பொருளாதாரம்

அரசியல், நிகழ்வுகள், பொருளாதாரம்

சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்

சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்

நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் 'கோடிக் கரங்கள்' நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கழிசடைகளை நம்பித் தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள்.... எப்.டி.ஐ.யை இறுதிவரை எதிர்த்த பா.ஜ.க, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், அதிமுக, திரிணாமூல், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.. லோக்சபாவிலும் சரி, ராஜ்ய சபாவிலும் சரி, எப்.டி.ஐ.யை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ஆயினும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ‘ஏதோ ஒரு முறையில்’ தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அரசு நெஞ்சை... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள், பொருளாதாரம்

2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்

2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்

உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டா விருப்பாக சமீபத்தில் நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிகக் குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது. இப்படி ஏலம் குறைந்ததற்குக் காரணங்கள் என்ன என்று அலசுவோம்..... நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு... தற்போது நாடு முழுவதும் 9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இனிமேல் புதிய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை... [மேலும்..»]

சமூகம், பொருளாதாரம்

இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]

இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]

மின் உற்பத்தி நிறுவனங்களைச் செயல்படாமல் இருத்திவைப்பதன் மூலம், அதிக விலைக்கு பிற மாநிலங்களிடமிருந்தோ, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ மின்சாரம் வாங்குவதனால் அவர்களிடமிருந்து கிடைக்கும் கமிஷனுக்காகவே இது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் கழகங்கள் ஈடுபடுகின்றன... இந்தியாவின் வீடுகளில் உள்ள மின்னணுச் சாதனங்களைப் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில்... நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பழுது நீக்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுதல் மூலம் அவற்றிலிருந்து மிக மிகக் குறைந்த செலவில் முழு அளவிலான மின்சாரத்தைப் பெறலாம் (யூனிட் 60 பைசா அளவில்)... [மேலும்..»]

சமூகம், பொருளாதாரம்

இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]

இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]

அரசு, அதன் செயல்படாத அமைச்சர்கள், செயல்திறமையற்ற அதிகாரிகள் என்ற கேவலமான கூட்டணியால் 6 கோடி மக்கள் தினமும் பரிதவிக்கிறார்கள்... மிகுமின்சார உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழகத்தை, அதன் பிறகு மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் மின் உற்பத்திக்கான தேவையை சிறிதும் கவனியாமல் விதவிதமான ஊழல்களில் ஊறித்திளைத்து, மக்களைப் பெரும் அவதியில் தள்ளினர்... மத்திய காங்கிரஸ் அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கும், ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் நிச்சயம் ஏற்பட்டு விடவே கூடாது என்ற கருணாநதியின் நல்ல எண்ணமும்தான் ஒட்டுமொத்த இருளுக்கும் காரணம்... காற்றாலை, அனல்மின், நீர்மின் திட்டங்களையும் ஒழுங்காகப் பராமரிக்காமல் கவனமாக வீணாக்கியது... [மேலும்..»]

அரசியல், பொருளாதாரம்

காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்

காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்

இந்த சிலிண்டர் கட்டுப்பாடு வெறும் விலை வித்யாசம் மட்டும் தானா? காங்கிரஸின் சதி இதில் என்ன?... பேண்ட் வாசிப்பவனின் மந்திர இசைக்கு மயங்கி ஏமாளி எலிகள் மலையிலிருந்து விழுந்து மாய்த்துக்கொண்டதைப்போல, அயல் நாட்டு சோனியாவின் குரூரமான இசைக்குப் பின்னால் செய்வதறியாது சென்று கொண்டிருக்கிறது தேசம்... தினம் தினம் 42 லட்சம் இல்லங்களைச் சென்றடையும் சிலிண்டர்களின் 150% விலையேற்றம், மக்களிடம் மிக மோசமாக உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும்... அப்படியானால் இது எப்படி ஆம் ஆத்மியின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறீர்கள்? 523 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6000-க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆண்டுக்கு 3,00,000 க்கும் மேற்பட்ட... [மேலும்..»]

