Payday loans Cialis online
payday loans Car insurance

பண்டிகைகள்

இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள்

இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

September 20, 2009
-
இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது, மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில் இரவைப் பெண்ணாக, தேவியாக உருவகித்தார்கள் போலும்! உலகின் வெளித் தோற்றங்கள் அனைத்தும் காரிருளில் கரைந்து மறையும் அந்தக் காலவெளியை, அக எழுச்சியை விழையும் அனைத்து விதமான மாந்தர்களும் சரணடைகிறார்கள் - ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், போகிகள், யோகிகள், இலக்கின்றித் தவிப்பவர்கள் யாராயினும்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள்

அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

மூன்று முறை "ஓம்" ஜபிக்கவும். கண்களை மூடி, நாபியிலிருந்து ஓங்கார நாதம் எழும்பித் தலை உச்சியிலுள்ள ஸஹஸ்ராரத்தைச் சென்று அடைவதாக பாவனை செய்யவும். ஓங்காரம் ஜபிக்கும்போது நமது தீய இயல்புகளும், கெட்ட எண்ணங்களும் வெளியேறுவதாகவும், நல்ல எண்ணங்களும், நல்லியல்புகளும் நம்முள் நிறைவதாகவும் எண்ண வேண்டும். மேலும், உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்வும், உற்சாகமும் ஏற்படுவதாக பாவனை செய்யவும். [மேலும்..»]

அரசியல், ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள்

பிள்ளையார் தேசத்தில் சதுர்த்தி விழா – ஒரு பார்வை

பிள்ளையார் தேசத்தில் சதுர்த்தி விழா – ஒரு பார்வை

சென்னையை விட அதிக அளவில் முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் மும்பை, ஐதராபாத் போன்ற பெரிய நகரங்களிலும், மற்ற மாநிலங்களிலும், (அதேபோல் மிகவும் விமரிசையாக துர்க்கா பூஜை கொண்டாடப்படும் கல்கத்தா நகரிலும்) இந்த மாதிரிப் பிரச்சினைகள் இல்லாமல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்துக்கள் முழுச் சுதந்திரத்துடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாட அந்தந்த மாநில அரசுகளும், காவல் துறையும் அனுமதித்து ஏற்பாடுகள் செய்யும்போது தமிழகத்தில் மட்டும் ஏன்.... [மேலும்..»]

ஆன்மிகம், பண்டிகைகள், வழிகாட்டிகள்

தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு

தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு

"... இந்த புத்தகம் முழுக்க முழுக்க நடைமுறை உபயோகத்திற்கானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே இல்லை. நாம் மட்டும் புரிந்துகொண்டிருந்தால் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த படையெடுப்புகளோ, நமக்குள் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளோ, பிரபுத்துவ கொடூரங்களோ, பிரம்மாண்டமான ஏழ்மையோ ஏற்பட்டிருக்காது. நாம் கீதைக்கு முக்கியத்துவமே தரவில்லை... " [மேலும்..»]

ஆன்மிகம், பண்டிகைகள், வரலாறு

காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

July 2, 2009
-
காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக் காரர்கள், கப்பல்களில் ஏறித் தப்புவதற்கு முன் அதனை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர், அது முடியவில்லை... மன்னர்கள், துறவிகள், மடங்கள் மட்டுமல்லாது, எல்லா சமூகத்து மக்களும் இந்தக் கோவிலுடன் தொடர்பு கொண்டு முருகனை வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. [மேலும்..»]

பண்டிகைகள்

அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா

அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா

பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திலும் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்றுக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த விரோதி வருடத்தினையும் பாரதி தமிழ்ச் சங்கம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதம் கொண்டாடப் பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு அரசியல் காரணங்களுக்காகத் தற்காலிகமாக தமிழ் நாட்டில் ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டாலும், தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டின் அடியொற்றியும் தமிழ் முன்னோர்களின் மூத்த... [மேலும்..»]

