கல்வி

கல்வி குறித்த பதிவுகள்

கல்வி, புத்தகம், வரலாறு

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின்... [மேலும்..»]

கல்வி, சமூகம், சிறுவர்

ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு

ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு

அந்தப் பெண் அந்தச் சிறுவனை அணைத்துத் தூக்கி அவசரமாய் வெளியில் கிளம்ப முயன்றார். அந்தப் பையன் தரையில் படுத்துக் கொண்டு பிடிகொடுக்காமல் கையையும் காலையும் ஆட்டியபடி புரண்டு அழுது கொண்டிருந்தான்.... ”உலகம் உன்னையும் என்னையும் நார்மல்-னு சொல்லுது. ஆனால் நீயும் நானும் ஒரே மாதிரியா இருக்கோம்? இந்தக் குழந்தைகள் தலையில் ஒரு வார்த்தையைக் கட்டி, அதனாலேயே அவங்களை ஒதுக்கத் தேவையில்லை... ஆட்டிஸம் இருக்கற எல்லாரையும் குறைபாடு இருக்கறவங்களாப் பார்க்க வேண்டியத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகள் இப்ப ஆட்டிஸமை குறைபாடு-னு பார்க்காம வேறுபாடு-னு பார்க்கத் துவங்கியிருக்காங்க...." [மேலும்..»]

கல்வி, வழிகாட்டிகள், விவேகானந்தர்

கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

திருவள்ளுவர் – சுவாமி விவேகானந்தர்- இருவருமே மனிதப் பிறவியின் மாண்பை உணர்த்தியிருக்கிறார்கள். தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார்கள். சோம்பலைத் தூற்றியிருக்கிறார்கள்.முயற்சியின் மேன்மையைப் போற்றியிருக்கிறார்கள். ஒழுக்கத்தின் பெருமையை உணரச் Thiruvalluvar 1செய்திருக்கிறார்கள். நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியைப் பற்றிய கருத்துக்களை அழகாக வடித்திருக்கிறார்கள். [மேலும்..»]

அஞ்சலி, கல்வி, சமூகம், பிறமதங்கள், மகளிர்

கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்

கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்

தொடர்ந்து கிறிஸ்துவப் பள்ளிகளிலும், ஹாஸ்டல்களிலும் இந்து மாணவிகள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள் என்பதான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாது. அவற்றின் வாய் முழுக்க மாட்டிறைச்சி. நம் குழந்தைகளுக்காக நாம்தான் பேச வேண்டும். இந்திய அரசின் சிறுபான்மை சலுகை என்கிற பெயரில் நடத்தப்படும் கல்விப் பாரபட்சக் கொள்கையின் (educational apartheid) கோர விளைவுதான் இது. அரசு கேள்வி கேட்க முடியாது. நாங்கள் சிறுபான்மையினர் என்று ஓமலூர் சுகன்யா கொலை விவகாரத்தில் பிஷப் பதிலளித்தது நினைவிருக்கிறதா? சென்னை ரஞ்சனி, ஓமலூர் சுகன்யா, புதுவை அனந்த வள்ளி, என்று... [மேலும்..»]

அரசியல், கல்வி, சமூகம், நிகழ்வுகள், விவாதம்

சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?

August 27, 2015
-
சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியது சம்ஸ்கிருதம் மற்றெல்லா மொழிகளையும் விட அறிவியல்*பூர்வமான* மொழி என்பதைத் தானே தவிர, உடனடியாக அறிவியல் பாடங்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டும் என்பதாக அல்ல... வேறெந்த மாநிலத்திலும், ஆங்கில ஊடகங்களிலும் கூட இந்த செய்தியினால் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதை ஏதோ பெரிய பிரசினையாக்கிக் கொண்டிருக்கின்றன. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்று பாரதியார் சொல்லவில்லையா என்ன? அதே போன்ற ஒரு லட்சிய வாசகம் தான் "க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்" என்பது. எல்லா மக்கள் இயக்கங்களுக்கும் இத்தகைய வாசகங்கள் தேவை...மொத்தத்தில்... [மேலும்..»]

