Articles in the சிறுவர் Category
Posted in சமூகம், சிறுவர், பொது on 3 October 2009
Stats: பார்வை: 560 and 4 Comments
அரசின் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் முதலில் தன்னிறைவு மனநிலை பெறவேண்டும். ஆசிரியப் பணியின் உன்னதத்தை அவர்கள் உணர வேண்டும். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெறும். இல்லையென்றால் இது வெறும் சமச்சீர் பாடத்திட்டமாக மட்டும் நின்று போய்விடும்.
Posted in இலக்கியம், கதைகள், கலைகள், சிறுவர், நிகழ்வுகள் on 26 August 2009
Stats: பார்வை: 755 and 10 Comments
பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம் பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், ‘பத்மபூஷன்’ கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு ‘பால சரஸ்வதி’ பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் ‘யுவகலா பாரதி’ பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான ‘எம்ஜியார் விருது’ வழங்கியுள்ளது.
Posted in இலக்கியம், சிறுவர், மகளிர், வைணவம் on 28 July 2009
Stats: பார்வை: 395 and 5 Comments
… யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் ….
Posted in இலக்கியம், சிறுவர், ராமாயணம், வைணவம் on 1 July 2008
Stats: பார்வை: 495 and 3 Comments
சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம்.
அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்….
Posted in சிறுவர், ராமாயணம் on 20 June 2008
Stats: பார்வை: 429 and No Comments
இன்னும் அநேக முக்கியமான தலங்கள் உள்ளன. அவற்றுள் மிக மிக முக்கியமான நகரமான அயோத்தியில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். சீதா, ராம, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேதராய் பட்டாபிஷேகம் செய்துகொண்டதும் அயோத்தி மாநகரத்தில்தான் நிகழ்ந்தது. ராமராஜ்யம் மிக உயர்வாகத் திகழ்ந்தது. அதற்கு முன் ராஜ்யம் நடத்திய தசரதர் போன்றவர்களும் ராஜ்ய பரிபாலனம் நன்றாகவே செய்து வந்தார்கள். அயோத்தியில் வீடுகளுக்குக் கதவுகளே கிடையாதாம். கதவு இருந்தாலும் யாரும் அதைப் பூட்ட மாட்டார்களாம். தானம் கொடுக்கவே முடியாதாம். ஏனென்றால் வாங்கிக்கொள்ள வறியவர்களே கிடையாதாம். அப்படிப்பட்ட செழிப்பான பூமி. எல்லா மன்னர்களும் செங்கோல் ஆட்சி புரிந்து வந்திருக்கிறார்கள்…
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்