சமூகம், சூழலியல், புத்தகம், பொருளாதாரம்

விவசாயிகளைப் பாதுகாப்போம்

விவசாயிகளைப்  பாதுகாப்போம்

விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் சிக்கல். இதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசித்ததின் விளைவாக இப்புத்தகத்தை எழுதியிருக்கும் சு.சண்முகவேல் அடிப்படையில் ஒரு விவசாயி. விளைச்சல் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே கண்டவர். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது....ஐந்து அருமையான செயல்திட்டங்களை இந்நூல் முன்வைக்கிறது. 'வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல’ என்று நூலை வாழ்த்தியுள்ளார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்... [மேலும்..»]

அரசியல், பொருளாதாரம்

நிலக்கரி மோசடி 1.86 லட்சம் கோடியல்ல 51 லட்சம் கோடி

நிலக்கரி மோசடி 1.86 லட்சம் கோடியல்ல 51 லட்சம் கோடி

புதிய பொருளாதாரக் கொள்கையும் கொள்ளையடிக்க சாதகமாகக் கொண்டுவரப்பட்டது... உள்நாட்டில் மின் உற்பத்தி செய்வதற்காக குறைந்த விலையில் வாங்கி, குறைந்த விலையில் அனல் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் இந்த நிறுவனங்களுக்கு நிலக்கரி கொடுக்கப்பட்டது. ஏற்றுமதிக்கு எந்த அனுமதியும் நிபந்தனையும் அதில் இல்லை. ஆனால்... வேஸ்ட் பேப்பர் கூட கிலோ 12 ரூபாய்க்கு விற்கப்படும்போது நிலக்கரி கிலோ 10.25 ரூபாய்க்கு... "நிலக்கரியை வெட்டி எடுத்து விற்றிருந்தால் தானே 'அரசாங்கத்திற்கு இழப்பு'? இது ஜீரோ லாஸ்" என்கிற நிதியமைச்சர்... [மேலும்..»]

அரசியல், தொடர், பொருளாதாரம்

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8

பொதுநலனைக் கொண்ட சமூகம் இயற்கையிலேயே உறுதி அற்றது. சுயநல உறுப்பினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பு அதில் உள்ளது.... தன் தேவைக்கேற்ற பூக்களை தானாகவே உற்பத்தி செய்து கொண்டிருந்த மரங்கள், இன்று இலைகள் இல்லாத கிளைகளைக் கொண்டதால், பூமழை பெய்யுமா என்று வானை நோக்கி பிச்சை கேட்கின்றன... "நான் அப்படி ஆசைப்பட வில்லை. நான் எதிர்பார்க்கும் இந்தியாவில், இளவரசர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் இடங்கள் இருக்கவே செய்கின்றன" என்றார் காந்திஜி... ஏழைகளுக்கு உதவாமல் போனாலும் கூட, அறிவியல் ஆராய்ச்சியில் பின் தங்கமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூற நம்மில் தலைவர்கள் இல்லை.... [மேலும்..»]

அரசியல், தொடர், பொருளாதாரம்

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7

ஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்... பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது...5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு... இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100... [மேலும்..»]

சமூகம், பொருளாதாரம்

ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்

ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்

பிரமிடின் அடித்தட்டில் இருப்பவர்கள் மிகவும் ஏமாளிகள், கொஞ்சம் மேல் அடுக்கில் உள்ளவர்கள் சுமாரான ஏமாளிகள்,மேலே உள்ளவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள். அனுபவிக்கத் தெரிந்தவர்கள்... எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த 'எம்.எல்.எம்'-ல் மட்டும் நஷ்டமே இல்லை!.... நேஷனல் ஜியாகரஃபி சேனலில் மட்டுமே பார்த்திருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள்?... பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்! என்ன செய்வது?... [மேலும்..»]