சினிமா

சினிமா, பிறமதங்கள், மகளிர்

அடிபணிதல்

October 17, 2013
-
அடிபணிதல்

அடிபணிதல் (Submission) என்ற திரைப்படம் பற்றிய பதிவு இது. டச்சுத் தொலைக் காட்சியில் வெளியிடப் பட்டு பலராலும் பாராட்டப்பட்டு, அதே சமயம் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டானது. அயான் ஹிர்ஸி அலியும், இயக்குனர் தியோடர் வான்-கோவும் இணைந்து எடுத்த படம். வான்-கோ 2004-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியால் ஏழு முறை சுடப்பட்டு, பின் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளியால் வான்-கோவின் உடலில் சொருகப்பட்ட கத்தியில், அயான் ஹிர்ஸி அலியையும் கொல்லப்போவதாக விட்டுச்... [மேலும்..»]

அனுபவம், கலைகள், சினிமா

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்:  பலரோடு எனக்கும் ஒன்று

”பி.பி. ஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். பல மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டு, அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம்” என்று 2012 டிசம்பரில் வந்த கடிதத்தில் கண்டிருந்தது.. ஆச்சரியமாக இருந்தது. இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?.... ”அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம்.... [மேலும்..»]

அஞ்சலி, இசை, கலைகள், சினிமா

அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்

அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்

எண்ணத்தில் ஏறி எப்போது நினைத்தாலும் அவரது எண்ணற்ற பாடலொன்றால் எண்ணம் முழுதும் நிரப்புகின்ற பெரும் இசையாற்றலுக்குச் சொந்தக்காரர்... சரஸ்வதியின் ஒரு சாயலை நமக்குக் காட்டிய பெருமகன் இவர். தன் திறமைக்கு ஏற்ப புகழும் பொருளும் பெயரும் ஈட்டி தமிழக கோடானு கோடி மனங்களில் இடம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர். வாழ்கிறவர்... மதுரையில் சௌராட்டிரக் குடும்பத்தில்  மீனாட்சி ஐயங்கார் என்பவரின் மகனாகப் பிறந்த சௌந்தரராஜன், பிரபல வித்துவான் பூச்சி ஶ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றவர்.... ஒரு நிகழ்ச்சியில் பழம்பெரும் இயக்குனர் ஒருவர் சௌந்தரராஜனைப் பற்றி இப்படிச் சொன்னார் - ... [மேலும்..»]

சினிமா

’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை

March 20, 2013
-
’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை

அடிப்படையில் இது சபிக்கப் பட்ட மானுடர்களின் வலியைப் பேசும் திரைப்படம். பசியின் வலி. அடக்கு முறையின் வலி. வேர் பிடுங்கப் பட்டு ஊரைத் துறந்து பிழைப்பு தேடச் செல்வதன் வலி. அடிமைத் தனத்தின் ஊமை வலி.. டாக்டரும் வெள்ளைக்கார மனைவியும் ஏசு பாட்டுக்கு குத்துப்பாட்டு நடனம் ஆடுகிறார்கள். ரொட்டிகளை வீசியெறிகிறார்கள். தொழிலாளர்கள் முண்டியத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்குகிறார்கள்... கொள்ளை நோய்களின் போது கிறிஸ்தவ பாதிரிகள் – டாக்டர்கள் கூட்டணி எப்படி நடந்து கொண்டது என்பது பற்றி அவர்களே எழுதி வைத்த பல பிரிட்டிஷ் காலகட்டத்திய குறிப்புகள் உள்ளன.... [மேலும்..»]

சினிமா, புத்தகம்

வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி”

வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி”

ஒரு பெரிய பிரசினை வேண்டும். மணி ரத்தினத்துக்கு அது ஒரு கோட்ஸ்டாண்ட். அதில் அவர் தன் காதல் கதையை, பாடல்களை, நடனங்களை, அழகான லொகேஷன்களை, அழகான புகைப்படக் காட்சிகளைத் தொங்க விடுவார்.... ஆனாலும் ரஸவாதம் செய்வதில் மணிரத்தினத்திடம் ஒரு கெட்டிக்காரத்தனம், இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஓடும் ரயில் வண்டியின் மேல் கும்மாங்குத்து ஆட வைத்த தைரியம் வேறு யாருக்கு வந்தது?... என்ன கற்பனை ஐயா, கலை உலக மேதைக்கு! கல்யாணம் எல்லாம் நல்லா நடந்திச்சாய்யா,? என்று கேட்டால் சாப்பாட்டிலே வடை போட்டாங்க, பிரமாதம்” என்று சொல்ல வேண்டி வந்தால் என்ன அர்த்தம்?... மகாதேவன் ரிபேர் வேலையில் ஒரே... [மேலும்..»]

அரசியல், சினிமா, பிறமதங்கள்

கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!

கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!

