இலக்கியம்

ஆன்மிகம், இலக்கியம், சமூகம், விவாதம்

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது.. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், மகளிர்

காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன.தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை. வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும், ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது... பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது? "அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், தத்துவம்

பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்

பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்

புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது... கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்... எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு... [மேலும்..»]

அறிவியல், ஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், சைவம், தத்துவம், வழிகாட்டிகள்

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை ’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும். பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார். [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், விவாதம், வைணவம்

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

January 9, 2018
-
ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்... ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?...... [மேலும்..»]

கல்வி, சமூகம், சிறுவர், நாடகம், வழிகாட்டிகள்

திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்... இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்... பூவுக்கு முள் முரண்...நீருக்கு நெருப்பு முரண்... இரவுக்குப் பகல் முரண்... சூரியனுக்கு நிலவு முரண்... உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது... அதுபோலவே முரண்களாலும் ஆனது... அறங்கள் முரண்படவில்லை... இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், கவிதை, சைவம்

தூற்றிப் போற்றினரே! -2

தூற்றிப் போற்றினரே! -2

"பலாப்பழத்தை நாடும் ஈபோல, மான்போலும் பார்வையுடைய மாதரின் சிற்றின்பத்தை நான் நாடுகிறேன். அதன் காரணமாக நீ என்னைப் புறக்கணித்து விடாதே ஈசா!             "அவ்வாறு கைவிட்டால் நான் உன்னை எவ்வாறெல்லாம் பழித்துரைப்பேன் தெரியுமா? நீ கடல் நஞ்சினை உண்டவன்; மழைமேகம் போலக் கறுத்த கண்டமுடையவன்; நல்லகுணம் இல்லாதவன் (குணம் இலி); என்னைப்போலும் மானிடன்; அறிவு குறைந்தவன் (தேய் மதியன்); வயதில் முதிர்ந்த பரதேசி என இவ்வாறெல்லாம் பழித்துப் பேசுவேன்," [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், கவிதை, சைவம், தொடர்

தூற்றிப் போற்றினரே! — 1

தூற்றிப் போற்றினரே! — 1

மூன்று பெண்கள் மூன்று அம்மானைக்காய்களைக் கொண்டு விளையாடும்போது, அதன் வேகத்திற்குப் பொருத்தமாகப் பாடல்களையும் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி!! [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், கோயில்கள், சைவம், பண்டிகைகள்

சுப்பிரமணிய புஜங்கம்

சுப்பிரமணிய புஜங்கம்

என் சந்நிதிக்கு வந்து யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் தீவினைகள் கடலலைகள் அழிதல்போல் அழிந்துபடும். ஆகவே என்முன் வாருங்கள்,’ என உணர்த்துவது போலத் திருச்செந்தூர்க் கடலலைகள் வந்துவந்தழியும். அந்தச் சீரலைவாய்க் குமரனை என் மனதில் வைத்து தியானிக்கிறேன்.... உயிர்மங்கும்பொழுதில் உனது தாள்களை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன். ஓ செந்திலாய் எனக்கூறவும் இயலாதவனாகி விடுவேன். கைகளைக் குவிக்க இயலாது. அப்போது நீ என்னைக் கைவிடலாகாது. இப்போதே நான் உனக்கு அடைக்கலம் என்று கூறிக்கொள்கிறேன்... [மேலும்..»]

இந்து மத மேன்மை, இலக்கியம், பொது, வழிகாட்டிகள்

பாரதமாதாவைப் பாடிய தமிழறிஞர்கள்

பாரதமாதாவைப் பாடிய தமிழறிஞர்கள்

பாரத அன்னையை ‘உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்’ என பாடியிருக்கிறார் மறைமலையடிகள். அவரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழன் என்று சொல்லிவிட்டது. பார்ப்பன பாசிசம் :) ... பாரத நாட்டைப் பாடுவமே - பரமா னந்தங் கூடுவமே - முனிவர்கள் தேசம் பாரதமே - முழங்கும் வீரர் மாரதமே - பாரத தேசம் பேரின்பம் - பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் - வந்தே மாதர மந்திரமே - வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே... வந்தே மாதரத்தையும் மதத்தையும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட ஆரிய அடிவருடி தெலுங்கர்தான் திருவிக.... [மேலும்..»]