சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.. சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில் (ஸ்டால் எண் 76 & 77) கிடைக்கும்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்

பல இடங்களில் கிட்டத்தட்ட கண்ணீர் உகுத்துவிடுவேனோ என்ற நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது கதை. ”சுயத்தை மற்றும் வாழ்க்கையைத் தேடும்” நாஞ்சில் நாடனின் முயற்சி முதல் நாவலிலேயே சாத்தியமாகியிருக்கிறது. .. முன்னணி இலக்கிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதிவாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இந்த விருது வழங்கப் படுவது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது…

View More நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்

ஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்”

“மொழி பெயர்ப்பு என்றே தெரியாமல், ஆற்றொழுக்கு போன்ற நடை” என்றெல்லாம் புகழப்படும் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்க்கப்படும் மொழிக்கும் ஆசிரியருக்கும், அந்த எழுத்து நம்முன் விரிக்கும் உலகத்துக்கும் நியாயம் செய்ததாகாது… முதல் கதையைப் படிக்கத் தொடங்கியதுமே என் அனுபவம் அவ்வளவாக உற்சாகம் தருவதாக இருக்கவில்லை… பெரும் அளவுக்கு ஷங்கர நாராயணனின் பார்வையும் தேர்வும் எனக்கும் நிறைவளித்துள்ளது

View More ஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்”

சீனா – விலகும் திரை

நமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல… எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.

View More சீனா – விலகும் திரை

சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்

நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன… ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்… உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள்…

View More சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்

தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் – நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.. ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்…(மூலம்: மிஷேல் டேனினோ)

View More தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..

பாரதத்தின் பண்டைய வரலாற்றினை அறிவது எப்படி என ஆர்வமுடனும் அறிவியல் கண்ணோட்டத்துடனும் அணுகும் எவருக்கும் இந்த நூல் ஒரு நல்ல கையேடு […] ஹரப்பன் பண்பாடு என அழைக்கப்படும் அதன் பரிணாம வளர்ச்சியில் சரஸ்வதி நதி ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது […] தனினோ சரஸ்வதி-சிந்து பண்பாட்டு வெளியில் நம்மை ஒரு பெரிய அகழ்வாராய்ச்சி சுற்றுப்பயணத்தில் அழைத்துச் செல்கிறார் […] இந்த நூல் ஒரு அறிவியல் தேடல். தேடப்படும் பொருளோ நம் நரம்புகளில் இன்றும் பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழும் பண்பாட்டின் மூல ஊற்றுக்களைத் தேடி…

View More மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..

எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்

தனது கொள்கைக்கு நேர் மாறான ஜனசங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடம் உதவி கேட்க ஜெ.பியால் முடிகிறது. தாய்நாட்டிற்கு முன்னால் வேறு எதுவும் பெரியதில்லை என ஜெ.பியின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார் வாஜ்பாய்…அடுத்த கிங்மேக்கரான மூப்பனார் முதல் இன்றைய தங்கபாலு மற்றும் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன்வரை எல்லோரும் நேரு, காந்தி பரம்பரைக்கு கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததைப் போல நடந்துகொண்டுள்ளனர்…

View More எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்

ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

[இந்து மதத்தை] இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவுமாகிவிட்ட கட்டத்தில், ஹிந்து தர்மத்தின் இன்னொரு வெளிப்பாடாகத் தோன்றிய ஆரிய சமாஜம் பற்றியும், அதை உருவாக்கிய துறவியும் ஞானியுமான தயானந்த சரஸ்வதி பற்றியும் ஒரு புத்தகம் தமிழில் வெளிவருகிறதென்றால், அது எதிர்நீச்சலிடும் காரியம் தான். பலத்த தொடர்ந்த இரைச்சலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் காரியம் தான். […….]மலர் மன்னன் தயானந்த சரஸ்வதியின் வரலாற்றையும் அனுபவங்களையும் அவர் காலத்திய சூழலையும், அவர் கருத்துக்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். புராணங்களையும் விக்கிரஹங்களையும், சடங்குகளையும், கோவில்களையும் நிராஹரித்த இந்த நாஸ்திகரையும் தமிழ்ச் சமூகம் அறிந்து கொள்ளட்டுமே என்று.

View More ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]

தான் அன்பும், மதிப்பும் கொண்ட ராஜீவ் இறந்துவிட்டார் என்பதையே சோனியாவால் நம்ப முடியவில்லை. இனி ராஜீவின் அன்பான பேச்சுக்களோ ஆழமான முத்தங்களோ சோனியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை… இந்திரா காந்தியைப் பற்றியும் ராஜீவ் காந்தியைப் பற்றியும் எந்தவிதமான விமர்சனமும் புத்தகத்தில் வைக்கவில்லை என்பது உண்மைதான். போஃபார்ஸ், குத்ரோச்சி பற்றிய சர்ச்சைகளைப் பற்றியும் நான் எழுதவில்லை. காரணம், நேரு குடும்பத்தினர் அனைவரும் நேர்மையாளர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை…

View More சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]