சிறுவர்

கதைகள், சிறுவர், வழிகாட்டிகள்

ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம். இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர்... ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்... அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம். [மேலும்..»]

அரசியல், சமூகம், சிறுவர்

கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!

கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!

காங்கிரசும் கழகமும் இயற்கையான அணி போலும். அதிலும் கபில் சிபல் ஊழலில் ஒரு "கலைஞர்". கபில் சிபல் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை நீக்கி சீர்திருத்தம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார். தேர்வு எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களைவிட தேர்வைப் புறந்தள்ளிய மாணவர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள். கலைஞர் உத்தி போல் தெரியவில்லை? என்னே புரட்சி! கோடிகளைக் குவிக்கச் செய்யும் மோசடியின் முகப்பூச்சு இந்தப் பள்ளிக் கல்விச் சீர்திருத்தம். [மேலும்..»]

சமூகம், சிறுவர், பொது

தேவை: சமச்சீர் வசதிகள்

தேவை: சமச்சீர் வசதிகள்

அரசின் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் முதலில் தன்னிறைவு மனநிலை பெறவேண்டும். ஆசிரியப் பணியின் உன்னதத்தை அவர்கள் உணர வேண்டும். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெறும். இல்லையென்றால் இது வெறும் சமச்சீர் பாடத்திட்டமாக மட்டும் நின்று போய்விடும். [மேலும்..»]

இலக்கியம், கதைகள், கலைகள், சிறுவர், நிகழ்வுகள்

பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம் பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், 'பத்மபூஷன்' கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு 'பால சரஸ்வதி' பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் 'யுவகலா பாரதி' பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான 'எம்ஜியார் விருது' வழங்கியுள்ளது. [மேலும்..»]

இலக்கியம், சிறுவர், மகளிர், வைணவம்

தீராத விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை

... யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் .... [மேலும்..»]

இலக்கியம், சிறுவர், ராமாயணம், வைணவம்

பாலராமாயணம் – 2

பாலராமாயணம் – 2

சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம். அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்.... [மேலும்..»]

சிறுவர், ராமாயணம்

பாலராமாயணம்

பாலராமாயணம்

இன்னும் அநேக முக்கியமான தலங்கள் உள்ளன. அவற்றுள் மிக மிக முக்கியமான நகரமான அயோத்தியில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். சீதா, ராம, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேதராய் பட்டாபிஷேகம் செய்துகொண்டதும் அயோத்தி மாநகரத்தில்தான் நிகழ்ந்தது. ராமராஜ்யம் மிக உயர்வாகத் திகழ்ந்தது. அதற்கு முன் ராஜ்யம் நடத்திய தசரதர் போன்றவர்களும் ராஜ்ய பரிபாலனம் நன்றாகவே செய்து வந்தார்கள். அயோத்தியில் வீடுகளுக்குக் கதவுகளே கிடையாதாம். கதவு இருந்தாலும் யாரும் அதைப் பூட்ட மாட்டார்களாம். தானம் கொடுக்கவே முடியாதாம். ஏனென்றால் வாங்கிக்கொள்ள வறியவர்களே கிடையாதாம். அப்படிப்பட்ட செழிப்பான பூமி. எல்லா மன்னர்களும் செங்கோல் ஆட்சி புரிந்து வந்திருக்கிறார்கள்... [மேலும்..»]