கல்வி, சமூகம், புத்தகம், விவாதம்

தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்

தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்

எளிய மக்களுக்கு மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களுக்கும் கூட இந்த இரண்டு கல்வி முறைகளில் தனியார் கல்வியே உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது நல்ல வேலையைப் பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.... இந்தப் புத்தகத்தில் தமிழகத்தின் 9 முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் தமது கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவை ‘ஆழம்’ இதழில் தொடர் பேட்டியாக வெளியாகின. தாய் மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, மனனத்தை ஒரு துணை வழியாக மட்டுமே பயன்படுத்துதல், தேச - சமூக நலன் சார்ந்த கல்வி, மாணவர்களின் தனித் திறமைகள், விருப்பங்களுக்கு போதிய வாய்ப்பு... [மேலும்..»]

அரசியல், கல்வி, வரலாறு, வழிகாட்டிகள், விவாதம்

மண்ணுருண்டையா மாளவியா?

மண்ணுருண்டையா மாளவியா?

மதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார். தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது? இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்... ஆனால் உண்மை என்ன? [மேலும்..»]

அரசியல், கல்வி, சமூகசேவை, விவாதம்

இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

October 20, 2014
-
இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகளின் கண்ணோட்டமே நோபல் பரிசுக் குழுவின் விளக்கத்தில் தெரிகிறது.. இந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் மலாலா என்ற பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில்... [மேலும்..»]

அரசியல், அறிவியல், கல்வி, நிகழ்வுகள், விவாதம்

செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்

September 26, 2014
-
செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப் பட்டது என்பது இந்திய மக்களிடம் மட்டும் இன்றி உலக அளவிலும் இந்தியாவை இனி நிமிர்ந்து பார்க்க வைத்துள்ள ஒரு நிகழ்வு. குறைந்த காலத்திற்குள் வெகு குறைவான நிதியில் இந்தியா இதைச் சாதித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல... இந்தியாவில் கக்கூஸ் இல்லை, பள்ளிக் கூடம் இல்லை, குடிநீர் இல்லை, இந்த லட்சணத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு கோள் அனுப்புவது தேவையா என்றெல்லாம் இடது சாரிகளும் ஞாநி சங்கரன் போன்ற அணு சக்தி விஞ்ஞானிகளும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா அறிவியல் ஆராய்ச்சிகளில் செய்யும் சொற்ப முதலீட்டைக் கூட அவதூறு... [மேலும்..»]

அரசியல், கல்வி, சமூகம், தேசிய விழாக்கள்

குரு உத்ஸவ்

September 2, 2014
-
குரு உத்ஸவ்

நீண்ட காலத்திற்குப் பிறகு, மாணவர்களும் இளைஞர்களும் விரும்பிக் கேட்கும் வகையில் பேசக் கூடிய ஒரு பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார்.. தனது சொற்களாலும் செயல்களாலும் உழைப்பாலும் சிந்தனைகளாலும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தகுதி பெற்ற ஒரு பிரதமர்.... 'குரு' என்ற சொல் ஆன்மீக, சமய ரீதியான பயன்பாட்டைத் தாண்டி எப்போதோ உலகளாவிய ஒரு சொல்லாகி விட்டது. சங்கீத குரு, கிரிக்கெட் குரு, Guru Hacker, C++ Guru, Management Guru, Marketing Guru எல்லாம் சர்வசாதாரணமாக பயன்பாட்டில் உள்ளது. உத்ஸவ் என்பதும் மதரீதியான சொல் அல்ல. கொண்டாட்டம் என்பதற்கான இந்தியப் பண்பாட்டுச் சொல் அது. எல்லாவித கொண்டாட்டங்களையும் குறிக்கும்...... [மேலும்..»]