தணிக்கைத் துறையை விட மேலானவர்களான இஸ்லாமிய அமைப்பினர் கூறிய பல ‘பிழை’களை திருத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ‘கலைஞானி’ கமல்.... முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கி விடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறதா? கைப்பிடி அளவுள்ள மதவெறிக் கும்பலை கையாளத் தெரியாத அளவுக்கு தமிழக அரசு பலவீனமானதா? திரையரங்குகளைத் தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை?....கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா? உங்கள் இஸ்லாமில் கருத்து சுதந்திரமே கிடையாதா? உண்மையிலேயே முகமது நபி... [மேலும்..»]

சினிமா, நிகழ்வுகள், பயங்கரவாதம்

விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்

விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்

ஓவைசி என்றொரு பயங்கரவாதி இந்துக்களை அழித்து விடுவேன் என்று கொக்கரித்த போது இணையத்தில் பெரும்பாலான நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த ஒரு சினிமா நடிகரின் படத்துக்கு தடை வந்த பொழுது மட்டும் அனைவரும் பொங்கி எழுகிறார்கள்... இணையத்திற்கு வெளியே, கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக முஸ்லிம்களிடமிருந்து கவனிக்கத் தக்க வகையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது... வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துபவர் கமலஹாசன். அவருக்காக இன்று வாய்கிழிக்கும் முட்டாள் ஹிந்துக்களுக்கு கமல் மூன்று நாட்கள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் அளித்த பரிசு -... [மேலும்..»]

சினிமா

என் பார்வையில் தமிழ் சினிமா

என் பார்வையில் தமிழ் சினிமா

தமிழ் சினிமா என்று சொல்லப்பட்ட, பேராசையால் உந்தப் பட்டு உருவெடுத்திருக்கும் வணிக கேளிக்கையில் தமிழும் இல்லை. சினிமாவும் இல்லை. அதில் இலக்கியமும் இல்லை. கலை என்று சொல்லக் கூடியதும் எதுவும் இல்லை. அது சந்தைக்கு தேவையான சரக்குகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. சுஜாதா சரியாகச் சொன்ன கனவுத் தொழிற்சாலை. ஆடுகளம், நான் கடவுள், எங்கேயும் எப்போதும் போன்றவை மரபான தமிழ் சினிமா சட்டகத்தையும் மறக்காமல் அதற்கான மசாலாவை தாளித்துக்கொண்டு, தாம் வித்தியாசமானவர்கள் என்று பேர் பண்ணிக் கொள்ளவும் ஆசைப்பட்ட முயற்சிகள்.... முற்றிலும் மாறிய, வறுமைப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு படத்தைப் பற்றி... [மேலும்..»]

சினிமா, பயங்கரவாதம்

துப்பாக்கி – திரை விமர்சனம்

துப்பாக்கி – திரை விமர்சனம்

ஸ்லீப்பர் செல்களைப்பற்றி முதலில் தமிழில் பேச முனையும் திரைப்படம் என்ற அளவிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. அது என்ன ஸ்லீப்பர் செல் என்றால் இது தீவிரவாதத்தின் நவீன முகம். முதலில் எல்லாம் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தும், ஆஃப்கானிஸ் தானிலிருந்தும், சீனா போன்ற தேசங்களில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் . ஆனால் அவை செலவு அதிகம் பிடிக்கும். அதற்காக பயங்கரவாதிகள் கண்டுபிடித்த வழிமுறை தான் இந்த ஸ்லீப்பர் செல்கள். மேலும் ஸ்லீப்பர் செல்களை உபயோகித்து படுபாதக கொலைக்குற்றங்களை அரங்கேற்றுவதன் மூலம் குற்ற வாளிகளை நெருங்குவதும் மிகவும் கடினமான வேலையாக மாறுகிறது. Who is the king pin என்பதை கண்டறிவது... [மேலும்..»]

கல்வி, சினிமா

சாட்டை – திரை விமர்சனம்

சாட்டை – திரை விமர்சனம்

அனைத்தையும் எதிர்த்து தனிமனிதனாக ‘அரசாங்க வாத்தியாக’ கேள்வி கேட்கும், போராடும் தயாளன் எனும் இளம் இயற்பியல் ஆசிரியர். ஹீரோயிசம் இல்லாமல் வேறென்னவாக இருக்கப் போகிறது என்று கேட்கலாம் தான்... அவருடைய பெரிய வலிமை அவருடைய மதிப்பீடுகள் மட்டுமே என காட்டப்படுவதுதான் இத்திரைப்படத்தின் மிகப் பெரிய தார்மிக வலிமை. நம் தமிழ்ச் சூழலில் அது தான் வர்த்தக ரீதியான பலவீனமும்... இத்திரைப்படம் தமிழில் வந்தது தமிழ் சமுதாயத்துக்கு நிச்சயமாக பெருமையளிக்கும் விஷயம். பிரபு சாலமன் உட்பட ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்த வேண்டியது அனைத்து இந்து இயக்கங்களின்... [மேலும்..»]