குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை... நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.. சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்... இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம்...
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

