உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்

வாஸ்கோட காமா கடல் வழி கண்டுபிடித்த கனவான் அல்ல; அவன் ஒரு கிறிஸ்தவ மதவெறி பிடித்த கடற்கொள்ளையன் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய திரைப்பட வரலாற்றில் துணிச்சலான ஒரு முயற்சியே… ஆக்கிரமிப்பாளனுக்கு உதவும் அரவாணி அமைச்சரின் துரோகச் செயல்கள் சுதந்திர இந்தியாவிலும் அரசியல் வாதிகளால் தொடர்வதை குறியீடாக காட்டி இருப்பது அற்புதம்… பல காட்சிகள், ஒளிப்பதிவு நுட்பத்துக்கான முன்மாதிரிகளை உருவாக்கி உள்ளன. உருமி ஒவ்வொரு முறை சுழலும்போதும் காமிராவும் அழகாகச் சுழல்கிறது….

View More உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்

அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு

காலக்கிரமமான சில சம்பவங்களை காலம், இடம், பேச்சு வழக்கு, வாழ்க்கை முறைகள், கள்ளர்களின் கலாசாரங்கள், உணர்ச்சி கொப்பளிக்கும் சித்திரங்கள் போன்ற எதைப் பற்றியும் எந்த பிரக்ஞையுமின்றி, சிறிது கூடக் கவலைப்படாமல் படு செயற்கையான சொதப்பலான ஒரு சினிமாவாக மாற்றியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்… இப்படி, படம் முழுவதும் இவை போன்ற எண்ணற்ற பொருத்தமில்லாத, இயல்பில்லாத, செயற்கையான, அபத்தமான, செறிவற்ற, சொதப்பலான, ஆழமற்ற காட்சிகளாலும் வசனங்களினாலும் நடிப்பினாலும் நிரம்பி வழிகின்றன.

View More அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது.

View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

தெய்வத் திருமகள் – திரைப்பார்வை

எதிர்மறை செய்திகளும் எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை மனிதர்களும் மிக மிகக் குறைவாக இருக்கும் ஒரு கதைக்களம், நிறைவான ஒரு நீண்ட படத்தைத் தருவது இப்படத்தின் சிறப்பம்சம்… நமது கலாச்சாரத்தின் நல்லடையாளமாகத் திகழும் மகளிர் இடும் நெற்றித் திலகம் இப்படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் பாத்திரங்களாலும் தெளிவாகத் துலங்கும்படி உடையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது…

View More தெய்வத் திருமகள் – திரைப்பார்வை

இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]

அவளை அறிந்த ஆண்டானிலிருந்து அடிமை வரை பலராலும் காதலிக்கப்படுவள்… ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற தன் முகத்தை அடிமைக்குக் காட்டும் கிறிஸ்தவம், அதிகாரத்துக்கான யதார்த்த வழியாக அதிகார வர்க்கத்துக்குத் தன்னை முன்வைக்கிறது. பாகனீய குருக்கள் தங்கள் உலகங்களில்… இரத்தவெறியுடன் குவியும் கிறிஸ்தவக் கும்பலைப் பார்த்து, தலைமைப் பூசாரி அதிர்ச்சியுடன் சொல்கிறார், “எங்கிருந்து இத்தனை கிறிஸ்தவர்கள் வந்தார்கள்?”… கிறிஸ்தவனாகும் முன்னால் என்னால் மன்னிக்க முடிந்தது, இப்போது ஏன் முடியவில்லை?… அவன் ஏற்றுக்கொண்ட அன்பு மதம் அவனுக்கு அளித்த பரிசு, தன் காதலிக்குத் தன் கையாலேயே… அவள் கண்டடைந்த உண்மை, இந்நிகழ்வுக்கு 1500 ஆண்டுகளுக்குப்பின் டைகோ ப்ராகே என்கிற வானியலாளரால் கண்டடையப்படுகிறது… இந்தத் திரைப்படத்துக்கு, சரியாக விநியோகஸ்தர்கள் கிடைக்கவில்லை…

View More இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]

பயணம்: திரைப்பார்வை

திருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள்… பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது.

View More பயணம்: திரைப்பார்வை

மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]

The strength of a chain is determined by its weakest link. நாங்கள் கமல் அண்ட் கோவின் மிகவும் பலவீனமான பகுதி எது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம்… மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது… அரக்கர்களுடன் மோதுவது வெட்டி வேலை, கிளியைக் கொல்வதுதான் ஒரே வழி.

View More மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்… ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

View More ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?… இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது….

View More சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்