பண்டிகைகள்

அக்‌ஷய திருதியையும் அசட்டு க்யூவும்

April 23, 2009
-
அக்‌ஷய திருதியையும் அசட்டு க்யூவும்

2009 ஏப்ரல் 27-ம் நாள் அக்‌ஷய திருதியை. இந்த நாளின் பெயரைச் சொன்னவுடனேயே நகைக் கடை க்யூ நினைவுக்கு வருமாறு செய்துவிட்டனர் நகை வியாபாரிகள், தங்கள் அதீத விளம்பரக் கூச்சலினால்! இதில் உலகத் தங்கக் குழுமத்துக்கும் (World Gold Council) பங்கு உண்டு என்பது வர்த்தக தினசரிகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையில் அக்‌ஷய திருதியை தினத்தன்று நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. சென்ற சில பத்தாண்டுகளில் வணிக நோக்கத்தில் கிளப்பி விடப்பட்ட மாயை இது. ஒரே நாளில் சந்தைக்... [மேலும்..»]

பண்டிகைகள்

பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்

January 20, 2009
-
பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்

தமிழ்நாட்டில் தன் வீட்டின் முன் பொங்கலிடப் பொங்கல் அன்று தமிழ் இந்துவுக்குத் தடை. காரணம் கிறிஸ்தவர்கள். என்னதான் பொங்கல் கொண்டாடுவதாகக் கிறிஸ்தவ மதமாற்றிகள் மாய்மாலம் செய்தாலும் அந்தப் பழம்பெரும் இந்துப் பண்டிகை மீதுதான் எவ்வளவு வெறுப்பு! எவ்வளவு வன்மம்! எத்தனை எதிர்ப்பு! [மேலும்..»]

பண்டிகைகள்

முத்தாலம்மன் பொங்கல்

முத்தாலம்மன் பொங்கல்

கிட்டத்தட்ட அறுநூறு வருஷம் முந்தி எங்கூர்ல (தே. கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்) பஞ்சம் தலைவிரிச்சி ஆடுனப்ப ஆந்திராவுல உள்ள நவாப்புக படைஎடுப்புனால எங்க ஊருக்கு ஒரு பாட்டி ஆறு பெண் கொழந்தைகளோட வந்தாங்க.. கிராமத்துல அன்னைக்கு நல்ல வசதியா இருந்த அக்ரகார ராவ் ( அப்ப அவரு கிரமத்தலைவரா இருந்தவரு) வீட்டுலையும் நாயக்கரைய்யா வீட்டுலையும் பாட்டி புள்ளைங்களோட தங்குச்சி.. கிராமத்துக்கு வந்து அடைக்கலமான அவங்கள தங்களோட புள்ளையாவே நெனச்ச கிராமத்து மக்கள் அந்த ஆறு பொண்ணுங்களுக்கும் மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப அந்த பாட்டி நாங்கல்லாம் தெய்வ பிறவிக.. எங்களுக்கு விதிச்ச சாபத்தால மனுசப்பிறவிகளா நடமாடிக்கிட்டிருக்கோம்.. சாபம்... [மேலும்..»]

பண்டிகைகள்

மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா

மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா

தாயுணர்வு கொண்ட ஆன்மிகமே பூமியின் காயங்களுக்கும் மானுட நல்வாழ்வுக்கும் அருமருந்தாக அமையும் என்பதே நரகாசுர வதம் எனும் தொன்மம் இன்றைய சூழலில் நமக்கு அளிக்கும் திருசெய்தியாகும்... மாசற்ற செல்வம் தோன்றிய திருநாள் தீபாவளி. இயற்கையுடன் இணைந்த ஆன்மிகத்துக்கு இறைவனே சான்றுரைத்த திருநாள். தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் சத்தியாகிரகத்தின் முன்னோடியாக விளங்கிய தீபாவளி இந்திய கொத்தடிமை தொழிலாளர்களின் தொடர்ந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டு போராட்டத்தினால் 1906 இல்தான் கொண்டாட அனுமதிக்கப்பட்டது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! [மேலும்..»]