சினிமா

சினிமா

தெய்வத் திருமகள் – திரைப்பார்வை

தெய்வத் திருமகள் – திரைப்பார்வை

எதிர்மறை செய்திகளும் எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை மனிதர்களும் மிக மிகக் குறைவாக இருக்கும் ஒரு கதைக்களம், நிறைவான ஒரு நீண்ட படத்தைத் தருவது இப்படத்தின் சிறப்பம்சம்... நமது கலாச்சாரத்தின் நல்லடையாளமாகத் திகழும் மகளிர் இடும் நெற்றித் திலகம் இப்படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் பாத்திரங்களாலும் தெளிவாகத் துலங்கும்படி உடையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது...

மேலும் »

சினிமா

இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]

இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]

அவளை அறிந்த ஆண்டானிலிருந்து அடிமை வரை பலராலும் காதலிக்கப்படுவள்... ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற தன் முகத்தை அடிமைக்குக் காட்டும் கிறிஸ்தவம், அதிகாரத்துக்கான யதார்த்த வழியாக அதிகார வர்க்கத்துக்குத் தன்னை முன்வைக்கிறது. பாகனீய குருக்கள் தங்கள் உலகங்களில்... இரத்தவெறியுடன் குவியும் கிறிஸ்தவக் கும்பலைப் பார்த்து, தலைமைப் பூசாரி அதிர்ச்சியுடன் சொல்கிறார், “எங்கிருந்து இத்தனை கிறிஸ்தவர்கள் வந்தார்கள்?”... கிறிஸ்தவனாகும் முன்னால் என்னால் மன்னிக்க முடிந்தது, இப்போது ஏன் முடியவில்லை?... அவன் ஏற்றுக்கொண்ட அன்பு மதம் அவனுக்கு அளித்த பரிசு, தன் காதலிக்குத் தன் கையாலேயே... அவள் கண்டடைந்த உண்மை, இந்நிகழ்வுக்கு 1500 ஆண்டுகளுக்குப்பின் டைகோ...

மேலும் »

சினிமா

பயணம்: திரைப்பார்வை

பயணம்: திரைப்பார்வை

திருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள்... பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது.

மேலும் »

சினிமா, நிகழ்வுகள்

மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]

மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]

The strength of a chain is determined by its weakest link. நாங்கள் கமல் அண்ட் கோவின் மிகவும் பலவீனமான பகுதி எது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம்... மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது... அரக்கர்களுடன் மோதுவது வெட்டி வேலை, கிளியைக் கொல்வதுதான் ஒரே வழி.

மேலும் »

சமூகம், சினிமா, மகளிர்

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்... ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

மேலும் »

சினிமா

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?... இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது....

மேலும் »

சினிமா

சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

படம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம்மாண்டம் மட்டுமே.சாதாரனமான இடம் இப்படத்தில் வருவது பெருங்குடி குப்பைமேடு மட்டுமே. படம் முழுக்க அல்ட்ரா மாடர்னாகவே இருக்கிறது.

மேலும் »

சினிமா

தி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்

தி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்

1984 -ல் வெளியாகி பெருவெற்றியடைந்த ‘ தி கராத்தே கிட்’ திரைப் படத்தின் புத்தாக்கம்தான் இந்த 2010-ன் ‘ தி கராத்தே கிட்’ . கலிபோர்னியாவில் இருந்து சீனாவுக்கு கதைக் களம் மாறியிருக்கிறது. பழைய நடிகர்களுக்கு மாற்றாக, புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் கராத்தே கிட்- ஆகவும், ஜாக்கி சான் கராத்தே ஆசானாகவும் நடித்துள்ளனர் டெட்ராயிட் நகரத்தின் மோட்டார் வாகன தொழிலின் தோல்வியில் கதை தொடங்குகிறது. தந்தையை இழந்த இளஞ்சிறுவன் ‘ட்ரே பார்க்கரி’ன் ( Dre Parker) தாயார் மோட்டார் வாகன தொழிலின் முடக்கத்தில் வேலையை இழக்கிறார். மோட்டார் வாகன வேலை...

மேலும் »

சினிமா

அங்காடித் தெரு – திரைப்பார்வை

அங்காடித் தெரு – திரைப்பார்வை

'அண்ணாச்சி' முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.. இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும், அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

மேலும் »

சினிமா

The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை

The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை

சீனாவின் சரித்திர பக்கங்களில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகையது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கக்கூடும் உங்களுக்கு. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. சீனாவை ஆண்ட Qing என்னும் அரச வம்சாவளியின் கடைசி பேரரசனாக பட்டம் சூட்டப்பட்ட ”பூ யி”-இன் வாழ்க்கையை சிதைவின்றி சித்தரிக்கிறது The Last Emperor திரைப்படம்.

மேலும் »