிலாகத் தந்தார் அர்ச்சகர். முப்பது வயதிற்குள்தான் இருக்கும். தினமும் எட்டு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கோவிலுக்கு காலையில் வருபவர், மாலை பூஜை முடிந்து செல்லும்வரை வரை கோவிலிலேயே... [மேலும்..»]

அனுபவம், இசை, கலைகள்

எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்

எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்

சாஸ்திரிகளின் கீர்த்தனைகள் பக்திச் சுவை நிரம்பியவை. சக்தி உபாசகரான அவரின் பெரும்பாலான கீர்த்தனைகள் அம்பாளைக் குறித்தே, அதிலும் அவரின் பூஜ்ய தேவதையான பங்காரு காமாட்சியைக் குறித்தே அமைந்தவை. ..‘மாயம்மா’ என்ற ஆஹிரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை மனமுருகப் பாடினார். மும்முறை ‘நம்பினேன்’ என்று சொல்வதின் மூலம் அம்பிகையின்மேல் அவர் வைத்த அசையாத நம்பிக்கை புலப்படுகிறது. உள்ளத்தை உருக்கும் அப்பாடலைக் கேட்டு அங்கிருப்போர் மட்டுமல்ல மீனாட்சி அம்பிகையே மனமுருகியிருக்க வேண்டும்... அவரது கீர்த்தனைகள் நுட்பமான தாளக் கணக்குடன் அமைந்தவை. குறிப்பாக, மிஸ்ர சாபு தாளத்தை அவர் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார். இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால்... [மேலும்..»]