வழிகாட்டிகள்

குருமார்கள், மகான்கள், வீரர்கள், பெண்மணிகள், சமூக சீர்திருத்தவாதிகள், அறிஞர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான இந்து ஆன்றோர்களையும் பற்றி..

கல்வி, வழிகாட்டிகள், விவேகானந்தர்

கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

திருவள்ளுவர் – சுவாமி விவேகானந்தர்- இருவருமே மனிதப் பிறவியின் மாண்பை உணர்த்தியிருக்கிறார்கள். தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார்கள். சோம்பலைத் தூற்றியிருக்கிறார்கள்.முயற்சியின் மேன்மையைப் போற்றியிருக்கிறார்கள். ஒழுக்கத்தின் பெருமையை உணரச் Thiruvalluvar 1செய்திருக்கிறார்கள். நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியைப் பற்றிய கருத்துக்களை அழகாக வடித்திருக்கிறார்கள். [மேலும்..»]

இலங்கைத் தமிழர், சைவம், வழிகாட்டிகள்

ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது. [மேலும்..»]

அஞ்சலி, வழிகாட்டிகள்

அஞ்சலி: அஷோக் சிங்கல்

அஞ்சலி: அஷோக் சிங்கல்

ராமஜன்ம பூமி இயக்கம் தேசிய அளவில் மையம் கொண்டது முதல், தன்னை முழுமையாக அதனுடன் பிணைத்துக் கொண்டார் அசோக் சிங்கல். 1990ல் முலாயம் தலைமையிலான உ.பி மாநில அரசு அமைதியாக கரசேவையில் ஈடுபட்டிருந்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது, களத்தில் இறங்கி தொண்டர்களுடன் நின்று போராடியவர். முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு கரசேவர்களுடன் அவர் நிற்கும் புகைப்படம் வரலாற்றில் அழியாத இடம் பெற்று விட்டது... "மனுஸ்மிருதியின் சாதிய கருத்துக்களை வி.ஹி.ப நிராகரிக்கிறது. பண்பாடும் கலாசாரமும் கொண்ட ஒரு சமூகத்தில் அத்தகைய கருத்துக்களுக்கு... [மேலும்..»]

கலைகள், நாடகம், வழிகாட்டிகள்

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3

நவீனம் எதுவும் இல்லாத அர்த்தமும் இல்லாத ஒரு அபத்தம் தமிழில் தான் நவீனம் என்று அரங்கேறி வருகிறது. இதில் ஒரே விதிவிலக்கு ராமானுஜம் தான். அவரிடம் பாவனைகள், அலட்டல்கள் ஏதும் இல்லை. அவர் மேடையேற்ற எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நாடகமும் அதற்கு எத்தகைய மேடை வடிவம் கொடுக்கவேண்டும் என்று யோசிக்கிறார். வெறியாட்டம் வேறு, செம்பவளக்காளி வேறு, அண்டோறா வேறு வடிவங்களில் வடிவமைத்திருக்கிறார். அவை எனக்கு அர்த்தமுள்ளவையாக வந்து சேர்ந்துள்ளன. கைசிகி என்ற நூற்றாண்டு பழம் நாடகத்தைப் புதுப்பித்துக் கையாள்வதும் வேறாகத்தான்..... அவர்களுக்கு சைன்யமோ வேறு செட்டோ தேவை இல்லை. யுத்த களம் நம் கண்முன் நிற்கும். ஒரு புதிய... [மேலும்..»]

கலைகள், நாடகம், வழிகாட்டிகள்

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2

தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன்... திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது... ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும்... [மேலும்..»]

அஞ்சலி, இலக்கியம், கலைகள், வழிகாட்டிகள்

அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்

அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்

மதிப்பிற்குரிய பெரியவர் வெங்கட் சாமிநாதன் அடுத்தடுத்த இரண்டு மாரடைப்புகளால் நேற்று (21 அக்டோபர் 2015) அதிகாலை பெங்களூரில் காலமானார். கலைமகளின் தவப்புதல்வர் புனிதமான சரஸ்வதி பூஜை நாளன்று மறைந்து விட்டார். கலை இலக்கிய விமர்சன பிதாகமர், மகத்தான சிந்தனையாளர். அரை நூற்றாண்டு காலம் தனது கூர்மையான எழுத்துக்களாலும் இடித்துரைகளாலும் தொடர்ந்து புதிய திறப்புகளை தமிழர்களாகிய நமக்கு அளித்து வந்து வழிகாட்டியவர் மறைந்து விட்டார்.... தமிழ்ஹிந்து இணையதளம் உருவான 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து வெ.சா அவர்களின் படைப்புகள் இதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இன்றைய தமிழ் நாடகச்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், வரலாறு, வழிகாட்டிகள்

ஆதிசங்கரர் படக்கதை — 3

ஆதிசங்கரர்  படக்கதை — 3

இளம் சங்கரனின் வேண்டுகோளுக்கு பூர்ணாநதித்தெய்வம் இணங்கினாள். மறுநாளே, பூர்ணாநதி தன் போக்கை மாற்றிக்கொண்டது. [மேலும்..»]

அஞ்சலி, ஆன்மிகம், வழிகாட்டிகள்

அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி

அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி

1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்... 2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை... [மேலும்..»]

ஆன்மிகம், சிறுவர், வழிகாட்டிகள்

ஆதிசங்கரர் படக்கதை — 2

ஆதிசங்கரர் படக்கதை  —  2

ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம் - பகுதி 2. [மேலும்..»]

ஆன்மிகம், சமூகம், வரலாறு, வழிகாட்டிகள்

பிள்ளை கட்டிய பிள்ளையார் கோவில்

பிள்ளை கட்டிய பிள்ளையார் கோவில்

உலக சுற்றுப்பயணம் முடித்த பிறகு நாகையில் இந்து மனிதாபிமான சங்கத்தை ஏற்படுத்தினார். ஊர்மக்கள் வேண்டுக்கோளுக்கிணங்க நாகை இந்து போதனா பள்ளியை கட்டிக் கொடுத்தார். சைவ சித்தாந்தியான இவரின் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான். தம் வீட்டிலேயே மூன்றாம் மாடியை விநாயகர் ஆலயமாக்கி அனுதினம் பூஜைகள் செய்து வந்தார். பர்மா வரும் ஏழை எளிய இந்தியர்கள் தங்க பார்க் தெருவில் ‘ரெஸ்ட் ஹவுஸ்’ என்கிற சத்திரத்தை நிறுவினார். இங்கு பர்மாவுக்கு வேலை தேடி வரும் ஏழை இந்தியர் எவரும் சாதி மத மொழி பாகுபாடின்றி இலவசமாக தங்கிக் கொள்ளலாம். 1912 இல் இவர் ஒரு கப்பலை வாங்கி வியாபாரத்தில்... [மேலும்..»]