கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 11-15. கோசல நாட்டு வர்ணனை.
கரிய நிறத்ததான கடல் அலைகளில் (கூட) சரயு நதியில் பெருகிவரும் புதிய நீரில் முங்கிக் குளிக்கும் பெண்கள் சூடியிருக்கும் பூவும், பூசியிருக்கும் கஸ்தூரியும் கலந்து அந்த மணமே வீசுகிறது என்றால், தேன்போன்ற இனிமையான மழலைச் சொல் பேசுவதும் (கொஞ்சிப் பேசுவதும்); கூர்மை மிகுந்த கடைக்கண் பார்வையை வீசுவதுமாக, அங்கே (கரைகளில்) நிற்கும் இளைஞர்கள் விருப்பத்துடன் (மனமார்ந்த காதலுடன்) பார்த்தபடி நிற்கும் (நீராடும்) பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? [மேலும்..»]