வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு

தொல்லியல் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் ஆர்.நாகஸ்வாமி எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. “தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் தமிழகத்துக்கு வேதத்தின் பங்களிப்பையும் நிறுவியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை” என்றார் டாக்டர் நாகஸ்வாமி….

View More வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..”புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது… சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்…

View More சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது

தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டுவரும் சில நண்பர்களுக்கு எனது பரிந்துரை (நூலகத்தில் போய் புத்தகம் படிப்பதெல்லாம் ruled out, வாங்கித் தான் வாசிக்க வேண்டும் என்பதால், ‘வாங்கி’ படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு)… உங்கள் ஒட்டுமொத்த தமிழ் நவீன இலக்கிய வாசிப்புக்கு இந்த நூலை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். நூலின் கடைசியில் தமிழின் மிகச்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வணிக இலக்கியம் எனப் பட்டியல்கள் உள்ளன.. திரும்பத் திரும்ப வாசித்துத் தீரவேண்டிய, பல எழுத்தாளர்களின் கதைகள் ஒரே புத்தகத்தில் அடங்கிய தொகுப்பு இது… கவிதைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா தெரியவில்லை. ஆனால், கவிதைகளை வாசித்து ரசிக்க இயலாத இலக்கிய வாசிப்பு முழுமையானதல்ல, சொல்லப் போனால், ரொம்பவே அரைகுறையானது…

View More தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை… அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது….

View More கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆதாரபூர்வமான நூலை எழுதினார். மிக முக்கியமான இந்த வரலாற்று நூலை B.R.மகாதேவன் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அளித்திருக்கிறார்..

View More அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்

தமிழில் இப்படி ஒரு நூல் வந்திருப்பது நம் நல்லூழ். இன்றைய அறிவியலுக்கும் பாரத மெய்ஞானச் சிந்தனை முறைகளுக்கும் என்ன தொடர்பு? அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் பாரம்பரியமான சிந்தனை மரபுகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என்னும் கேள்வியுள்ள தேடல் கொண்டவர்களுக்கு வீணான பெருமித மார்தட்டல்களின்றி, மிகக் கறாராக நவீன விஞ்ஞானத்தின் பாய்ச்சலை, பாரதத்தின் மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் விளக்கும் சிறந்த நூல். இந்நூலுக்காக அரவிந்தன் நீலகண்டனுக்கும் சாந்தினிதேவி ராமசாமிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பாரதம் அளித்த தரிசனங்களிலும் நவீன அறிவியலிலும் ஈடுபாடுள்ளவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாது….

View More இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்

ஏசுவின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம், ஏசு போதித்ததாகச் சொல்லப் பட்டும் அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் கிறிஸ்தவ மதப் பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தம் உலகத்தின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏசு சிந்தியதாகச் சொல்லப் படும் ரத்தத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு அதிகமானது என்பதை அறியக் கூடும். மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்தவத்தை கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தும் பல நூல்கள் ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளில் வெளிவந்திருக்கின்றன. தமிழில் அதைப் போன்ற விரிவான தொகுப்பு நூல் ஒன்றும் இல்லாதிருந்தது. உமரி காசிவேலு எழுதியுள்ள இந்த நூல் அக்குறையை ஈடு செய்கிறது….

View More கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்

‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்

ஸ்ரீராமானுஜர் மற்றும் வைணவ ஆசாரியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் முன்வைத்து சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் அவர்கள் எழுதியுள்ள குறுநாவல் ‘நான் இராமானுசன்’…. “ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.. பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது இந்த நூல் துலங்கி நிற்கிறது. ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, நூல் உருக் கொண்ட கதை இதுவே…. ”

View More ‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8

ஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை. நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது.
ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம், “அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை,” என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்,

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8

ஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்

ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக் கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்….

View More ஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்