குமட்டவைக்கும் காங்கிரஸ் முகஸ்துதிகள்

Respectful Warm Welcome to the Rockfort City of Trichy today to Our Living BHARATMATA who spurned High Office in the footsteps of the Mahatma Longest Serving President of AICC Inspirer of Social Scheme for Aam Aadmi and Selfless Leader of India in the New Millenium. Let us Strengthen to build a Strong Self Reliant Secular and Shining India…

View More குமட்டவைக்கும் காங்கிரஸ் முகஸ்துதிகள்

இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு

மீனவர்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லி அவர்களை மதம் மாற்றியதைத் தவிர வேறு எந்த சாதனையும் இதர அமைப்புகளால் நடக்கவில்லை. மதம் மாறாத இந்து மீனவர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பும் இது நாள் வரை பெரிதாக கிட்டவில்லை. அவர்களது பிரச்சனைகளை பேச அமைப்புகள் பெரிதாக உருவாகவில்லை. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி இவ்வாறு மாநாடுகள், போராட்டங்கள் என்று எடுத்து செய்வது பாராட்டுக்குரியது.

View More இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு

கள்ளக் காதல்

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

View More கள்ளக் காதல்

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு

விழாக்கோலம் பூண்ட தஞ்சை. கிராமக் கலை நிகழ்ச்சிகள், நடன கலை விழா நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள் என்று அரிய நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நடனக் கலைஞர்கள், பத்மா சுப்ரமணியம் உட்பட நடனமாடிய மயிர்க்கூச்செரியும் நடன நிகழ்ச்சி! இவ்வாறு பல நல்ல நிகழ்வுகளுடன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாகவே நடந்தேறியது. முதல்வரைப் பற்றி புகழுரைகளுக்கும் பஞ்சமில்லை. முதல்வரைப் பற்றி வழக்கமான புகழுரைகள், குளறுபடிகள் இவற்றுக்கும் குறைவில்லை.

View More தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1

1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், டிச. 6 -ல் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை. [….] 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.

View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1

அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்

தீர்ப்பு தெளிவாக இருந்தது – அது ராமர் கோவில்தான். அந்த இடம் ராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது… இல்லாத மசூதிக்கு பொல்லாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏதோ பெரிய அநியாயம் செய்யப்பட்டு விட்டதாக போதிக்கப் பட்டது. இந்த 18 வருட பொய் பிரச்சாரத்தைத் தான் அக்குவேறு ஆணி வேறாக இந்த தீர்ப்பு உடைத்து எறிந்திருக்கிறது. ஹிந்துக்கள் ஈடுபட்டது நியாயமான ஒரு போராட்டத்தில் தான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது…

View More அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்

அறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்

இந்துத் தொல்மரபின் அடிநாதமாக, மூலவேராக இருப்பது அறிவியக்கம். உரையாடலாக, அனுபவப் பகிர்தலாக, தனிமனித சுதந்திரத்தோடு தொடரும் இந்த அறிவியக்கம் இந்து மதங்களில் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.[…] எனவே, இந்த இந்துத்துவ மரபினை ஒட்டிய வடிவில் கேள்வி-பதில் பகுதியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம்.[…]சரி. இந்தப் பகுதிக்குக் கேள்விகளை யார் கேட்கலாம்?[….]யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

View More அறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்

அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

பல நூற்றாண்டுகளிலும் ராம ஜன்ம பூமியை மீட்க மன்னர்கள், படைவீரர்கள், சாதுக்கள், சாமானியர்கள், வனவாசிகள் என்று பல தரப்பட்ட இந்துக்களும் தொடர்ந்து போராடி ரத்தம் சிந்தியுள்ளனர்… நமது அரசியலில், சமூகத்தில், ஏன் நமது உண்மையான தேசிய அடையாளம் என்ன என்ற உணர்விலேயே கூட அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது… ஏன் இந்தியாவில் இத்தனை இதயங்களில் அந்த உணர்வு எதிரொலிக்கிறது என்று புரிந்து கொள்ள முயலாத அறியாமையே, அதனை பாசிசம் என்று மொண்ணையாக வசைபாடுகிறது..

View More அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

மறைந்தவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கபட்டால் அவர் மோட்சம் அடைவார் என்பதும் அந்த காரியத்தை செய்தவர்கள் புண்னியம் செய்தவர்கள் என்பது இந்துகளின் நம்பிக்கை. முன்பின் அறியாத ஒரு தனிமனிதனின் மத உனர்வுகளை மதித்து 63 ஆண்டுகள் அவரது அஸ்தியை பாதுகாத்த ஆஸ்திரேலியர் திருமதி ஆலிஸ்கெய்ட் குடுமபத்தினர் தான் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்…

View More ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?

முதலில் போலீஸ் விசாரணை, விசாரணைக்குத் தடை, விசாரித்த பின் மறு விசாரணைக்கு மனு, ஸீ பி. ஐ விசாரனைக்கு கோரிக்கை, அதெல்லாம் முடிந்த பின், வாய்தா மேல் வாய்தா, அதைத் தாண்டினால் தீர்ப்பு ஒத்தி வைப்பு, தீர்ப்பு சொல்லப் போனால், அதற்கு தடை உத்தரவு என்று பல தலைமுறைகளுக்கு சாதாரண வழக்குகளே இழுத்தடிக்கின்றன. அயோத்தி பல நூறு வருடங்களாக இருந்து வரும் பிரச்னை. இதில் தாமதம் ஆவது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும், முடிவான தீர்ப்பு என்றே ஒன்று வெளியிடப் படுமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

View More அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?