சிறந்த இந்து சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டனின் சமீபத்திய மகத்தான பேருரை. உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள், குறிப்பாக முருகபக்தர்கள் அனைவரும் பார்த்து, கேட்டு, உள்வாங்க வேண்டிய அத்தனை முக்கியமான விஷயங்களும் இந்த ஒரு மணி நேர வீடியோவில் உள்ளன. “முப்பாட்டன் முருகன்” என்ற ரீதியிலான சமீபத்திய பொய்ப் பிரசாரங்களின் உண்மையான நோக்கத்தையும் சதித்திட்டத்தையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்…
View More முருகன் உண்மையில் யார்?Category: இந்து மத விளக்கங்கள்
திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 2026 ஏகாதசி உரைகள்
வந்தேமாதரத்துடன் நிகழ்ச்சி தொடங்கிற்று. ஜே.சி.குமரப்பாவின் நீடித்த பொருளாதாரம் குறித்து அறம் அறக்கட்டளையின் சிவக்குமார் பேசினார். அவரது உரை இதயத்திலிருந்து எழுந்த உரையாக இருந்தது.. அதன் பின்னர் விநாயகர் அகவல் குறித்து நான் பேசினேன். முந்தைய நாள் பள்ளி மாணவர்களுடனும், பின்னர் ஞாயிறு காலையில் சில ஜென் z இளைஞர்களுடனும் கலந்துரையாடல் செய்தோம். மாணவர்களில் ’முருகன் முப்பாட்டன்’ போன்ற கருத்தாக்கங்களின் செல்வாக்கை பார்க்க முடிந்தது, அதனை உரையாடலின் முடிவில் அவர்கள் மாற்றிக்கொண்ட போதிலும்.. கடவுள் நம்பிக்கை குறித்து பேச்சு வந்த போது…
View More திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 2026 ஏகாதசி உரைகள்சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை
சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள் அறிவற்றவர்கள் அல்ல. அவர்கள் எந்த அடிப்படையில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்?சனாதனத்தை காப்போம் என்று சொல்வோரும் எந்த சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவோம் என்று சொல்கிறார்கள்? இந்த இரண்டு தரப்பினருமே சொல்லாமல் விடுகிற விடயங்கள் என்னென்ன? இந்த அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகளின் தேடல் இந்த வீடியோ..
View More சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வைசக்தி தத்துவம் – ஜடாயு உரை
சக்தி வழிபாடு, தாயன்பு என்னும் அடிப்படை உணர்வு, பூமி, இயற்கை, பிரபஞ்சம், சிவசக்தி இணைவு – ஐக்கியம், பிரம்மம் – மாயை, மஹாமாயை, ஆற்றல்கள், காளி, லலிதா தேவி, சக்தியின் ரூபங்கள் ஆகிய ஆகிய விஷயங்கள் குறித்துப் பேசும் ஆழமான உரை இது. 2026 பிப்ரவரி 6 வெள்ளி மாலை கோயம்புத்தூர் ஶ்ரீ சாரதாம்பாள் கோயில் (ரேஸ் கோர்ஸ் சாலை ) அரங்கில் நிகழ்ந்த உரையின் வீடியோ பதிவு..
View More சக்தி தத்துவம் – ஜடாயு உரைஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்
மனதிற்கினியதும், வசீகரமானதும், ஆழமான தத்துவ உட்பொருள் கொண்டதுமான பிரம்ம மோகன லீலை ஶ்ரீமத்பாகவம் பத்தாவது ஸ்கந்தம் 13-14 அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. மாயத்தால் கண்ணனுடன் விளையாட பிரம்மா பின்பு தானே மாயச்சுழலில் சிக்கி திகைத்து நிற்பதும் இதில் வருகிறது. அதைப் பற்றியது ஜடாயுவின் இந்த உரை…
View More ஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்
இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…
View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?
போரிட்டு மாண்டு வீர சுவர்க்கம் புகுந்த வீரனின் நடுகல்லை உயர்வு நவிற்சியில் ஏற்றி வைத்துப் பாடியது இது. போர் வெற்றியைக் கூறும் வாகைத் திணையின் பேசுபொருளுக்குள் வைத்து இதனைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு பாட்டை வைத்துக் கொண்டு நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எந்த தெய்வ வழிபாட்டையும் தமிழர் ஏற்கவில்லை என்று கருத்துக் கூறுவதெல்லாம் அதீதம், அபத்தம். இதே புறநானூற்றில் மற்ற பல பாடல்களில் சிவன், திருமால், கொற்றவை, இந்திரன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்..
View More சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?யோகமும் போகமும்
இந்த நான்கு பாடல்களும் யோகம்-போகம் என்னும் இரு வாழ்க்கைக் கண்ணோட்டங்களின் முரணையும் இணைவையும் சமன்வயத்தையும் வெவ்வேறு விதங்களில் முன்வைக்கின்றன… ஞானி எப்போதும் பரமாத்ம பாவனையுடன் இருப்பதால், அவரது புறச்செயல்கள் அதன் இயல்பான போக்கில் அதற்கான லயத்தில் சென்று கொண்டிருக்கும், அது போகமோ, யோகமோ, கலையோ, கல்வியோ எதுவானாலும்…
View More யோகமும் போகமும்ஹடயோக பிரதீபிகை – தமிழில்
பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த முக்கியமான நூல் இன்றளவும் யோக பயிற்சிகளுக்கான முதன்மையான வழிகாட்டியாக திகழ்கிறது. சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னர், முனைவர் ம.ஜயராமன் அவர்களின் மொழியாக்கத்தில், தற்காலத் தமிழில், பிரம்மானந்தர் அவர்களின் ஜ்யோத்ஸனா உரையிலிருந்து அரிய பல குறிப்புகளுடன் இந்த நூல் இப்போது வெளிவந்திருக்கிறது. 15 ஆசனங்கள், 6 கிரியைகள் 8 விதமான பிராணாயாமங்கள், 10 முத்ரைகள், தியான வழிமுறையான நாதானுசந்தானம் ஆகிய பயிற்சிகள் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன….
View More ஹடயோக பிரதீபிகை – தமிழில்வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்
ஜம்புநாதன் செய்த பணியில் மகத்தானது, நான்கு வேதங்களையும் தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டதாகும். வேதம் எல்லோருக்கும் பொதுவானது. அவை தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என அவர் விரும்பினார்.. மும்பை, அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. ஆரிய சமாஜத்தில் ஆர்வம் பிறந்தது. சாலையோரச் சிறுவர்கள் படும் கஷ்டங்களையும், அங்கு வசிக்கும் தமிழர்கள் படும் அவலங்களையும் கண்டு ஜம்புநாதன் மிகவும் மனம் வருந்தி 1924ல் தாராவியில் ஒரு பள்ளியை அவர்களுக்காக ஏற்படுத்தினார்…
View More வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்