சூழலியல்

சுற்றுச் சூழல் குறித்த பதிவுகள்..

அரசியல், சமூகம், சூழலியல், தேசிய பிரச்சினைகள், தொடர், பொது

மோடி எனும் அபாயம்

மோடி எனும் அபாயம்

எந்த ஒரு அரசு திட்டமும் செயல்படுத்தப்படும் போது எந்த அளவு ஊழலைக் கொண்டதாக அறியப்படுகிறதோ அந்த அளவு ஜனநாயகத்தன்மையை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் வடிவம்தான் ஊழல். ஏன் இன்றைக்கு சுவிஸ் வங்கி கணக்குகள் என்றெல்லாம் பேசப்படுகிறதே. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் சங்க புலவனின் பார்வையில் தொடங்கிய அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கதைகள், சூழலியல், பொது

நிலமென்னும் நல்லாள்

December 17, 2013
-
நிலமென்னும் நல்லாள்

தண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்?” ப்ருது மனம் தெளிந்தான்... சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்? என்று வேண்டினான். அவர்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக, மரங்களின் மகளான மாரீஷாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்... நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்.... [மேலும்..»]

சூழலியல், பொது, போஸ்டர்கள், வழிகாட்டிகள்

பாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்

December 11, 2013
-
பாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய். எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம். அகில முழுதும் சுழலுகிறது... மனிதனும் பிற பிராணிகளும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் பூமி எனும் ஒரே அதி-உயிரின் பாகங்களே ஆகும். எனவே சுற்றுச் சூழலையும் உயிரினங்களையும் பெரும் உயிரின் பிரிக்க இயலாத முழுமை அமைப்பாக காண வேண்டும். இந்த அடிப்படையில் ஆராய்ச்சிகளும் வடிவமைக்கப் பட வேண்டும்.... [மேலும்..»]

சமூகம், சூழலியல், தத்துவம், தொடர், வரலாறு

அதிகாரத்தின் முகமூடி

அதிகாரத்தின் முகமூடி

காந்தி தீவிர அரசியல்வாதி. அவர் ஒரு யதார்த்தவாதியும் கூட அவருடைய முக்கிய தாக்கம் கிறிஸ்தவம். அப்படி இருக்க அவரை எப்படி ஆழமான சூழலியலின் பிதாமகர் என சொல்லலாம்? அது அவருக்கு முழுக்க முழுக்க தகுதி இல்லாத ஒன்று. இப்படி காந்தியின் சூழலியல் சார்ந்த சிந்தனைகளாக முன்வைக்கப்படுபவை நிராகரிக்கப்படுகின்றன. காந்தியை குறித்து இந்துத்துவர்கள் வைக்கும் விமர்சனம் என்ன? காந்தியின் குரல் எந்த அளவு முக்கியத்துவம் கொண்டது?.... குஹா காந்தியை எத்தனை படோடபமாக முன்வைத்தாலும் அவர் உண்மையில் முன்வைப்பது நேருவைத்தான். நேரு எனும் அதிகார மைய அரசியல்வாதியின் அரசியலுக்கு குஹா அளிக்கும் ஒரு முகமூடிதான் காந்தி.... ... [மேலும்..»]

சமூகம், சூழலியல், வழிகாட்டிகள்

ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி

September 30, 2013
-
ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி

ஹரித்வாரில் உள்ள சாந்தி சதன் ஆசிரமத்தில் மூன்று மாதங்களாக உண்ணா நோன்பு இருக்கிறார் அந்த 81 வயது முதிய துறவி சுவாமி ஞான ஸ்வரூப் ஸானந்த். ஒரே விஷயத்திற்காக அவர் அறிவித்திருக்கும் ஐந்தாவது கால வரையற்ற உண்ணா நோன்பு இது... கட்டுப் பாடற்ற, அசுரத் தனமான அணைத்திட்டங்களும் மின் உற்பத்தி நிலையங்களும் கங்கை நதியையும் இந்தப் பிரதேசத்தின் சூழலியலையும் முற்றிலுமாக அழித்து விடும் என்று அவர் கருதுகிறார்... சாது பழமைவாதியும் அல்ல, முன்னேற்றத்திற்கு எதிரியும் அல்ல. பூர்வாசிரமத்தில் ஜி.டி.அகர்வால் என்ற சூழலியல் பொறியாளர் (Environmental Engineer) அவர்... "2010ம் ஆண்டு எங்களது தொடர்ந்த போராட்டத்தால் மூன்று... [மேலும்..»]

சூழலியல், புத்தகம், பொருளாதாரம்

பசுமைப் புரட்சியின் கதை

பசுமைப் புரட்சியின் கதை

அந்த நண்பர்  விவசாயி  மகன் .   அக் கணம்  நான்  அந்த  நண்பர் மீது  பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி -   அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப் படாதது... நமது  வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை  என அது  எதிர்கொண்டு  முன்னகர வேண்டிய  சவால்கள் மீதும்  கவனம் குவித்து, திறன்வாயந்த  அடிப்படை நூலாக  வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம்  அவர்கள் எழுதிய ''பசுமைப் புரட்சியின்... [மேலும்..»]

சமூகம், சூழலியல், புத்தகம், பொருளாதாரம்

விவசாயிகளைப் பாதுகாப்போம்

விவசாயிகளைப்  பாதுகாப்போம்

விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் சிக்கல். இதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசித்ததின் விளைவாக இப்புத்தகத்தை எழுதியிருக்கும் சு.சண்முகவேல் அடிப்படையில் ஒரு விவசாயி. விளைச்சல் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே கண்டவர். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது....ஐந்து அருமையான செயல்திட்டங்களை இந்நூல் முன்வைக்கிறது. 'வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல’ என்று நூலை வாழ்த்தியுள்ளார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்... [மேலும்..»]