இலக்கியம்

இலக்கியம்

குழவி மருங்கினும் கிழவதாகும் – 3

குழவி மருங்கினும் கிழவதாகும் – 3

..உறங்கும் நேரம் கழிந்தும் கண் விழித்திருக்கும் குழந்தையிடம் தாய் அவனை உறங்கச் செய்யத் தான் அவனுக்குச் செய்த சீராட்டுக்களையெல்லாம் வரிசையாகக் கூறி, உரிய நேரத்தில் உறங்குவாய் என்ற எதிர்பார்ப்பில் இவற்றைநான் செய்து முடித்தேன், ஆனால் நீ இன்னும் உறக்கம் கொள்ளாமல் மழலை பேசிக்கொண்டு விழித்துக் கிடக்கின்றாயே எனப் பாசம் கலந்த சலிப்புடன் பேசுகின்றாள்...

மேலும் »

இலக்கியம்

குழவி மருங்கினும் கிழவதாகும் -2

குழவி மருங்கினும் கிழவதாகும் -2

செங்கீரைப் பருவம்... தவழ்ந்த குழந்தை எழுந்து இருகைகளையும் ஊன்றிக்கொண்டு உட்காரத் தொடங்கும். தவழும்போதும் இருமுழங்கால்களையும் இருகரங்களையும் ஊன்றித் தலையை இருமருங்கும் ஆட்டும். வாயில் எச்சில் ஒழுக இனிய ஒலியெழுப்பத் தொடங்கும். தன்னுடைய தாய் எப்படியெல்லாம் தலையசைத்துப் பேசுகின்றாளோ அதைப்போல அதுவும் தலையை அசைத்து ஏதோ ஒலியை எழுப்ப முயற்சியைச் செய்யும். போலச் செய்தல் குழந்தையின் இயல்பு... இவ்வாறு தாம் பெற்ற குழந்தைகளுடன் உரையாடி மகிழ்தலையே தெய்வானுபவமாக மடைமாற்றம் செய்துகொள்ளும் வித்தகத்தினைப் பிள்ளைத்தமிழ் நூல்கள் கற்பிக்கின்றன...

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், வைணவம்

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2

தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை, இரண்டு கை போதாது அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பானாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்கல வாழ்த்துரை செய்து திருப்பாவையை முடிக்கிறாள் ஆண்டாள்.

மேலும் »

இலக்கியம், கவிதை

குழவி மருங்கினும் கிழவதாகும்

குழவி மருங்கினும் கிழவதாகும்

திருமால் தம் மார்பில் காடுபோல் துழாய்மாலையை அணிந்துள்ளார். அதிலிருந்து வழியும் தேன் வெள்ளம் பாய்தலால் வழியெல்லாம் சேறாய் கழனிபோலாக,. அத்தகைய சேறான வழியில், கமலத்தணங்காகிய திருமகளின் கை தன் கையாகிய அணையை முகந்து செல்ல ( திருமால் தம் கையை அணையாகக் கொண்டுதான் பள்ளி கொள்கிறார். அதனால் அது தலையணை போல் கையணை ஆயிற்று. திருமாலின் கைக்குள் திருமகள் தன் கையை நுழைத்துத் தழுவிச் செல்வதால் அது முகந்து செல்வதாயிற்று) காதலர்கள் கைகோத்துதுச் செல்வதை மனக் கண்ணில் காண்க...

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், வைணவம்

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1

ஆண்டாள் இயல்பாகவே பெண்ணாக இருப்பதால், இறைவனைத் தன் காதலனாக எண்ணி அவனை காதலனாக நினைத்து கசிந்து உருகி பக்தி செய்ய முடிந்தது. இதைக் கண்ட மற்ற ஆழ்வார்களெல்லாம், எவ்வளவு எளிதாக பக்தி செய்து இச்சிறுபெண் கண்ணனை அடைந்து விட்டாள்! பெண்ணாக இருந்தால் இறைவனை எளிதாக அடைந்து விடக் கூடுமோ என்று எண்ணி ஆண்டாளை உதாரணமாகக் கொண்டு அவர்களும் பெண் பாவனையில் கண்ணனைக் காதலித்தல், ஊடல் கொள்ளுதல், பிரிந்து வருந்துதல், தூது விடுதல், மடலூர்தல் என்று விதவிதமாக நாயகி பாவத்தில் கண்ணனை பக்தி செய்து அனுபவித்தனர் போலும்

மேலும் »

இலக்கியம், கம்பராமாயணம்

படிவங்கள் எப்படியோ?

January 3, 2012
-
படிவங்கள் எப்படியோ?

வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்... இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்... ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்... "பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்..."

மேலும் »

இலக்கியம், கவிதை, புத்தக விமர்சனம்

இரு வேறு நகரங்களின் கதை

இரு வேறு நகரங்களின் கதை

புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்....

மேலும் »

கதைகள்

ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]

ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]

"..இதோ இந்த பொம்மைக்காரர் இருக்கிறாரே, இவரே பாரத மாதாவின் செல்வம்தான். இவர் போல இன்னும் எத்தனை எத்தனையோ ஐசுவரியங்கள் பாரதத் தாய்க்கு. விதவிதமான செல்வங்கள்! அதெப்படி ஏழையாகிவிடுவாள்? கங்கையையும் காவிரியையும் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போய்விட்டார்களா? பொன் விளைகிற பூமியையும் அப்படி விளைவிக்கிற கைகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? கலைகளயும் காவியங்களையும் அவற்றைப் படைக்கிறவர்களையும் கடத்திக்கொண்டா போய்விட்டார்கள்? மெய்ஞான, விஞ்ஞான மகிமைகளைப் பறித்துக் கொண்டார்களா? ..."

மேலும் »

இலக்கியம், வரலாறு

ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

November 17, 2011
-
ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! என்ற கட்டுரையை தினமணியில் பால.கௌதமன் எழுதினார்.. அதற்கு வந்தது திராவிட இயக்க எதிர்வினை.. ஆயுதங்களில் தேவதை குடியிருப்பதாகக் கருதுவது தமிழர் மரபு. சிலப்பதிகாரம் வேட்டுவவரியில், ’வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு... மகாநவமி, விஜயதசமி விழா 5-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது...

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், சைவம்

வள்ளிச் சன்மார்க்கம்

வள்ளிச் சன்மார்க்கம்

முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விளக்கும் திருப்புகழ் பாடல்களில் சிருங்கார ரசம் கொப்பளித்துப் பொங்குகின்றது... நற்பண்புகளையுடைய தம்பதியரிடையே அமைந்த நற்காமம் பத்தியாக, சிவ- சக்தி ஐக்கிய அனுபவமாக அமையும்...அவரவர்க்கு உகந்த மார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகி இறையருளைப் பெற வைதிகம்,இந்து தருமம் அனுமதிக்கின்றது... கந்த சஷ்டி விரதத்தை வள்ளி திருக்கலியாண மகோற்சவமாகக் கொண்டாடி..

மேலும் »